உங்களிலிருக்கிறவர் Jeffersonville, Indiana, USA 63-1110E 1நன்றி. சகோ. நெவில் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் சற்று நேரம் நின்ற வண்ணமாக ஜெபம் செய்வோம். இப்பொழுது நாம் தலை வணங்குவோம். ஜெபத்தில் நினைவு கூர வேண்டுமென்று விரும்புவோர் உங்கள் கரங்களையுயர்த்தி, ''ஆண்டவரே, இது நான் என்று கூறுங்கள்.'' 2மிகப் பரிசுத்தமும் கிருபையுமுள்ள தேவனே, இம் மக்களை அவர்களுடைய விண்ணப்பங்களுடன் உமது சந்நிதானத்தில் கொண்டு வருகின்றோம். அவர்கள் நினைவு கூரப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர். ஆண்டவரே, என் கரமும் உயர்த்தப்பட்டுள்ளது. எங்கள் மீது இரக்கமாயிருக்க வேண்டுமென ஜெபிக்கிறேன். எங்கள் தேவைகளை நீர் அறிந்திருக்கிறீர். எங்களுக்கு நீர் கற்பித்த விதமாக, ''உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக“ என்று வேண்டிக் கொள்கிறோம். பிதாவே, இரக்கத்திற்காகவும், ஆவியின் விடுதலைக்காகவும் இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம், சுவிசேஷ சத்தியத்தையும், இக்காலத்திற்கென உம் சபைக்கு அளிக்கப்பட்டுள்ள செய்தியென்று நாங்கள் விசுவாசிக்கும் சத்தியத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல எங்களுக்கு கிருபையளியும். கடைசி நாளில் அழைக்கப்படவிருக்கும் சபையின் ஒரு பாகம் நாங்கள் என்று விசுவாசிக்கிறாம். அதன் பாகமாக நாங்கள் இல்லையென்றால், அவ்விதம் ஆவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு வெளிப்படுத்தித் தாரும். பூமியின் மேல் வாழ்ந்து கொண்டிருப்போரை சோதிக்கும் படியான இச்சோதனை நேரத்தில் எங்களுக்கு கிருபையும் வல்லமையும் அருளும். எங்களை வழி நடத்த உம்முடைய பரிசுத்த ஆவியை எங்களுக்குத் தந்தருளும். முடிவில் உலகத் தோற்ற முதல் எல்லா விசுவாசிகளும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நித்திய ஜீவனை நாங்கள் பெற்று, சமாதானத்துடன் உம் சந்நிதானத்தையடைய எங்களுக்குத் துணை புரியும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் உட்காரலாம்). 3இன்றிரவு இங்கு நான் இருப்பதற்காகவும், இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு அருளப்பட்டிருக்கும் தேவ கிருபைக்காகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இன்று காலையில் நான் அளித்த செய்தி... நீங்கள் ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இது அந்த நேரமல்ல என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? ஆனால் செய்தி உண்மையாயிருக்கிறது. இது அந்த நேரமாயிராவிடில், எப்பொழுதாவது அந்த நேரம் வரும். இது அந்த நேரம் போல் இருப்பதனால், பவுலைப் போன்று நானும், “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல் எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்'' (அப். 20:26) என்று நான் உணருகிறேன். 4இன்று காலையில் நான் ஒரு காரியத்தைச் செய்துவிட்டேன். அதற்காக நான் வருந்துகிறேன். சகோதரன் ஒருவர் பெயரை நான் கூறினேன். அது தவரென்று எண்ணுகின்றேன். நான் அப்படி செய்திருக்கக் கூடாது. நான் யாருடைய பெயரையும் குற்றப்படுத்தி அறிவிப்பதில்லை. இந்த ஒலிநாடா அவர் கையில் கிடைத்தால், நான் அவரைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன். ஏனெனில் அந்த சகோதரன் பெரியவர். நல்லவர். அவர் இந்த பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கம் செய்திருக்கிறார். அவர்தான் சகோதரன் டேவிட் டூப்ளெசிஸ் (Brother David DuPlessis). அவர் பெயரைக் குறிப்பிட வேண்டுமென்று நான் சற்றேனும் கருதவில்லை. நான் செய்தியைக் குறித்து கவலை கொண்டவனாய், “ஒருக்கால் இதுதான் அந்த நேரமா?'' என்று வியந்ததால், அவர் பெயரைக் குறிப்பிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. நான் வழக்கமாக அவ்விதம் செய்வது கிடையாது. அதற்காக நான் வருந்துகிறேன். அத்தகைய அறிவுள்ள ஒருவர், வேதத்தைக் குறித்து இன்னும் அதிகமாகப் போதிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன். அதை உங்களிடம் விளக்கமாகக் கூற விரும்புகிறேன்... எனக்கும் டேவிட்டுக்கும் இடையே நேர்ந்த உரையாடல். 5ஒருமுறை எனக்குப் பதிலாக அவர் கூட்டங்களில் பிரசங்கம் செய்திருக்கிறார். இந்த பிரசங்கப் பீடத்திலிருந்து அவர் பிரசங்கம் நிகழ்த்தியிருக்கிறார். அவருடைய சகோதரன் ஜஸ்டஸ் (Justus) என்பவர் தென்ஆப்பிரிக்காவில் என் பிரசங்கங்களை மொழி பெயர்ப்பவர். நான் மறுபடியும் அங்கு செல்லப் போகின்றேன். அவர்கள் ஒரு அருமையான பெந்தெகொஸ்தே குடும்பத்தினர். டேவிட் மிகவும் அருமையானவர். உலக பெந்தெகொஸ்தே மகாநாட்டில் அவர் ஒருமுறை தலைமை தாங்கினார். உலக பெந்தெகொஸ்தே சபைகளுக்கு அவர் தலைவராயிருந்தார். அநேக தலைவர்களில் அவரும் ஒருவர். பின்பு அவர் அமெரிக்காவில் குடியேறி, சகோதரன் கார்டன் லின்ட்சே (Brother Gordon Lindsay)வுடன் டெக்ஸாஸில் தங்கி, அநேக இடங்களுக்குச் சென்று பிரசங்கம் செய்து வந்தார். 6நமது அருமை சகோதரன் இங்குதான் தவறு செய்துவிட்டார் என்று நினைக்கிறேன். நாம் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்கள். அவர் மேன்மையான காரியங்களிலேயே ஈடுபடத் தொடங்கினார். அவர் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைக் குறித்தும், மற்றும் அவருக்கு அழைப்பு விடுத்த அநேக இடங்களைக் குறித்தும் மேன்மையாகப் பேசத் தொடங்கி, அவர் சரியான காரியத்தைச் செய்வதாக எண்ணியிருந்தார். பாருங்கள்? அதில் அவருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. அதுமாத்திரமல்ல. என் கூட்டங்களை உலகம் பூராவும் ஒழுங்கு செய்யும் முழு சுவிசேஷ வர்த்தகர் சங்கம், அவர்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். ஆனால் அவர்கள் கடைப்பிடிக்கும் கோட்பாடுகளை நான் ஆமோதிப்பதில்லை. அவர்கள் ஏற்கனவே கைக் கொண்டிருந்த கொள்கைகளை கைவிட்டு, ஏனைய ஸ்தாபனங்களைப் போலாகிவிட்டனர். பாருங்கள். அவர்கள் பெந்தெகொஸ்தே கொள்கைகளில் நிலைத்திராமல், மற்றவைகளை அதனுடன் கலக்க முயல்கின்றனர். 7அந்த அருமையான சகோதரன் டூப்ளெசிஸ் உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகள் எண்ணெய் வாங்கச் செல்வதை அவர் காணும்போது, சமயம் கடந்துவிட்டது என்று அறிந்து கொள்ளும் அளவிற்கு அவருக்குப் போதிய வேத அறிவு இருந்திருக்க வேண்டும் என்னும் கருத்தை நான் கொண்டிருக்கிறேன். பாருங்கள்? அந்த புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்கச் சென்றபோது, எண்ணெய் தீர்ந்துவிட்டது. அப்படித்தான் வேதம் கூறுகின்றது. அவர்கள் புத்தியுள்ள கன்னிகைகளை (சபையை) நோக்கி, ''உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள்'' (மத். 25:8) என்றனர். (சகோ. பிரான்ஹாம் பீடத்தை நான்கு முறை தட்டுகிறார் - பதிப்பாசிரியர்). ஆனால் அவர்கள் எண்ணெயைப் பெறவில்லை. அவள் எவ்வளவுதான் மேலும் கீழும் குதித்தாலும், அன்னிய பாஷை பேசினாலும், வேறென்ன செய்தாலும் அவள் அதைப் பெறவில்லையென்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. பாருங்கள்? அவள் புறம்பான இருளில் போடப்பட்டாள். அங்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியோ அச்சமயம் உள்ளே சென்றுவிட்டாள், புத்தியுள்ள கன்னிகைகளின் தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது. 8அது போன்ற வேறொரு மனிதனை அறிவேன். அன்றொரு நாள் ஒரு காரியம் சம்பவித்தது. இந்த அருமையான மக்கள் சற்று, நான் கூறுவதென்னவென்று உங்களுக்குப் புரியும். ஜனங்களிடையே சற்று கீர்த்தி பெறுகின்றனர். அது தேவனுடைய கிரியையென்று அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் அநேக சமயங்களில் அது பிசாசின் கிரியையாயுள்ளது. பாருங்கள்? ஏரோதின் முன்னிலையில் வரும் தருணம் இயேசுவுக்கு உண்டாயிருந்தது. அநேகர் முன்னிலையில், வித்தை காட்டுபவராக அவரை உபயோகிக்க அவர்கள் எண்ணினர். பாருங்கள்? இன்றைக்கு பெந்தெகொஸ்தேயினரையும் அவ்வாறே உபயோகிக்க அவர்கள் விரும்புகின்றனர். பெந்தெகொஸ்தேயினர் அத்தகைய காரியங்களிலிருந்து வெளிவந்து வித்தியாசமாயிருந்தனர். ஆனால், “நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது” (2 பேதுரு. 2:22) என்ற விதமாய் அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்று, உலக சபை ஆலோசனை சங்கத்தில் (Ecumenical Council) சேர்ந்துவிட்டனர். அது மிகவும் மோசமான செயல், அவமானம். 9ஆண்டவரே, நான் சிறியவனாகவும், தாழ்மையுள்ளவனாகவும் இருக்கும்படி செய்யும், அப்பொழுதுதான் அவர் சத்தியத்தை வெளிப்படுத்தித் தருவார், பாருங்கள்? அவ்வாறான பகட்டான காரியங்களைச் செய்ய எனக்கு விருப்பமில்லை. பிரகாசமான விளக்குகள், இவ்வவுலகின் பகட்டான காரியங்கள் ஒன்றும் எனக்கு வேண்டாம். நிந்தையடைந்த ஆண்டவருடைய சிலருடன், நானும் அவ்வழியே செல்ல விரும்புகிறேன், தேவனுடைய வார்த்தையில் நான் நிலைத்திருக்கட்டும். 10உலக சபை ஆலோசனை சங்கம் வாடிகனுடன் (Vatican) இணைந்து பலமடைகின்றது. அவர்கள் தேவனுடைய வார்த்தையுடன் இணைந்து பெலப்படுவார்கள் என்று நினைக்கின்றீர்களா? ஸ்தாபனம் என்னும் முறையில்அவர்கள் வலிமை கொண்டிருக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தையின் பேரில் அவர்கள் பெலப்படுவதில்லை. பாருங்கள்? அது உண்மை. எனவே அவர்கள் ஒப்புரவாவதற்கு இனி ஒன்றுமேயில்லை. பாருங்கள்? அது ஒரு ஸ்தாபனம். அவை யாவும் ஒன்றாகிவிட்டன. எல்லாமே ஒன்றாகிவிட்டன. தாயும் மகளும் பரிபூரணமாக பொருந்திவிட்டனர். நான் கத்தோலிக்க கொள்கைகளுக்கு எவ்வளவு விரோதமாயுள்ளேனோ, அவ்வளவு விரோதமாய் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் ஆகியோரின் கோட்பாடுகளுக்கும் இருக்கிறேன். ஏனெனில் தேவனுடைய வார்த்தை கூறுவது போன்று, அவர்கள் தாயும் மகளுமாவர். இந்த தேவனுடைய வார்த்தையின் பேரில் மாத்திரமே நான் நிற்கிறேன், இந்த ஒவ்வொரு வார்த்தையின் பேரிலும். 11இந்த அருமை சகோதரனும் அவர் மனைவியும் என் நெருங்கிய நண்பர்கள். அந்த பத்திரிகையை அநேகர் பார்த்திருப்பீர்கள். தேவனால் அனுப்பப்பட்ட அந்த சகோதரன் எவ்வாறு தன் மனைவியை அனுமதித்தார். யாரோ ஒருவர் அந்த அம்மாள் ஜாக்குலின் கென்னடியைப் போன்று (முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் கென்னடியின் மனைவி - தமிழாக்கியோன்) இருப்பதாகக் கூறினாராம். அவர்கள் உடனே தன் தலைமயிரை அலங்காரமாகக் கத்தரித்துக் கொண்டுவிட்டார்கள். அது என்ன? அத்தகைய மக்களுடன் அவர்கள் எல்லா சமயங்களிலும் தொடர்பு கொண்டு முடிவில்... ஒரு நல்ல மனிதன் ஒரு கெட்ட ஸ்திரீயை விவாகம் செய்தால் அவள் நல்லவளாக மாறலாம். அல்லது அந்த மனிதன் கெட்டவனாக மாறக்கூடும். ''உன் சகாக்கள் யாரென்று சொல். அப்பொழுது நீ யாரென்று கூறிவிடுவேன்“ என்னும் ஒரு பழமொழி உண்டு. பாருங்கள்? ”ஒரே வித சிறகு கொண்ட பறவைகள் ஒன்றாகவே கூடியிருக்கும். அத்தகையான பளபளப்பான காரியங்களிலிருந்து விலகியிருங்கள். 12அன்றொரு நாள் அரிசோனா - மெக்ஸிகோ வரிசையிலுள்ள மலைத்தொடர்களின் உச்சியில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தின் அடியில் சென்றிருந்தேன். சகோ. சாத்மனும் என்னுடனிந்தார். பார்வைக்குத் தங்கம் போல் உள்ள ஒன்றை அந்த சுரங்கத்தில் தோண்டியெடுத்தேன். அது தங்கம் அல்ல என்று எவ்விதம் அறிந்தோமென்றால், அது தங்கத்தைக் காட்டிலும் பளபளப்பாயிருந்தது. தங்கம் பளபளப்பாய் இராது; அது மினுக்கும் (glows). பாருங்கள்? எனவே நாங்கள் தோண்டியெடுத்தது 'முட்டாளின் தங்கம்' (Fool's gold) என்றழைக்கப்படும் கனிமப் பொருளாகும். அதை உள்ளடக்கியிருக்கும் பாறையின் விலை மதிப்பும் கூட அதற்கில்லை. அது 'இரும்பு பைரைட்' (Iron pyrite) எனப்படும் கனிமப் பொருள். அமிலமும் தண்ணீரும் போதிய அளவிற்கு அங்கு ஊடுருவிச் செல்லாததனால், அது கடினப்பட்டு தங்கமாக மாறவில்லையென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் காண்பதற்கு அது தங்கத்தைக் காட்டிலும் பளபளப்பாயுள்ளது. இருப்பினும், தங்கத்திலுள்ள இரசாயனப் பொருட்கள் அதில் இல்லை. அது போன்றே இன்றைக்கு அநேக பாவனை கிறிஸ்தவர்கள் உள்ளனர். ஹாலிவுட்டைப் போன்று அவர்கள் பளபளப்பாயிருக்கின்றனர். ஆனால் சபையோ சுவிசேஷத்தைக் கொண்டதாய், தங்கத்தைப் போன்று மினுமினுப்பாயுள்ளது. பாருங்கள்? 13இங்குள்ள சகோதரி ஒருவர் ஃலைப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த அந்த ஏழு தூதர்களின் புகைப்படத்தை பெரியதாக்கி, எனக்கு அன்பாக அனுப்பியுள்ளார்கள். இப்பொழுது பில்லி (Billy) அதை எனக்குக் காண்பித்தான். கூர்ந்து கவனிப்பீர்களானால், தேவ தூதர்கள் செய்தி கொண்டு வந்த பின்பு, அது மேலே எழுந்து செல்லும்போது, அது கூர்நுனிக் கோபுர வடிவில் இருப்பதைக் காணலாம். இது நிகழும் மூன்று மாதங்களுக்கு முன்பே அது எவ்விதமிருக்கும் என்று நான் முன்னுரைத்தபடியே அது அமைந்துள்ளது, நான் கூறுவது சரியா? அதில் பிரத்தியேகமாக காட்சியளிக்கும் தூதன் - அவனுடைய செட்டைகள் பின் நோக்கியுள்ளன, அவனை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அவன், அவனுடைய தலை... அவன் பேச வந்தான், அந்த செட்டைகளையும் கூட உங்களால் இந்தப் புகைப்படத்தில் காண முடிகிறதல்லவா? அந்த தூதன் அங்கே இருக்கிறான், அது முன்னுரைத்தபடியே உள்ளது. 14தேவன் மாத்திரமே அவ்விதம் செய்யமுடியும், இங்கு ஒரு ஸ்திரீயின் புகைப்படம் வேறு உண்டு. பலமுறை அநேகர் கூறுகின்றனர்... பகுத்தறியும் வரம் கொண்டு, “இந்த அம்மாள் மரணத்தினால் நிழலிடப்பட்டிருகிறார்கள்'' என்றேன், ஒரு கறுத்த நிழல், ''அவர் அதை யதேச்சையாகக் கூறினார்“ என்று அவர்கள் சொல்கின்றனர், அதைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் முன்னேறவில்லை. ஆகவே அவர்களால் அதைக் காண முடியவில்லை, அவர்கள் உங்களுடன் சேர்ந்து கூச்சலிடலாம். உங்களுடன் பேசலாம், ஆனால், தங்கள் ஆத்துமத்திலும் சரீரத்திலும் அவர்கள் முழுதும் விசுவாசிக்க வேண்டுமெனும் நிலையையடையும் போது, அவர்களால் முடிவதில்லை, ஆனால், தேவன் அதிலிருந்து கொண்டு உண்மையை உரைக்கிறார் என்பதை உங்களால் காண முடிகிறது. இதுவே வரலாற்றின் கடைசி கட்டமாயுள்ளது, இதுவே உலக வரலாற்றின் முடிவு காலம். என்றாவது ஒரு நாள், இனி காலம் என்பது ஒன்றிராது என்னும் நிலை வரப் போகின்றது, தேவன் அதை ஆவிக்குரிய பிரகாரமாகவும், விஞ்ஞானப் பிரகாரமாகவும் ஊர்ஜிதப்படுத்தி வருகிறார். நான் சிறு பையனாயிருந்தபோது, அந்த அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டு, “அது நட்சத்திரத்தைப் போல் இருக்கின்றது'' என்றேன். 15உங்களில் எத்தனை பேர், பழைய காலத்தவர், அது ''நட்சத்திரம்'' என்று அழைக்கப்பட்டதை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்? அது நதியின் கரையில் பிரத்தியட்சமாகி, அவர், “யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போன்று...'' என்று கூறினபோது... இப்பொழுது அது கீழே இறங்கி வந்து, அதன் புகைப்படமும் எடுக்கப்பட்டுவிட்டது. அந்தப் புகைப்படம் முன்பு இங்கிருப்பது வழக்கம். ஆம், அது அந்த மூலையில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். என் கண்ணுக்கு அது தெரியவில்லை. அது உண்மையென விஞ்ஞான ரீதியாய் நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஜனங்கள் 'நிழலிடப்பட்டதாய்' கூறினேன், இங்கு அந்த ஸ்திரீயின் புகைப்படம் உள்ளது. புகைப்படக் கருவியால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் போன்றே அதுவும் இருக்கின்றது, (அதைப் பார்த்து விட்டு ஒருவர் வியப்படைந்தார்), நான் அந்த ஸ்திரீயிடம், ''நீ புற்று நோயின் காரணமாக மரணத்தால் நிழலிடப்பட்டிருக்கிறாய், அங்கு கறுத்த நிழல் காணப்படுகிறது'' என்றேன். ஒரு பெண் அப்பொழுது புகைப்படம் எடுத்தாள், சுகம் பெற்ற ஸ்திரீ இங்கு சாட்சி கூறினார்கள், ஒருக்கால் இன்றிரவும் கூட அவர்கள் இங்கு இருக்கக் கூடும். பாருங்கள்? கறுத்த முகமூடியால் அந்த ஸ்திரீ மறைக்கப்பட்டிருப்பதை இப்புகைப் படத்தில் காணலாம். இது உண்மையென்று விஞ்ஞானப் பிரகாரமாய் ருசுவாகிவிட்டது. அவர்கள் சுகமடைந்துவிட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டவுடனே, வேறொரு புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த கறுத்த முகமூடி அதில் இல்லை. அப்படியானால், எது புகைப்படக் கருவியின் கண்ணாடியின் மேல் விழுந்தது? அவர்கள் சுகமடைந்துவிட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டவுடனே அது கண்ணாடியின் மேல் விழாமல் மறைந்து போனது? பாருங்கள். நான் இங்கு நின்று கொண்டு, தூதர்கள் வரப் போகின்றனர் என்று அறிவித்தேன். 16சகோதரன் ஃபிரெட்... சற்று முன்பு சகோதரன் ஃபிரெட்டை இங்கு கண்டேன். அவர் அங்கிருந்தார் என்று நினைத்தேன்... இப்பொழுது அவரைக் காணவில்லை. ஓ, பின்னால் அமர்ந்திருக்கிறார். அது சரி. நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து ஒன்றரை அல்லது இரண்டு மைல் தூரத்தில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது, ஒரு வெடிச் சத்தத்தை அவர் கேட்டார். கற்பாறை பிளந்து, பறந்து போவதைப் போன்று அவர் உணர்ந்தார். சகோதரன் ஃபிரெட், அது சரிதானே? அதோ அந்த செய்தியைக் கொண்டு வந்த தூதர்கள், இங்கு கூர் நுனிக் கோபுர வடிவில் அது காணப்படுகின்றது, நான் இங்கிருந்து செல்லு முன்பு அது எப்படியிருக்குமென்றும், அவர்கள் எங்கு நின்று கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் நான் முன்னறிவித்தேன், புகைப்படத்திற்கு மேல் புகைப்படம் அவர்கள் நாடு முழுவதிலும், மெக்ஸிகோ வரையிலும் எடுத்தனர். அது முப்பது மைல் உயரத்தில், குறுக்கே இருபத்தேழு மைல் நீளம் கொண்டதாய் இருந்தது. அவ்வளவு உயரத்தில் மேகங்கள் உண்டாவதற்கு நீர்த்துளிகள் இருக்க முடியாது, நீர்த்துளிகள் எட்டு அல்லது ஒன்பது மைல் உயரம் வரைக்குமே உண்டாயிருக்கும். நீர்த்துளிகள் இல்லாத இடத்தில் இது தோன்றினது, பாருங்கள்? அது இருபத்தேழு மைல் உயரத்தில், முப்பது மைல் குறுக்களவு கொண்டதாயிருந்தது என்றோ, அல்லது முப்பது மைல் உயரத்தில் இருபத்தேழு மைல் குறுக்களவு கொண்டதாயிருந்தது என்றோ எனக்கு ஞாபகமில்லை. ஃலைப் பத்திரிக்கை அதை பிரசுரித்தது அல்லது 'லுக்' (Look) பத்திரிக்கையா? ஃலைப் பத்திரிக்கை என்று நினைக்கிறேன் - மே மாதம் 17-ம் தேதி வெளியீடு. 17அது உண்மையென்று விஞ்ஞானப் பிரகாரமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, அது உண்மையாவென்று நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. முன்னறிவிக்கப்பட்டது, விஞ்ஞான ரீதியாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் நிறைவேறிவிட்டது. எனவே ஏழு முத்திரைகளின் செய்தியானது, அவைகள் முடியப் போகும் தருணத்தில், அதுவே முழு வேதாகமத்தின் செய்தியாயுள்ளது. ஏழு முத்திரைகள் புதிய ஏற்பாட்டை முடிவு பெறச் செய்து அதை முத்தரித்துவிட்டன. அது உண்மை, தீர்க்கதரிசன உரையின் மூலமாகவும், விஞ்ஞானப் பிரகாரமாகவும், தேவனுடைய வார்த்தையின் பிரகாரமாகவும் அது உண்மையென்று நாமறிவோம். இவை மூன்றும் அது உண்மையென்று சாட்சி பகருகின்றன. 18எனவே நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும். நாம் அங்கு வந்துவிட்டோம். இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது என்பது எனக்குத் தெரியாது, அவர் அதை நமக்குத் தெரியப்படுத்தமாட்டார், ஏனெனில் அவருடைய வருகை “இரவில் திருடன் வருகிற விதமாய் இருக்கும்”. ஆனால் நண்பனே, என் சகோதரனே, சகோதரியே, எவ்வாறாயினும் நாம் ஆயத்தமாயிருப்போம். நம்மை நாம் கற்புள்ளவர்களாக்குவோம். பாருங்கள்? உலகம் தற்பொழுது போகும் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கும், அது (எடுத்துக் கொள்ளப்படுதல்) நிகழ்ந்துவிட்டது என்று கூட அதற்குத் தெரியாது, கிருபையின் வாசல் அடைபட்ட பின்பும் போதகர்கள் இரட்சிப்பைக் குறித்து பிரசங்கித்து, ஜனங்கள் மனந்திரும்பும்படி செய்து, எப்பொழுதும் சென்ற விதமாய் சென்று கொண்டிருப்பார்கள், மற்ற காலங்களிலும் அவ்வாறே நிகழ்ந்தது. இக்காலத்திலும் அவ்வாறே நடக்கும். எடுத்துக் கொள்ளப்படுதல் சடுதியாகவும் துரிதமாகவும் இருக்குமாதலால், எடுத்துக் கொள்ளப்படுதலில் அவர்கள் சென்றுவிட்டனர் என்றும் கூட அவர்கள் அறியமாட்டார்கள், அது உண்மை. அதைக் குறித்து அவர்கள் ஒன்றுமே அறியாதவர்களாயிருப்பார்கள். அவர் வந்து அவர்களை மெல்லக் கொண்டு சென்றுவிடுவார். அவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பார்கள். மற்றவர்களோ அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்க மாட்டார்கள். எனவே ஜெபித்துக் கொண்டேயிருங்கள். எனக்காக ஜெபியுங்கள். உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன். அந் நேரம் எப்பொழுது வருமென்று நமக்குத் தெரியாது? ஆனால் அது விரைவில் இருக்குமென்று நாம் நம்புகிறோம். பளபளப்பான (பகட்டான) காரியங்களிலிருந்து விலகியிருங்கள். சுவிசேஷத்தில் நிலை நில்லுங்கள். அதில் இப்பொழுது நிலை நின்று ஜெபியுங்கள். பாருங்கள்? 19யாரோ ஒருவர் ஒரு குழந்தையைப் பிரதிஷ்டை செய்ய விரும்புவதாக பில்லி ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்கிறான். அப்படியா? உங்கள் கையை உயர்த்துங்கள்... ஆம், இரண்டு குழந்தைகள் சரி, அவ்வழியாக இங்கு கொண்டு வாருங்கள். சகோதரன் நெவில்... பியானோ இசைக்கும் சகோதரி குழந்தை பிரதிஷ்டைக்காக பியானோவினருகில் சற்று வருவீர்களா? நாம் எதையும் விட்டுவிட விரும்பவில்லை. கவனியுங்கள். நாளை இரவு இந்நேரம், கர்த்தருக்குச் சித்தமானால், நான் நியூயார்க் பட்டினத்தில் இருப்பேன். “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுவதற்காக நாங்கள் அங்கு யுத்த களத்திற்குச் செல்கிறோம்”. சகோதரியே, இங்கு முன்னால் வாருங்கள். நான் அவர்களைக் கையிலேந்திக் கொள்கிறேன். நன்றி. இப்பொழுது நாங்கள், எத்தனை பேர் எனக்காக ஜெபிப்பீர்கள்? (சபையோர் 'ஆமென்' என்று சொல்கிறார்கள் - பதிப்பாசியர்). கர்த்தருக்குச் சித்தமானால், அவருக்குச் சித்தமுண்டாகுமென்று நினைக்கிறேன்... ஞாயிறன்று (சகோ. நெவில் சம்மதித்தால்) லூசியானாவுக்குப் போகும் வழியில். இங்கு வந்து ஒரு கூட்டம் நடத்த எத்தனித்துள்ளேன். ('ஆமென்'). 20உங்கள் தயைக்காக உங்களெல்லாருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். எனக்கு மிட்டாய் அனுப்பிய அந்த அம்மாள் - அதைப் பாராட்டுகிறேன். அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது, யாரோ ஒரு அம்மாள் ஒரு பெட்டி மிட்டாய் அனுப்பியிருந்தார்கள். அது மிகவும் ருசியாயிருந்தது. அதை தின்றுவிட்டு, என் வயிறு இப்பொழுது நிரம்பியுள்ளது. உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். இச்சிறு செயல்கள் முக்கியம் வாய்ந்தவையல்ல என்று நினைக்கின்றீர்களா? நிச்சயமாக அவை முக்கியம் வாய்ந்தவை, இந்த அன்பின் சின்னம். வெவ்வேறு நபர்கள் சிறுசிறு அன்பின் பரிசுகளை பில்லிபாலிடம் கொண்டு வந்து கொடுக்கின்றனர். அவைகளை நான் பெற்றுக் கொள்கிறேன். இச்செயல்களை நான் எவ்வளவாகப் பாராட்டுகிறேன் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நானே இவைகளை நினைவு கூரும்போது, எவ்வளவு அதிகமாக அவர் அதை நினைவு கூருவார் பாருங்கள்? “மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (மத். 25:40). பாருங்கள்? யார் இரக்கம் காண்பிக்கிறாரோ, அவர்களுக்கு இரக்கம் காண்பிக்கப்படும். 21இங்கு சில சிறிய குழந்தைகள் இருக்கின்றனர். நீங்கள் இங்கு நின்று கொண்டு, அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், என்னும் பாட்டைப் பாட வேண்டுமென்று விரும்புகிறேன். சரி, சகோதரர்களாகிய நீங்கள் ஒரு நிமிடம் சற்று வாருங்கள். என்னே, இதோ சிறிய பழுப்பு நிறக் கண்களுடன், என்னை நோக்கி ஒரு அழகிய, பெரிய சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருக்கும் முதலாவது சிறிய பெண், இவளுடைய... (“ஷாரோன் ரோஸ்'' என்று தாய் கூறுகிறாள்). ஷாரோன் ரோஸ், அது எனக்கு ஒரு மகத்தான பெயராகும். (சகோ. பிரான்ஹாம், ”உம்முடைய குழந்தையின் பெயரை வைத்துள்ளோம்''). மரித்துப் போன என்னுடைய சிறு பெண் நினைவாக ('இவள் பிறப்பதற்கு முன்பாகவே இப்பெயரைச் சூட்டினோம்'. சகோ. பிரான்ஹமே) இவள் பிறப்பதற்கு முன்பாகவே வைத்தீர்களா? சிறு பெண்ணாக இருந்தால் ஷாரோன் ரோஸ் என்று பெயரிடுவதாக இருந்தீர்கள். (பிறக்கப் போவது பெண்ணாகத் தான் இருக்கும் என்று நாங்கள் நிச்சயமுடையவர்களாய் இருந்தோம். “அப்படித்தான் இருக்க வேண்டும்'') இவள் (”ஷாரோன் ரோஸ் குட்மேன்''). உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அறிவீர்களோ அறிய மாட்டீர்களோ, நானறியேன். என் மனைவி இங்கு நின்று கொண்டு இருப்பாளாயின் அவள் மயங்கி கீழே விழுந்திருப்பாள். என் மகள் ஷாரோன் ரோஸ் பிரதிஷ்டை செய்யப்படும் போது அணிந்திருந்த ஆடையைப் போலவே இவளும் அணிந்திருக்கிறாள். சிறிய ஷாரோன் ரோஸ். தேவன் எடுத்துக் கொண்ட என்னுடையதிற்குப் பதிலாக இவள் ஜீவிக்கட்டும். உங்களுடைய கடைசிப் பெயரென்ன? (தாய் 'குட்மேன்' என்று கூறுகின்றாள்). திருமதி... இப்பட்டினத்திலிருந்து தான் வருகின்றீர்களா? ('சிக்காகோ') சிக்காகோ . சகோதரன், சகோதரி குட்மேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 22உங்களுக்குத் தெரியுமா? என் சிறு ஷாரோன் இவளைப் போன்றிருந்தாள். இங்கு இருப்பவர்கள் யாராவது அவள் எப்படி இருந்தாள் என்று ஞாபகங் கொண்டிருப்பார்களென்று என்னால் யூகிக்க இயலவில்லை. அவள் தன்னுடைய தாயைப் போன்று சிறிய பழுப்பு நிறக் கண்களையும் கறுப்பு முடியையும் உடையவளாக இருந்தாள், மிகவும் இனிமையானவள். குழந்தைக்கு என்ன வயதாகின்றது? ('ஐந்து மாதங்கள் என்று தாய் கூறுகிறாள்') ஐந்து மாதங்கள். தேவன் அவளை மேலே அழைத்துக் கொண்ட போது அவளுக்கு எட்டு மாதங்கள் ஆகி இருந்தது. அதன் பிறகு நான் அவளைக் கண்டுள்ளேன். உமக்கு அந்நிகழ்ச்சியை தெரியுமா? (ஒலி நாடாவில், “எங்கள் வீட்டில் அதை வைத்துள்ளோம்'' உங்கள் வீட்டில் வைத்துள்ளீர்கள். ஒலி நாடாவில்...) ஷாரோன் ரோஸ் என்னும் பதம் வார்த்தையிலிருந்து வருகிறது ''சாரோனின் ரோஜா” என்பதை சிறிது மாற்றினேன். அவருடைய பீடத்திற்கு இச்சிறியது தேவைப்பட்டது. ஆதலால் அதை எடுத்துக் கொண்டார். பாருங்கள்? நான் அவளுடன் மறுபடியும் இருப்பேன். அவள் பூமியில் இருக்க வேண்டிய நாட்களை நிறைவேற்றுவதற்காக உம் சிறு ஷாரோன் வாழ்வாளாக. என்னுடைய ஷாரோன் என்னுடன் மகிமையில் இருப்பாள் என்று நான் உணர்வது போல, மகிமையில் இவள் உம்மோடு இருப்பாளாக. 23எப்படி இருக்கிறாய்? பாருங்கள். ஒரு அருமையான சிறு காரியத்தைக் குறித்துப் பேசும் போது இவளைப் பாருங்கள்!புன்னகைப் பூத்துக் கொண்டிருக்கிறாள். நமது தலைகளை வணங்குவோம். பிரியமுள்ள தேவனே, ஷாரோன் ரோஸாகிய இச்சிறு பொக்கிஷத்தை நான் கையில் ஏந்திக் கொண்டிருக்கையில்... என்னுடைய இருதயத்தில் நான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நீர் அறிவீர். ஆதலால் அதை நான் வெளிப்படுத்த தேவை இல்லை. இச்சிறிய ஆபரணங்களை எங்கள் இருதயத்திற்கு அளிக்கும் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த குட்மேன் வீட்டை ஆசீர்வதியும். இந்த ஆபரணத்தை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர் கனப்படுத்தப்படுவார்களாக. கர்த்தாவே இது இவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும். நாளை என்று ஒன்று இருக்குமானால், அதற்கு கனமுள்ள ஒரு ஸ்திரீயாக இவளை ஆக்கும். இப்போதும் கர்த்தாவே, நீர் எங்களுக்கு கட்டளையிட்ட விதமாக கீழ்ப்படிந்து நீர் காண்பித்த மாதிரியின்படி செய்ய, நீர் சிறு பிள்ளைகள் கையில் ஏந்தி ஆசீர்வதித்து ''சிறு பிள்ளைகள் என்னிடம் வருவதற்கு தடை பண்ணாதிருங்கள்'' என்று கூறினீர். உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய பணியைச் செய்வார்கள் என்று கூறியுள்ளீர். சகோ. நெவில், சகோ. காப்ஸ் ஆகிய ஊழியக்காரர்களும், மற்றும் உம்முடைய ஊழியக்காரனாகிய நானும் இங்கு நிற்கிறோம். இப்போதும் கர்த்தாவே இச்சிறிய ஷாரோன் ரோஸ் குட்மேனை தன்னுடைய தாய் தகப்பனிடத்திலிருந்து எடுத்து அர்ப்பணிக்கப்பட்ட ஜீவியம் செய்வதற்காக உம்மிடத்தில் பிரதிஷ்டை செய்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். கர்த்தர் உங்களைஆசீர்வதிப்பாராக. (''எங்களுக்கு இரண்டு பையன்களும் சிறுமிகளும் ஆக ஐந்து பேர் வீட்டில் உள்ளனர். சகோ. பிரான்ஹாம்'' என்று சகோதரி குட்மேன் கூறுகிறார்கள் - ஆசி). இன்னும் ஐந்து சிறிய பிள்ளைகள் ('ஆம்') என்ன அருமை! சகோதரன் குட்மேன், சகோதரி குட்மேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் தாமே இச்சிறிய ஷாரோனை ஆசீர்வதிப்பாராக. 24எப்படி இருக்கிறீர்கள் சகோதரனே?இப்பொழுது பார்க்கலாம், நான்... ஆர்னெட் (தந்தை “ஆர்னெட்'' என்று கூறுகின்றார் -ஆசி). ஆர்னெட் அது சரி ('உம்முடைய பெயர் வைத்துள்ளோம்') வில்லியம் ஆர்னெட். அது சரியா? ('ஜேம்ஸ் வில்லியம் ஆர்னெட்') ஜேம்ஸ் வில்லியம் ஆர்னெட். அருமையான பையன். உமக்குத் தெரியுமா? எல்லாம் பொதுவாக எங்களுக்குள் அமைந்துள்ளது. இவனுக்கும் எனக்கும், பெயரில் பிறகு எங்கள் தலை மயிரைப் பகிர்ந்து கொள்வோம். இவன் அருமையான பையன், ஜிம்மி, இவனை என்னவென்று அழைப்பீர்கள் ஜேம்ஸ்? (”ஜேம்ஸ்“) ஜேம்ஸ், அது சரி. இவனை நான் பிடிக்க முடியுமா?(”இவன் இடங் கொடுக்கலாம்'') எனக்குத் தெரியாது. ஜிம்மி நாம் சிறியவர்கள் உனக்குத் தெரியுமா? சரி. நாம் நமது தலைகளை வணங்குவோம். தேவனாகிய கர்த்தாவே, ஆர்னெட் வீட்டை இச்சிறு பையனின் மூலம் நீர் ஆசீர்வதித்திருக்கிறீர். இவனுடைய தந்தை, தாய் மற்றும் அன்பானவர்களை ஆசீர்வதிக்க நான் ஜெபிக்கிறேன், அவர்கள் கிறிஸ்தவர்கள். சிகரெட் மற்றும் வேறு காரியங்களிலிருந்து இவர் கடுமையாக யுத்தம் செய்தார். அது ஒரு நாள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதிலிருந்து வந்தது. நான் எப்படியாவது செல்லவேண்டும் என்று நிச்சயித்திருந்த அந்த ஸ்திரீயைப் போல இவர் இருந்தார். தன்னுடைய வாணிபம் மற்றும் அனைத்தும் தோல்வி அடையும் நேரத்தில் இருந்தாலும், ஒரு சிறு தொகையை வைத்துக்கொண்டு நேர்காணலுக்காக நீண்ட நாள் அந்தக் காலையில் அது நடக்கும் வரைக்கும் கொண்டிருந்தார். அது நடக்கும் என்று அவர் விசுவாசித்தார். ஓ, தேவனே, தன் விவாக இணைப்பின் மூலம் இவரை ஆசீர்வதித்த இச்சிறு பையனை இப்போது கொண்டு வருகிறார். இந்த சிறிய ஜேம்ஸ் வில்லியம் ஆர்னெட்டை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறேன். இவனுக்கு நீண்ட ஆயுசைத் தந்து நாளை என்று ஒன்று இருக்குமானால் வரும் நாளில் சுவிசேஷத்திற்குகந்த மனிதனாக இவனை மாற்றும். கடைசியாக வரவிருக்கும் இந்த இராஜ்ஜியத்தில் நாங்கள் எல்லாரும் ஒன்றாய் இருப்போமாக. உம்முடைய ஊழியக்காரர்களாக இவன் மேல் எங்கள் கைகளை வைத்து ஊழியம் செய்யும் ஜீவியத்திற்காக இயேசு கிறிஸ்துவினிடம் பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென். 25கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. இன்னும் இருவரா? ஒரே விதமாக இவர்கள் அது சரி. நான் உன்னை தூக்குவதற்கு பதிலாக நீ என்னை தூக்கிவிடுவாய் என்று நம்புகிறேன். இது... ஆல்ப்ரெட், ஆல், மார்த்தா. சபையோர் இந்த இனிமையான சிறியவர்களாய் உள்ள இவர்களைக் காணட்டும். நமது கரங்களை இப்பொழுது இவர்கள் மீது வைப்போம். எல்லாம் வல்ல தேவனே, உம்முடைய ஊழியர்களாகிய நாங்கள் இப்பொழுது பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறுவனின் சகோதரனும், சகோதரியுமாகிய இவர்கள் மீது கைகளை வைக்கிறோம். இவர்களுடைய தாய் தந்தையிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் கரங்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட ஜீவியத்திற்கென்று இவர்களை பிரதிஷ்டை செய்ய எங்கள் கரங்களை இவர்கள் மீது வைக்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 26ஓ, இந்தச் சிறியவன், இவன் நல்ல பையன். என்னுடைய மயிரை இப்படித்தான் பிரிப்பதுண்டு. இவனுடைய பெயர் என்ன? (தந்தை “டெரல் கேய்த் வாக்கர்” என்று கூறுகின்றார் - ஆசி) ஹெரல் கேய்த் வாக்கர், என்ன அருமையான பையன்! நான் அதிசயிக்கிறேன். எப்படி என்று தெரியாது. பாருங்கள் என்றும் செய்வது போல என்னை உற்று நோக்குகிறான். நான் இவனை பிடித்துக் கொள்ளுவேனோ என்று வியக்கிறேன்? (குழந்தை பேசுகிறது - ஆசி) அது சரியா கேய்த்? ஓ, நிச்சயமாக இவன் ஒரு சிறந்த சிறிய பையன்? ஹெரல் (தாய் “டெரல்” என்று கூறுகிறார்கள் - ஆசி) ஹெரல் கேய்த் வாக்கர். வல்லமையுள்ள தேவனே, இந்த சிறிய டெரல் கேய்த் வாக்கரை இவனுடைய பெற்றோருடைய கரத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் கரத்திற்கு, இவன் மீது கரங்களை வைத்து வல்லமையுள்ள தேவனிடம் பிரதிஷ்டை செய்கிறோம். இவனுடைய தாயும் தந்தையும் விரும்புவது போல் தேவனுக்கேற்ற சிட்சையில் வளர்க்கப்படட்டும். நாளை என்று ஒன்று இருக்குமானால், இந்த பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு ஏதுவாக ஒரு ஊழியனாக இவனை நாங்கள் இக்குழந்தையின் கரங்களை வைத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு இவனை பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் வாக்கர் இவர்கள் சகோதரி வாக்கரா? (சகோதரி வாக்கர் “ஆம் ஐயா'', என்கிறார்கள் - ஆசி) இது அருமையானது. ஒரு அருமையான பையனை வைத்துள்ளீர்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. 27(சகோதரன் கிராம்பி சகோ. பிரான்ஹாமுடன் பேசுகிறார் - ஆசி). அது சரி ஐயா. (“இவள் பிறக்கும்போது தொண்டையில் ஒரு கட்டியுடன் பிறந்தாள். நீர் ஜெபித்த போது அக்கட்டி மறைந்தது'' என்று சகோ. கிராம்பி கூறுகிறார்). சகோ. கிரிம்ஸ்லி இச்சிறிய பெண்... (சகோதரன் கிராம்பி என்கிறார்) கிராம்பி எனக்கு அது குழப்புகிறது. ஏனெனில் கிரிம்ஸ்லி என்ற சகோதரன் எனக்கு உண்டு. நான் யோசித்துக் கொண்டிருந்தேன்... சகோ. கிராம்பி இச்சிறிய பெண்ணைக் கொண்டு வருகிறார். இவள் பிறக்கும்போது முகத்தில் ஒரு பெரிய கட்டியுடன் பிறந்தாள். நான் இவளுக்காக ஜெபித்தபோது அது மறைந்தது. இப்பொழுது இவளுக்கு ஜெபம் செய்ய... பெற்றோர் கிறிஸ்தவர்களா? (கிறிஸ்தவர்கள் அல்ல). அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. ஒரு அசுத்த ஆவி இக்குழந்தையை அபகரிக்க முயல்கிறதென்று அஞ்சுகிறார்கள். அது அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாம் ஜெபிப்போம். கர்த்தராகிய இயேசுவே, இப்பீடத்தின் மீது இச்சிறிய குழந்தை சாய்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில்... இதன் வாயிலுள்ள கட்டியை அகற்ற நீர் கிருபை காட்டினீர். இப்பொழுது ஒரு அசுத்த ஆவியானது இக்குழந்தையின் ஜீவனை எடுக்க முயல்கின்றது. இக்குழந்தையை வைத்து என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர், எப்படி உபயோகப்படுத்தப் போகிறீர் என்று சந்தேகமே இல்லை. சாத்தான் அத்திட்டத்தை குலைக்க முயல்கிறான். ஆதலால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இக்குழந்தையின் மேலிருந்து அவன் கையை எடுக்க அவனை அப்புறப்படுத்த சாத்தானுக்கு கட்டளையிடுகிறோம். தேவனுடைய மகிமைக்கென்று இவளை இயேசு கிறிஸ்துவினிடம் அர்ப்பணிக்கிறோம். ஆமென். 28நான் அவரை நேசிக்கிறேன். நீங்களும் அவரை நேசிக்கிறீர்கள் அல்லவா? (சபையோர் 'ஆமென்' என்கிறார்கள் - பதிப்பாசிரியர்) அவர் அற்புதமானவர். நான் 8.30 மணிக்கு முடித்துவிடுவேன் என்று வாக்கு கொடுத்தேன். அப்படியானால் இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கிறது. 8.30 மணிக்கு முடிக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஒருக்கால் அதை விட சற்று தாமதிக்கலாம். இப்பொழுது நாம்... 29இன்று காலை சகோதரன் டௌவை (Brother Dauch) கண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மற்றவர் எங்கு சென்றுவிட்டார்? காண்பதற்கு சகோதரன் 'டௌவைப்' போல் யாராவது ஒருவர் இருப்பாரானால், அவர் இவர் தான். இவ்விருவரில் யார் சகோதரன் 'டெள?' என்று கேட்டேன். நான் மேலும் கீழும் பார்த்தேன். அவரை - 'சகோதரன் டெள்' என்று அழைக்கப் போனேன். நான் செய்தியில் அவ்வளவு லயித்திருந்தேன். உங்களுக்குத் தெரியுமா சகோதரன் டெள்? நீங்கள் எப்பொழுதும் போலவே காணப்படுகின்றீர்கள். அந்நிலையில் உங்களைக் காண எனக்கு மிக்கமகிழ்ச்சி. அண்மையில், சகோதர் டெளவிற்கு ஏதோ நேர்ந்து விட்டதென்றும், அவருக்காக ஜெபம் செய்ய வேண்டுமென்றும் டூசானிலிருந்து தொலைபேசியில் என்னிடம் கேட்டுக் கொண்டனர். சகோதரன் டெளவிற்கு தொண்ணூறு அல்லது தொண்ணூற்றொன்று வயது ஆகின்றது என்று நினைக்கிறேன். உங்கள் சரீரம் பலம் குன்றி வருகின்றது. ஆனால் ''நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்'' (சங். 34:19). ஆனால் சரீரத்திற்கு ஒன்றுமே செய்ய முடியாத ஒரு நிலை வந்துவிடுகிறது. அப்பொழுது அவர் தேவனுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று அறிந்து கொள்கிறார். இது ஒரு மண்கட்டியாக இருந்தாலும், அதை கடைசி நாளில் எழுப்புவதாக தேவன் வாக்களித்துள்ளார். அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 30இந்த குளத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்காக சகோதரன் டெள வந்த அந்த சம்பவம் ஞாபகத்திற்கு வருகின்றது. ஞானஸ்நானம் பெற அவரிடம் உடைகள் ஏதுமில்லை. இருப்பினும், எப்படியாயினும் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று அவர் விரும்பினார். தேவன் அவரிடம் கிருபையாய் இருந்து வந்திருக்கிறார். தேவன் அவருக்கு வாக்களித்ததைக் காட்டிலும் இருபது ஆண்டுகள் கூடுதலாகிவிட்டன. பாருங்கள்? அது கிருபையல்லவென்றால் வேறென்ன? அன்று வேறு அவர் மாரடைப்பினால் படுக்கையாகிவிட்டார். கர்த்தர் மாத்திரம் அவருக்கு உடனே சுகத்தையளித்து அவரை படுக்கையை விட்டு எழுப்பாமல் போயிருந்தால் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரும் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதுசரியா? ஆம். அந்த யூத மருத்துவர் அவருக்கு சிகிச்சையளித்து வந்தார். அன்று அந்த கூடாரத்தில் சகோதரன் டெளவின் நிலையைக் குறித்து அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் இறந்துவிட்டார். பாருங்கள்? ஆண்டவரே, உமது அன்பு எவ்வளவு ஆழமானது! உமது அன்பு எவ்வளவு மகத்துவமானது! 31இங்கு சில உறுமால்கள் இருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் இவைகளுக்காக ஜெபிக்கப் போகிறேன். நான் விசுவாசம் என்னும் பொருளின் பேரில் சிறிது நேரம் பேசப் போகின்றேன். அதன் பின்பு கர்த்தர் எவ்விதம் நடத்தப் போகிறாரென்று - நாம் பிறகு என்ன செய்யப் போகிறோமென்று - கவனிப்போம். அதை அவரிடம் விட்டு விடுவோம். அதுவே சிறந்தது. ஓ, உன்னதங்களில் அவரோடே கூட வீற்றிருப்பது! நான் ப்ளூ போர் (Blue Boar) விடுதியை விட்டு வெளி வந்தபோது, சில நண்பர்களைக் கண்டு, ''நீங்கள் ஆராதனைக்கு இருக்கப் போகின்றீர்களா?'' என்று கேட்டேன். அவர்கள், “ஆம்'' என்றனர். ''அப்படியானால் நீங்கள் நள்ளிரவு 12 அல்லது 1 மணி வரை கார் ஓட்டிச் செல்லவேண்டி வருமே'' என்றேன். அவர்கள் காலை 6 மணியளவில் வீட்டை அடையலாமென்று எதிர்பார்க்கின்றனர். அவர்களும் மானிடரே. என்னைப்போல அவர்களும் களைப்புறுகின்றனர். டென்னசி (Tennessee) வரை அவர்கள் செல்லவேண்டும். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக! 32அநேக காரியங்களை நான் உங்களிடம் கூற முடியும். சமயம் அனைத்தையும் நான் எடுத்துக் கொள்கிறேன். உங்களை அடிக்கடி நான் காண்பதில்லை. உங்களிடம் பேசிக் கொண்டேயிருக்க எனக்கு மிகவும் விருப்பம். உங்களிடம் இவைகளைக் கூறாமல் சென்றுவிட்டால், உங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பேன்... சகோதரரிடம் இவைகளைக் கூற விரும்புகிறேன். அவர்களில் சிலர் தங்கள் சபை ஆராதனைகளை ரத்து செய்து விட்டு இங்கு வந்துள்ளனர். சகோதரன் ஜாக்சன் இன்று காலை, ஒரு சகோதரன் பேசின அன்னிய பாஷைக்கு அருமையாக வியாக்கியானம் செய்து கொடுத்து, அது தேவன் என்பதை உறுதிப்படுத்தினார். கவனித்தீர்களா? அது அவ்விதம் இல்லையென்று அவர் ஒருபோதும் கூறவில்லை. அதை கவனிக்க வேண்டுமெனும் எச்சரிக்கை மாத்திரம் அவர் விடுத்தார். பாருங்கள்? பாருங்கள்? ஜூனியர் ஜாக்சன் தமது சபை ஆராதனையை ரத்து செய்துவிட்டு இங்கு வந்துள்ளார். மற்ற சகோதரர்களும், செல்லர்ஸ்பர்க் (Sellersburg) அருகிலுள்ள மற்ற சபை ஆராதனைகளையும் ரத்து செய்துவிட்டனர். சகோதரன் ரட்டல் (Brother Ruddell) இன்று காலை இங்கிருந்தார். இன்றிரவு அவர் இங்கிருக்கின்றாரோ என்று எனக்குத் தெரியவில்லை. இங்கு தான் இருக்கிறார். சகோதரன் ரட்டல், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! என் உணர்ச்சிகளை என்னால் சரிவர வெளிப்படுத்த முடியவில்லை. நான் நினைப்பவைகளை அப்படியே கூறுகிறேன். நாம் மறுபக்கத்தை அடையும் போது, உங்கள் ஒவ்வொருவருடனும் பத்தாயிரம் ஆண்டு காலம் அமர்ந்திருந்து கழிக்க விரும்புகிறேன். இவைகளைக் குறித்து நாம் மறுபடியும் மறுபடியுமாக பேசலாம். 33அறுப்பு முதிர்ந்து வேலையாட்கள் கொஞ்சமாக இருக்கும் போது நாம் தோண்ட முற்படுவோம். ஒருக்கால் பாவி யாராகிலும் ஒருவர் இங்கு அமர்ந்திருக்க வழியுண்டு. இங்குள்ள யாராகிலும் ஒருவர் ஒருக்கால் இன்றிரவு தன் முழு வழியையும் மாற்றிக் கொள்ளக் கூடும். இன்று காலையில் புத்தகங்கள் மூடப்படாமலிருந்தால், ஒருக்கால் இன்றிரவு அவை மூடப்படலாம். கவனியுங்கள், அதில் பெயரெழுதப்பட்டவர்கள் மீட்கப்பட்ட பின்பு, ஒருவராவது உள்ளே வர முடியாது... நான் வேதத்தைப் படிக்கும் முன்பு, நான் கூறுவதை அனைவரும் கூர்ந்து கவனியுங்கள், மீட்கப்பட வேண்டியவர்கள் எல்லோரின் பெயர்களையும், இவ்வுலகம் சிருஷ்டிக்கப்படும் முன்னமே, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் தேவன் எழுதி வைத்துவிட்டார். எத்தனை பேருக்கு அது தெரியும்? அப்படித்தான் வேதம் கூறுகிறது. இந்த கடைசி நாட்களில் அந்திக்கிறிஸ்து, உண்மையான சபையைப் போல், அவ்வளவு தத்ரூபமாகக் காட்சியளிப்பான் - யூதாஸைப் போன்று, அதன் விளைவாக கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும். அது சரியா? தேவன் ஒருவரை அனுப்பாமல் போனால், யாருமே இயேசுவிடம் வரமுடியாது. தேவன் அவருக்குத் தந்தருளினவர் யாவரும் அவரிடத்தில் வருவார்கள். அவர் அந்த புத்தகத்தை எடுக்கும்போது, கடைசி பெயர்... 34பாருங்கள், லுத்தரன் காலத்திலிருந்த முன்குறிக்கப்பட்டவர் அனைவரையும் அவர் வெளியே இழுத்துக் கொண்டார். அவ்வாறே வெஸ்லியின் காலத்திலும் அவர் வெளியே இழுத்தார். வெவ்வேறு காலங்களில் - பெந்தெகொஸ்தே காலத்திலும் - முன் குறிக்கப்பட்டவர்களை அவர் வெளியே இழுத்தார், அவர்கள் அங்கிருக்கின்றனர். மற்றவர்களுடன் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். உலகத் தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள கடைசி நபர் வெளி வரும்போது - அந்த கடைசி நபர் மீட்கப்பட்டவுடன், அவருடைய கிரியை முடிவு பெறுகின்றது. அவர் மீட்டவர்களை உரிமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டு வருகிறார். அது நமது இருதயத்தில் இரத்தம் கசியச் செய்கின்றது. அதன் பின்பு ஆயிரம் வருடம் கழிந்தாலும், ஒருவர் கூட மீட்கப்பட முடியாது. உலகத் தோற்றத்திற்கு முன்பு ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்படாத யாருமே மீட்கப்பட முடியாது. அவர்கள் யார்? எனக்குத் தெரியாது. தேவன் மாத்திரமே அறிவார். நம் எல்லோரின் பெயர்களும் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று நம்புகிறேன். என் பெயர் அப்புத்தகத்தில் இருந்தால், நான் நிச்சயமாக அங்கே இருப்பேன். இல்லாவிட்டால் நான் அங்கிருக்கமாட்டேன். அவ்வளவுதான். பாருங்கள். அது தேவனைப் பொறுத்த விஷயம். ஆகையால், “விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்” (ரோமர்: 9:16) பாருங்கள்? 35இப்பொழுது நாம் வார்த்தையை எல்லா பயபக்தியோடும் உத்தமத்துடனும் அணுகுவோம். அது நாம் செய்ய வேண்டிய ஒன்று என்று எண்ணுகிறேன். அர்த்தமற்ற அநேக செயல்களை நாம் நிறுத்தி விடுவோமாக! பயபக்தியோடும் உத்தமமாயும் இருங்கள். சில சமயங்களில் தொலைக்காட்சியில் அவர்கள் செய்யும் பாவ அறிக்கைகளை நான் கவனித்திருக்கிறேன். தொலைக் காட்சியில் பில்லிகிரகாம் கூட்டங்களை அவர்கள் காண்பித்த போது - எனக்கு பில்லி கிரகாமுக்கு விரோதமாய் எதுவும் கிடையாது. கலிபோர்னியாவில் அவர் அருமையான பிரசங்கம் ஒன்றை சென்ற இரவு பிரசங்கித்தார். அண்மையில் நான் இங்கு தானியேலின் புத்தகத்திலிருந்து, ''நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்'' என்னும் பொருளின் பேரில் நிகழ்த்தின அதே பிரசங்கம்தான் அவரும் நிகழ்த்தினார், எத்தனை பேர் அதை தொலைகாட்சியில் கண்டீர்கள்? உங்களில் அநேகர் என்று நினைக்கிறேன். 36ஆனால் பிரசங்க பீடத்திற்கு செல்லும் வழியில் நடந்து வந்த ஜனங்களின் போக்கை கவனித்தீர்களா? அவர்கள் மெல்லும் பிசினை (Chewing gum) மென்று கொண்டும், சிரித்துக் கொண்டும். ஒருவரையொருவர் குத்திக் கொண்டும் சென்றனர். அவர்கள் மரணத்திற்கும் ஜீவனுக்குமிடையே நடந்தது போன்று நடந்து செல்லவில்லை. அவர்கள் பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டது போல் தோன்றவில்லை. பில்லிகிரகாம் கூறினது போல் அவர்கள் 'தீர்மானம்' எடுத்தனர். ஒரு குளிர்ந்த, உலர்ந்த கண் போன்ற தீர்மானத்தினால் எவ்வித பயனுமில்லை. உங்கள் பாவங்களுக்காக நீங்கள் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டும். பில்லி கிரகாமே, “முப்பதாயிரம் பேர்களில் முப்பது பேர் கூட நிலை நிற்பதைக் காண முடியவில்லை'' என்று கூறியதை இது நிரூபிக்கின்றது. அன்றொரு நாள் அவர், ''நியூயார்க் பட்டிணத்துக்கு என்ன நேர்ந்தது? அன்று ஒரு மகத்தான கூட்டத்தை அங்கு நடத்தினேன். என்ன நேர்ந்தது?முன்பிருந்ததைக் காட்டிலும் பாவம் அங்கு அதிகமாக இருக்கின்றது'' என்றார். 37நாளுக்கு நாள் அது மோசமாகிக் கொண்டு தான் வரும். தேசிய மனந்திரும்புதல் என்பது இனி இராது. தேசத்திற்கு அளிக்கப்பட்ட சமயம் கடந்துவிட்டது. இனிமேல் நபர்களாகிய நீங்கள் மாத்திரமே. அதுவும் ஏற்கனவே முடிவடையவில்லையென்றால், அது விரைவில் முடிவடையும். சிறு பிள்ளைகளே, இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சகோதரன் பிரான்ஹாம் கூறியது சரியா தவறாவென்று அறிந்து கொள்ளுங்கள். (இது சகோதரன் பிரான்ஹாம் கூறுவதல்ல). பாவம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்து, கடைசியில் ஒரு நாள் வானம் தீப்பிடிக்கும். அது பூமியில் விழுந்து, பூமியும் பயங்கர தீயினால் எரியும். ஆனால் மீட்கப்பட்டவர்களோ அப்பொழுது இங்கிருக்க மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே சென்றிருப்பார்கள். 38இப்பொழுது பரி. மாற்கு எழுதின சுவிசேஷம் 1-ம் அதிகாரம்: 1யோவான்: 4:4; மத்தேயு:28:20 இவைகளைப் படிக்க விரும்புகிறேன். முதலில் மாற்கு 11-ம் அதிகாரத்திலிருந்து 12 முதல் 24 வசனங்களைப் படிக்க விரும்புகிறேன். நான் படிக்கும்போது கூர்ந்து கவனிக்கவும். இது ஒரு சிறிய சாட்சிக்கும், புத்தி கூறுதலுக்கும் அடிப்படையாக அமைந்திருக்கும். அதன் பின்பு, நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் தீர்மானம் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்கலாம். எல்லோரும் அமர்ந்திருந்து, நாம் படிக்கும் நேரத்தில் ஜெப சிந்தையோடிருங்கள். மாற்கு: 11:12. மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டு வருகையில் அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்தி மரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்க வந்தார். அத்திப் பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இது முதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக் கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும், கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டு போகவிடாமல்; என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலை செய்ய வகை தேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள். சாயங்காலமான போது அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார். மறுநாள் காலையில் அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப் போயிருக்கிறதைக் கண்டார்கள். (“ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக் கடவன்” என்று அவர் சொன்ன இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் அவ்வற்புதம் நிகழ்ந்திருந்தது. அவர் சொன்ன மாத்திரத்தில் ஏதும் நிகழாதது போல இருந்தது, ஆனால் அடுத்த நாளிலே அது பட்டுப் போயிருந்தது.) பேதுரு நினைவு கூர்ந்து, அவரை நோக்கி: ரபி, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப் போயிற்று என்றான். இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஆதலால், நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். நீங்கள் ஜெபம் பண்ணும் போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். (அது ஒரு நிபந்தனை). மாற்கு: 11:12-26. 39இப்பொழுது 1யோவான்: 4:4ஐ வாசிக்க விரும்புகிறேன். ''பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்: ஏனெனில்... (நன்றாக கவனியுங்கள்) உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்'' அதை மறுபடியும் படிக்கட்டுமா? ''பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில்... (அந்திக் கிறிஸ்துவைக் குறித்துப் பேசுகிறான்). ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்'' (இங்கு இரு நபர்கள் - உலகத்திலிருக்கிறவன். உங்களிலிருக்கிறவர், உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்). 40இப்பொழுது மத்தேயு 28-ம்அதிகாரம் 20-ம் வசனம். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக் கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்...'' இன்றிரவு, இவ்வசனங்களிலிருந்து “உங்களிலிருக்கிறவர்” என்னும் பொருளை உபயோகித்து உங்களிடம் பேச விரும்புகிறேன். இதனை ஆதாரமாகக் கொண்டு, ஜெப ஆராதனைக்கென, 'விசுவாசம்' என்பதைக் குறித்தும் பேச விரும்புகிறேன். நாம் சீக்கிரம் ஆரம்பிக்கலாம். 41நான் ஏற்கனவே உங்களிடம் கூறியது போன்று நடந்த நிகழ்ச்சிகளை உங்களிடம் அறிவிக்க எனக்கு விருப்பமுண்டு. அதற்காக நான், இந்த சபைக்கு வரும்வரை காத்திருப்பது வழக்கம். மற்றவர்கள் இதைக் கேட்க விரும்பினால், அவர்கள் ஒலிநாடாக்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் முதலாவதாக உங்களிடம் அறிவிக்க வேண்டுமென்று நான் இங்கு வரும்வரைக்கும் காத்திருப்பேன். இப்பொழுது நான் உங்களிடம் கூறப்போகும் சம்பவத்திற்கு இங்குள்ள சிலர் -கிறிஸ்தவ சகோதரர் - சாட்சிகளாயிருக்கின்றனர். இது நிகழ்ந்த போது சகோ. பாங்க்ஸ் உட் (Brother Banks Wood) அங்கிருந்தார். அப்பொழுது இருந்த மற்றொருவர், சகோதரன் டேவிட் உட் (Brother David Wood). மற்றவர் சகோதரன் ஈவான்ஸ் அவர்களும் அவருடைய மகன் ரொனல்டும். மற்றுமொருவர் நமது மதிப்பிற்குரிய மூப்பர் சகோதரன் வீலர். வேறொருவர், சகோதரன் மான் (Brother Mann). நியூ ஆல்பனியைச் சேர்ந்த சகோதரன் மான் இங்குள்ளாரா? அவர் ஒரு மெதோடிஸ்டு போதகர். அண்மையில் அவருக்கு நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். இச்சம்பவம் நிகழ்ந்த போது, அவரும் அங்கிருந்தார். 42சில ஆண்டுகளாக என் இருதயத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு பாரம் குடி கொண்டிருந்தது. நான் ஏதோ தவறு செய்துவிட்டேன் என்பது போன்ற ஒரு உணர்ச்சி இருந்து வந்தது. என் வாழ்க்கையை, நான் திரும்பத் திரும்ப ஆராய்ந்து, என்ன தவறு நேர்ந்தது என்று கண்டுபிடிக்க விழைந்தேன். “ஆண்டவரே, நான் ஏதாகிலும் தவறு செய்திருந்தால், அது என்னவென்று வெளிப்படுத்தித் தாரும், அதை சரிசெய்து கொள்கிறேன்'' என்று அவரிடம் முறையிட்டேன். ஆனால் ஒன்றுமே எனக்கு வெளிப்படவில்லை. ஏதாவதொன்றை செய்யாமல் விட்டுவிட்டேனா? யாரையாவது புண்படுத்திவிட்டேனா? வேதத்தை நான் போதிய அளவு படிப்பதில்லையா? வேண்டிய அளவிற்கு நான் ஜெபம் செய்யவில்லையா? என்றெல்லாம் சிந்திப்பேன். நான் வேதத்தைப் படித்துவிட்டு ஜெபம் செய்து, மறுபடியும் யோசிக்கத் தொடங்குவேன். ''ஆண்டவரே எனக்கு வெளிப்படுத்தும். யாருக்காவது நான் எங்காகிலும் தீங்கிழைத்தேனா? அப்படியானால் அதை சரிசெய்து கொள்கிறேன். எனக்குக் காண்பியும். இந்த பாரம் எனக்கு வேண்டாம்'' என்று முறையிடுவேன். மிஷனரி ஊழியத்தை முடித்து வந்த பின்பு, இந்த ஐந்தாண்டு காலமாக, என் இருதயத்தில் ஏதோ ஒரு பாரம் குடி கொண்டிருந்தது. 43நான் மலைக்குச் சென்றேன். கடலோரத்திற்குச் சென்றேன். நான் எல்லாவிடங்களுக்கும் சென்று அதிகமாக ஜெபம் செய்தேன். ஆனால் அதுவோ என்னை விட்டுப் போகவில்லை. ஏதாவது தவறு செய்துவிட்டேனா என்று பலமுறை யோசித்துப் பார்த்தேன். ஆயினும் அது என்னை விட்டு அகலவில்லை. ஏதோ கட்டப்பட்டவனைப் போன்ற உணர்வு எனக்குள் இருந்தது. இன்று காலையில் இந்த செய்தி எனக்களிக்கப்பட்டபோது, அற்புதவிதமாக அந்த பாரம் என்னை விட்டு நீங்கிற்று. இதற்காகவே கர்த்தர் அதை எனக்குள் வைத்திருந்தாரா? எனக்குத் தெரியாது. பாருங்கள், இத்தகைய சிந்தனைகள் என் மனதில் எழுந்தன. இவைகளைத் தாங்கிக் கொள்ளும் போது ஒரு மனிதனுடைய இருதயத்தில் என்னென்ன சிந்தனைகள் தோன்றியிருக்கும் என்று நீங்கள் ஊகிக்கலாம். என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதென்றும், அதை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்று நினைக்கும் போது; சிலர் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு, ஒரு சிலர் ஒரு வழியாகவும், வேறு சிலர் வேறு வழியாகவும் செல்வார்கள் என்பதை உணரும் போது, அது எப்படியிருக்குமென்று உங்களுக்குத் தெரியும். சிலர் விசுவாசிப்பார்கள், சிலர் விசுவாசிக்க மாட்டார்கள். இவைகளை நான் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். 44மற்றவர்களைப் புண்படுத்தாமலேயே இதை எப்படிக் கூற முடியும்? அவர்கள் உணரும் வகையில் இதை எவ்வாறு எடுத்துரைக்க முடியும்? அவர்களைக் குற்றப்படுத்த அல்ல, அவர்கள் பேரிலுள்ள அன்பின் காரணமாகவே இவைகளை உரைக்கிறேன் என்று நான் எவ்வாறு அவர்களுக்கு உணர்த்திக் காண்பிக்க முடியும்? நான் கண்டிப்புள்ளவனாகவும், அதே சமயத்தில் அன்புள்ளவனாகவும் எப்படி இருக்க முடியும்? அதை எவ்விதம் அவர்களிடம் எடுத்து உரைக்க முடியும். அவர்களிடம் அதை எடுத்துக் கூறவில்லையென்றாலும் எனக்கு ஐயோ! பாருங்கள், இது ஒருவனை நரம்புதளர்ச்சியுள்ளவனாகவும் சரீர பலவீனம் கொண்டவனாகவும் செய்வதில் வியப்பொன்றுமில்லை. 45ஒவ்வொரு ஆண்டும் என்னுடன் வேட்டைக்காக கொலராடோவுக்குச் செல்லும் ஒரு கூட்ட சகோதரரைச் சந்திப்பதற்காக அரிசோனாவிலிருந்து இங்கு வந்திருக்கிறேன். சிலருக்கு, “நீங்கள் ஏன் வேட்டைக்குச் செல்கின்றீர்கள்? எது உங்களை அவ்விதம் செய்யத் தூண்டுகிறது?'' போன்ற கேள்விகள் எழுகின்றன. பாருங்கள், நீங்கள் இங்கு நிறையப்படுகின்றீர்கள். என்னிலுள்ளதை நான் உங்களிடம் உரைத்து என்னை வெறுமையாக்குகிறேன். இங்கு என்னை வெறுமையாக்குவதற்கெனவே அங்கு நான் நிறையப்படுகின்றேன். பாருங்கள். வேட்டையாடுவதற்கு மாத்திரம் நான் அங்கு செல்வதில்லை. என்னுடன் வேட்டைக்கு வருபவர் இதை அறிவர். நூற்றுக் கணக்கான மிருகங்களை நான் கடந்து செல்வதுண்டு. ஆனால் அவைகளில் ஒன்றையும் கூட நான் தொடுவதில்லை. 46அண்மையில், கிறிஸ்தவ வர்த்தகர்களுக்காக நான் வேட்டையாடி, வேட்டைப் பொருள்களை அவர்களிடம் கொண்டு கொடுப்பது வழக்கம். நான் வேட்டைக்குச் செல்லும்போது, ''பில்லி, எனக்கு ஒரு காளையைக் கொண்டு வாருங்கள். ஒரு பசுவைக் கொண்டு வாருங்கள், ஒரு காட்டுப் பசுவை (elk) கொண்டு வாருங்கள், இதைக் கொண்டு வாருங்கள், அதைக் கொண்டு வாருங்கள்'' என்றெல்லாம் அவர்கள் சொல்லியனுப்புவார்கள். நான் அங்கு சென்று வலதுபுறமும் இடதுபுறமும் வேட்டையாடி விட்டு வந்துவிடுவேன். வேட்டைக்கான மிருகத்தை நான் காணவும், அதை குறி தவறாமல் சுட்டு வீழ்த்தவும் கர்த்தர் உதவி செய்வார் - அவர்கள் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு தங்கள் வியாபாரத்தைக் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள். இனிமேல் வர்த்தகர்களுக்காக அவ்விதம் செய்யக் கூடாதென்று தேவன் எனக்குக் கட்டளையிட்டார். அது எனக்கு சற்று சங்கோஜமாக இருந்தது. ஆயினும், அவ்விதம் செய்யமாட்டேன் என்று அவரிடம் உறுதி கூறினேன். நான், “யாராவது ஒருவருக்கு அது அவசரமாகத் தேவைப்பட்டால், அவருக்கு நான் வேட்டையாடித் தருவேன். அவர்களுக்கு அவசியமில்லையென்றால் செய்ய மாட்டேன்” என்றேன். மாட்டு இறைச்சியும் மற்ற பொருள்களும் வாங்குவதற்கு அவர்களிடம் ஏராளமான பணம் உண்டு. எனவே, அவர்களுக்காக நான் ஏன் வேட்டையாடித் தர வேண்டும்? அந்த மிருகத்தை அவர்கள் புசிக்காமல் அது உயிரோடு இருக்கட்டும். 47எனவே, நான் தனியாகவே வேட்டையாடுவது வழக்கம். வேட்டைக்கு என்னுடன் கூட வருபவர்கள், நான் யாருடனும் வேட்டையாடுவதில்லையென்பதை அறிவார்கள். நான் தனிமையாக செல்வேன். அவர்களுடன் நான் செல்லும் காரணம், இரவு நேரங்களில் அவர்களுடன் ஐக்கியங் கொள்ளவும், அவர்களுடன் ஜெபிக்க வேண்டும் என்பதற்காகவே, அநேக போதகர்கள் என்னுடன் வேட்டைக்கு வந்துள்ளனர். இவ்வாண்டு சகோதரன் பாமர் (Brother Palmer) இதற்காக மலைக்கு வந்தார். அவர் இங்கு அமர்ந்திருப்பதை நான் கண்டேன் என்று நினைக்கிறேன். சகோதரன் பாப் லாம்பர்ட்-டும் (Brother Bob Lambert) வந்திருந்தார். அவரும் கூட இன்று காலை இங்கெங்கோ இருந்தார். அவர் யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன். அவர் இப்பொழுதும் இங்கிருக்கிறார் என்று நினைக்கிறேன். பிறகு மார்டின் பையன்கள் இருவர் - அவர்களும் இங்கிருக்கின்றனர் என்று நினைக்கிறேன். அங்கிருப்போர் மார்ட்டின் பையன்களா? சகோதரன் மார்டின், நீங்கள் அன்று தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டீர்களே, அது நல்லது அந்த பையன் சுகமடைந்துவிட்டான் - அந்த ஊழியக்கார சகோதரன். 48அன்று தொலைபேசியில் ஒருவருக்காக நான் ஜெபித்தேன். அவர் இங்கிருக்கிறாரா? அவருடைய பெயரை மறந்துவிட்டேன். அவர் ஆர்கன்சாசை (Arkansas) சேர்ந்தவர். அவருடைய மனைவி என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டார்கள். அந்த மனிதனின் உடல் வீங்கிப் போய் கடுமையான ஜூரம் கொண்டு, அவர் மரிக்கும் தருவாயிலிருந்தார். அன்று ஹாட் ஸ்பிரிங்ஸ் (Hot Spirings) என்னுமிடத்தில் நடந்த கூட்டத்தில் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட அந்த நபர். அவர் அங்கு கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் காண்பதற்கு அழகாயிருப்பார். அவர் இங்கிருப்பாரானால் எழுந்து நிற்க மாட்டார் என்று நினைக்கிறேன். அவர் பெயரை மறந்துவிட்டேன், (யாரோ சகோ. ப்ளேர் என்கிறார் - பதிப்பாசிரியர்) ப்ளேர் (Blair)! சகோதரன் ப்ளேர். ஹாட் ஸ்பிரிங்ஸ் கூட்டத்தில் அவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். உங்களில் எத்தனை பேர் வாலிபனை பெயர் சொல்லி அழைத்து, பிசாசு என்னைத் தள்ளி வைக்கச் செய்து, நான் கள்ளத்தீர்க்கதரிசியென்று அவர் என்னை அழைக்கும்படி செய்திருக்கிறான் என்று அறிவித்தார். அது உண்மையென்று அந்த வாலிபன் சாட்சி கூறினார். பிசாசு என்ன செய்தான் என்று பார்த்தீர்களா? மருத்துவர்களிடம் செல்வதில் அந்த மனிதனுக்கு நம்பிக்கையில்லை. அவரிலுள்ள வியாதி அவரைத் தாக்கும் என்று சாத்தான் அறிந்தவனாய், அவரைக் கொன்று விட தீர்மானித்தான். பாருங்கள்? ஆகவே அவர் என்னைத் தள்ளி வைக்கும்படி செய்ய சாத்தான் முயன்றான். பரிசுத்த ஆவியானவரோ அவரைக் கிருபையாக அழைத்து, அவ்விதம் செய்ய வேண்டாமென்று அறிவுரை கூறினார் (அந்த மனிதன் எனக்கு அன்னியர்). 49அன்றொரு நாள் இரவு அவருடைய மனைவி என்னைத் தொலை பேசியில் கூப்பிட்டு, “சகோதரன் பிரான்ஹாமே, அவர் மரிக்கும் தருவாயிலிருக்கிறார்”, “அவர் உடலெல்லாம் வீங்கி விட்டது, கடுமையான ஜூரமும் கூட... அவர் என்னென்னமோ பிதற்றிக் கொண்டிருக்கிறார்”. ஆனால் கடைசியாக, “சகோதரன் பிரான்ஹாமைக் கூப்பிடு” என்று சொன்னார் என்றார்கள். ''உங்கள் கையில் தோல்பை (Purse) அல்லது கைக் குட்டை இருக்கிறதா?'' என்று கேட்டேன். “இல்லை என்று பதிலளித்தார்கள் (அவர்கள் ஆர்கன்சாசில் இருந்தார்கள், நான் டூசானில் இருந்தேன்). நான், “வேறு ஏதாவது இருக்கிறதா?'' என்று கேட்டேன். அவர்கள், “கழுத்துக் குட்டை (Scarf)” என்றார்கள். நான், ''உங்கள் ஒரு கையை கழுத்துக் குட்டையின் மேல் வையுங்கள்; மற்றொரு கையால் தொலைபேசி ரீசீவரை (Receiver) பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டு, ஆண்டவர் இரக்கம் கொண்டு, சத்துருவைத் துரத்த வேண்டுமென்று ஜெபித்தேன். அவர்கள் கழுத்துக் குட்டையைக் கொண்டுபோய் கணவனின் மேல் வைத்தார்கள். அடுத்த நாள் அந்த மனிதன் குணமடைந்து என்னை தொலைபேசியில் கூப்பிட்டார். பாருங்கள், பாருங்கள், ஏறக்குறைய இருபத்து நான்கு மணி நேரத்தில், அதற்கும் குறைந்த நேரத்தில். 50என் விலைமதிக்க முடியாத சகோதரனை இன்று நான் இதுவரை காணவில்லை, சகோதரன் ராய் ராபர்சன். சகோதரன் ராய் இராணுவத்தில் பணியாற்றியவரென்று உங்களுக்குத் தெரியும். அவர் இங்கு இருப்பாரானால், சரியாகப் புரிந்து கொள்வாரென்று நம்புகிறேன். அதை குற்றமாக நான் கூற முற்படவில்லை. அவர் எல்லாவற்றிலும் கண்டிப்பாக இருப்பவர். அவர் இராணுவத்தின் சார்ஜண்டாக பணியாற்றியவர். இராணுவத்தில் கடைபிடிக்கும் கண்டிப்பை இவரும் கடைப்பிடிப்பதால், இவரிடம் தொடர்பு கொள்ள நீங்கள் சற்று பழக வேண்டும். ''இந்த ஆவிக்குரிய காரியங்களெல்லாம் மற்றவர்க்கே, எனக்கல்ல'' என்னும் கருத்தினை அவர் கொண்டிருந்தார். ஆனால் ஆண்டவர் அவரைக் காப்பாற்றினார். இல்லையேல் அவர் இறந்து போயிருப்பார். அவர் இறந்திருக்க வேண்டும். மரிக்கும் நிலையில் அவர் நீண்ட காலம் இருந்தார். தேவன் அவருக்கு சுகமளித்தார். அன்று முதல் அவர் தேவனைப் பின்பற்றி வருகிறார். ஆவிக்குரிய காரியங்கள், தரிசனங்கள் போன்றவைகளை அவர் அறிந்திருக்கவில்லை. 51இங்கு சில காலங்களுக்கு முன்பு அவர் சகோ. ராய்க்கு அளித்த தரிசனத்தை அநேகர் அறிந்திருக்கிறீர்கள், நான் அங்கு செல்வதற்கு முன்னர், அவர் மலையின் மேல், அந்த ஒளியில் என்னைக் கண்டதையும், என்னிடத்திலிருந்து சத்தம் புறப்பட்டு வந்ததையும் கண்டார். இது அவரிடமிருந்த எல்லா சந்தேகத்தையும் நீக்கிப்போட்டது. அன்றிரவு அவர் அதிக நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு கடும் ஜூரம் உண்டாயிருந்தது. மருத்துவர் மருந்து கொடுத்தும் எவ்வித பயனுமில்லை. அவர் அசைய முடியாத நிலைக்கு வந்துவிட்டார். திமிர்வாதத்தினால் அவர் கால்களை அசைக்க முடியாமல் போய்விட்டது. அவர் இராணுவத்திலிருந்த போது, ஜெர்மானியர் துப்பாக்கியால் சுட்டதன் விளைவாய் அவருடைய உடல் முழுவதும் துளைக்கப்பட்டிருந்தது. அவரைத் தவிர அவருடன் இருந்த மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். என்ன நேர்ந்தது தெரியுமா? அவருடைய மனைவியிடம், ''அங்கு ஏதாவது உள்ளதா?'' என்று கேட்டேன். அவர்கள், நீர் ஒருமுறை ஜெபித்து கொடுத்த ஒரு கைக்குட்டை என்னிடம் இருக்கின்றது. “அதை நீர் ஜெபம் செய்துதர வேண்டுமென்று அவர் விரும்புகிறார்'' என்றார்கள். “அதைக் கொண்டு வாருங்கள்” என்றேன். அப்பொழுது நான் டூசானில் இருந்தேன். அவர்கள் கையை அதன் மேல் வைத்தார்கள். நான் ஜெபம் செய்து ஜூரத்தைக் கடிந்து கொண்டேன். நான், “சகோதரி ராபர்சன், அது போய்விடும் ” என்றேன். “அது போய்விடும் என்று ஏதோ ஒன்று என்னிடம் கூறியது”. “அப்படியே சொல்'' என்றது அது. அரைமணி நேரத்திற்குள் ஜூரம் அவரை விட்டகன்றது. அவர் சமையல் அறைக்குச் சென்று திண்பண்டம் தேடத் தொடங்கிவிட்டார். பாருங்கள்? நான் என்ன கூற முயல்கிறேன் என்றால், “உங்கள் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். சாத்தான் என்னைக் குறித்து தீதாகப் பேச அவனுக்கு இடங்கொடாதீர்! அது இப்பொழுது அதிகப்படியாக உள்ளது. உங்கள் நம்பிக்கையில் நிலைத்திருங்கள். இல்லையேல், அது நிறைவேறாது. மனிதனாகிய என்னைப் பார்க்க வேண்டாம். நான் ஒரு மனிதன். என்னிடம் தவறுகள் நிறைய உண்டு. ஆனால் அவரைக் குறித்து நான் கூறுவதையே நோக்கிப் பாருங்கள். அது அவர், அவர் தான். 52நான் கொலராடோவின் மலையின்மேல் இருந்த போது, அங்கு உலர்ந்திருந்தது. வேட்டை பொருள் சொற்பமாக இருந்தது. சகோதரன் வீலரை கர்த்தர் ஆசீர்வதித்து ஒரு நல்ல பரிசு அளித்தார். அதுவே அவர் முதன்முறையாக காட்டில் வேட்டையாடுவது. கர்த்தர் அவரை ஆசீர்வதித்தார். அதன் பின்பு நானும் இருபது ஆண்டு காலமாக எதிர்ப்பார்த்திருந்த ஒரு பெரிய பரிசை சுட்டேன். வெகுகாலமாக நானும் சகோதரன் பாங்க்ஸும் அதை பின் தொடர்ந்து வந்தோம். என்னுடைய துப்பாக்கியை உஷ்ணப் பிரதேசத்தில் உபயோகித்துவிட்டு, குளிர் பிரதேசத்திற்குக் கொண்டு வரும்போது அதன் கண்ணாடி சற்று பெரிதாகி விடுகின்றது. அதன் விளைவாக, குறி சில அங்குலங்கள் தவறிப் போய், மரங்களின் நடுவே இருந்த அந்த மிருகத்தின் மேல், படக்கூடாத இடத்தில் குண்டு பட்டுவிட்டது. அது சற்று கீழே பாய்ந்திருக்குமானால், ஒரு நொடியில் எவ்வித வலியுமின்றி அந்த மிருகத்தைக் கொன்றிருக்கும். அது சற்று உயரப் பாய்ந்ததால், மிருகம் குதித்துக் கீழே விழுந்தது. 53பில்லி அப்பொழுது என்னுடன் இருந்தான். ''அந்த குண்டு அதைக் கொன்று விட்டது“ என்றான் அவன். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அதைக் காணோம். பில்லி, ''நீங்கள் மரத்தை தான் சுட்டிருக்கிறீர்கள்'' என்றான். அப்பொழுது ஒரு எச்சரிக்கை சிக்னல் (Warning Signal) கொடுக்கப்பட்டது. நாங்கள் இருந்த இடத்திற்கு சற்று உயரத்தில் ஏறக்குறைய நூறு பேர் இருந்தனர். சகோதரன் பாமரும் மற்றவர்களும் அதற்கு சாட்சிகள். சகோதரன் ஈவான்ஸ் அங்கிருந்தார். சகோதரன் வெல்ஷ் ஈவான்ஸும் அவருடைய மகன் ரானியும் (சற்று முன்பு அவனை நான் கூட்டத்தில் கூப்பிட்டேன்) 'பசு பாளையம்' (Cow Camp) என்று அழைக்கும் இடத்திற்கு அநேகர் சென்றிருந்தனர். அங்கு மாடு மேய்ப்பவர்கள் தங்கி, சவாரி செய்து, தங்கள் மாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைப்பார்கள். நான் கூட முன்பு அப்பாளையத்தில் தங்கியிருந்து, மாடுகளை ஓட்டி, ஒருபுறம் ஒதுக்கி வைப்பதுண்டு. 54அங்கு ஏறக்குறைய நூறு பேர் இருந்தனர். அங்கு பனிப் புயல் (Blizzard) உண்டாகும் என்று அறிவிக்கப்பட்டு 'எச்சரிக்கை சிக்னல்' கொடுக்கப்பட்டதால், அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்றுவிட வேண்டுமென்று எல்லோருக்கும் தெரியும். எனவே, சகோதரன் பாமரும் மற்றவர்களும் உடனே புறப்பட்டுச் சென்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கார் மூவகை வேகத்தில் மாத்திரம் செல்லக் கூடியது (three Speed transmission) அவர்கள் உடனே புறப்பட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. வானிலை மோசமானால், வாரக்கணக்காக அங்கேயே தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். 'பனிப்புயல் வரப் போகின்றது' என்று வானொலியும் அறிவிக்கின்றன என்று சொல்லி, எங்களுக்கு மேலே இருந்தவர்களும், சுற்றிலும் இருந்தவர்களும் கூட்டம் கூட்டமாகச் சென்றுவிட்டனர். அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட வேண்டும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். 55ஆனால் என்னுடன் கூட இருந்த மற்ற சகோதரருக்கு, மானைச் சுடுவதற்கு இரண்டு அனுமதிச் சீட்டுகள் இருந்தன. அவர்களுக்கு சென்றுவிட விருப்பமில்லை. சரி, அப்படியானால் நாம் தங்கலாம் என்று அவர்களிடம் சொன்னேன். ஆனால் ஆறு நாட்களுக்குப் பிறகு ஒரு கூட்டம் டூசானில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதற்கு நான் போக வேண்டும். எனக்கு விவாகமாகி இருபத்திரண்டு ஆண்டுகளாகின்றன. இருபது ஆண்டுகளாக, ஒவ்வொரு விவாக நாளன்றும், நான் மலைக்குச் சென்றிருக்கிறேன். அங்கு ஒரு சிறிய ஸ்தலம் உள்ளது. நான் அங்கு சென்று ஜெபிப்பதுண்டு. என் மனைவியை நான் ஏற்றுக் கொண்ட ஸ்தலம் அதுவே. என் தேன் நிலவன்று, வேட்டைப் பயணம் செல்ல என்னிடம் பணமில்லை. என் மனைவியை தேன் நிலவுக்காக வேட்டைக்குக் கூட்டிச் சென்றேன். அங்கிருந்த ஓரிடத்தையடைய, சுற்றிலுமுள்ள மரங்களைக் காலி செய்ய என் மனைவிக்கு உதவி செய்தேன். அதன் விளைவாக ஒரு சிறு இடம் எனக்கு அங்கு கிடைத்தது. அங்கு தான் எங்கள் தேன் நிலவை கழித்தோம். ஒவ்வொரு விவாக நாளன்றும், அந்த இடத்திற்கு நான் செல்லும் போது, என் மனைவியை நினைவு கூருவேன். அக்டோபர் 23-ம் தேதியன்று அந்த சீசன் (Season) தொடங்கும். இருபது ஆண்டுகளாக என் விவாக நாளை என் வீட்டில் கழித்ததில்லை; அந்த இடத்தில் தான் கழித்திருக்கிறேன். 56அன்று என் விவாக நாளாக இருந்தது. சகோதரன் மான்... நான் அவர்களிடம், “நீங்கள் இங்கு இருக்க விரும்பினால் ஒரு மாதம் இங்கு தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்'' என்றேன். ஏனெனில் ஒரே இரவில் இருபது அடி உயரத்திற்குப் பனி பெய்வதை, பனிப்புயலின் போது நான் கண்டிருக்கிறேன். அங்கு ஓரிடம் உலர்ந்து காணப்படும். ஆனால் அடுத்த நாள் காலைக்குள், அங்கு தங்குவதற்கென அடிக்கப்பட்ட கூடாரத்தின் உச்சிவரை, பனி பெய்திருக்கும். பனி உருகும்வரை அங்கேயே தங்க வேண்டி நேரிடும். அந்த இடம் காட்டில் பதினைந்து அல்லது இருபது மைல் உள்ளே இருக்கும். ஆனால் ஆபத்தான நிலை ஏற்படுமானால், அவர்கள் ஹெலிகாப்டரை அனுப்பி உங்களைக் காப்பாற்றுவார்கள். சாதாரணமாக பனியினால் யாரும் மடிந்து போவதில்லை. பனி உருகும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். 57பனிப்புயலைக் குறித்த முன்னறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில், நாங்கள் தரையில் அமர்ந்தோம். நான், ''ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள். இங்கு நீங்கள் தங்க விரும்பினால், நானும் உங்களுடன் தங்குவேன். நான் மனைவியைத் தொலைபேசியில் கூப்பிட்டு, அவளுக்கு விவாக நாள் வாழ்த்து கூறிவிடுவேன். இங்கு நாம் தங்க வேண்டுமானால் திண்பண்டம் வாங்க வேண்டும்'' என்றேன். எங்களிடம் இருந்த ரொட்டி தீர்ந்துவிட்டது. 'பான் கேக்' (Pancake) தின்பண்டத்தை நான் கண்ணால் காணக்கூட விரும்பவில்லை. ஏனெனில் கனடாவில் இருபத்தொன்று நாட்களாக அதையே தின்றதால், சலித்துப் போய்விட்டது. எனவே நான் ரொட்டி வாங்க வேண்டுமென்று விரும்பினேன். 58அவர்கள் தங்கலாமென்று தீர்மானித்தனர். சகோதரன் மானும் நானும் கீழே சென்று மளிகை சாமான்கள் வாங்கினோம். நான் மனைவியைத் தொலைபேசியில் கூப்பிட்டபோது, யாரும் பேசவில்லை... மளிகை சாமான்கள் வாங்கி அதைக் கட்ட ஒரு மணி நேரம் பிடித்தது. அதுவரை நான் காத்திருந்து, மீண்டும் என் மனைவியைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். அப்பொழுதும் என் மனைவி பேசவில்லை, நான் சகோதரி ஈவான்ஸை தொலைபேசியில் கூப்பிட்டேன். அவர்கள் இப்பொழுது இங்கிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆம், சகோதரன், சகோதரி ஈவான்ஸ் இருவரும் இங்குள்ளனர். நான் சகோதரி ஈவான்ஸை தொலைபேசியில் கூப்பிட்டேன். அவர்கள், ''நான் சகோதரி பிரான்ஹாமைத் தொலைபேசியில் கூப்பிட்டு, உங்கள் சார்பாக விவாக நாள் வாழ்த்து தெரிவித்து விடுகிறேன்“ என்றார்கள். என் மனைவி அப்பொழுது குழந்தைகளுக்கு மளிகை சாமான்கள் வாங்க கடைக்குச் சென்றிருந்தாள். நாங்கள் திரும்பி மலைக்கு வந்தோம். அடுத்த நாள் காலையில் வானத்தில் மேகங்கள் மாத்திரமேயிருந்தன. மழை காலத்தில் மழை பெய்யாததால் எல்லாமே உலர்ந்து கிடந்தது. உலர்ந்த நிலையின் காரணமாக, வேட்டை சீசனை அவர்கள் இன்னும் சில நாட்கள் நீடித்து வைக்க வேண்டியிருந்தது. 59அன்று காலை நான் சகோதரரிடம், ''முதல் துளிமழை, அல்லது முதல் பனி, அல்லது முதல் கல் மழை (Sleet), எது விழுந்தாலும், உங்களால் கூடுமானவரை துரிதமாக முகாமிற்குச் சென்றுவிடுங்கள். ஏனெனில் பதினைந்தே நிமிடங்களில் உங்கள் கைகளையும் கூட நீங்கள் காணமுடியாத அளவிற்குப் பனிபெய்துவிடும். பாருங்கள்? அது சுழன்று சுழன்று அடிக்கும் தேசத்தைப் பற்றி எவ்வளவு நன்றாக நீங்கள் அறிந்திருந்த போதிலும் திசைகெட்டு விடுவீர்கள். எனவே, முகாமிலேயே தங்கியிருங்கள். இல்லையேல், மடிந்து போவீர்கள், ஏனெனில் சில நேரங்களில் கல்மழை வேகமாகப் பெய்து காற்றடிக்கும் போது, உங்களால் மூச்சுவிடவும் முடியாது. அங்கேயே நீங்கள் இறந்துபோக நேரிடும். எனவே கல் மழை பெய்யத் தொடங்கினவுடனே, உங்களால் முடிந்தவரை, எங்கிருந்தாலும் துரிதமாக முகாமிற்குச் சென்றுவிடுங்கள்“ என்றேன். 60''நீங்கள் மேலே சென்று கணவாயில் உட்காருங்கள். நான் இன்னும் உயரச் சென்று மலையிலிருந்து கல்லை உருட்டி, மான்களைப் பயப்படுத்தி கீழே ஓட்டி விடுகிறேன். உங்களுக்கு வேண்டிய மானை நீங்கள் சுடுவதற்காக தெரிந்து கொள்ளுங்கள்'' என்றேன். எனவே நான் மேலேறிச் செல்லத் தொடங்கினேன். 'சாடில்' (Saddle) என்று நாங்கள் வழக்கமாக அழைக்கும் இடத்தை நான் அடைந்தேன். அந்த இடத்தைக் கடந்துதான் நாங்கள் 'க்வேக்கர் நாப்' (Quaker Knob) என்னும் இடத்திற்குப் போக வேண்டும். அது மிகவும் உயரமுள்ள இடம் அந்த 'சாடில்லை' நான் ஏறக்குறைய அடைந்துவிட்ட தருணம், மேகங்கள் கருமையாகத் தொடங்கின. மேலே வாகனம் எதுவும், மாடு மேய்ப்பவர் எவரும் இல்லை. சில நிமிடங்களுக்குள் மழை பெய்ய தொடங்கினது. என் துப்பாக்கியை 'கோட்' (Coat) டுக்குள் மறைத்துக் கொண்டு, தூரப்பார்வை கண்ணாடி மங்காதபடிக்கும், துப்பாக்கியின் குழாய் நனையாதபடியும் செய்தேன். ஒரு கரடியை சந்திக்க நேர்ந்தால், என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டே, தூரப் பார்வை கண்ணாடியை இப்படிப் பிடித்துக் கொண்டு, சற்று மரத்தினடியில் அமர்ந்தேன். அங்கு ''தேவனாகிய கர்த்தாவே, நீரே மகத்தான யேகோவா. உம்மை நான் நேசிக்கிறேன்'' என்று சொல்லி ஜெபம் செய்தேன். 61எனக்குத் எத்தனை அனுபவங்கள் உண்டாயிருக்கின்றன! சகோதரன் பாமருக்கும் மற்ற சகோதரருக்கும், கழுகு இளைப்பாறும் ஸ்தலத்தையும், அவ்விடமிருந்து அது உயர பறந்து செல்வதையும் நான் காண்பித்துக் கொடுத்தேன். அங்கு தான் இவையாவும் சம்பவித்தது. அங்கு இருப்பது என் மனத்திற்குகந்த செயலாகும். மலைகளின் மேல் ஆண்டவருடன் எத்தனையோ மகத்தான அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். எனவே அங்கு சென்றால் அவரைக் காணாமலிருக்கவே முடியாது. அவர் எங்கும் இருக்கிறார். அங்கு அமர்ந்தேன். அப்பொழுது சிறு கல்மழை பெய்யத் தொடங்கினது. சுழல் காற்று வீசத் தொடங்கினது. நான், “எனக்கு கீழே போக நன்றாக வழி தெரிந்தால், இப்பொழுதே கீழே இறங்கிவிடுவது நல்லது” என்று எண்ணினேன். நான் கீழே பார்த்தபோது, அடிபாகம் எதுவும் தெரியவில்லை. மேகங்கள் சுழன்று கொண்டிருப்பதையும், கல்மழை பொழிவது மாத்திரமே காணமுடிந்தது. “அந்தப் பனிப்புயல் தொடங்கிவிட்டது. பனிப்புயல் வரப் போகின்றது'' என்று அநேக நாட்களாக அறிவிக்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பு நிறைவேறிவிட்டது. 62கனடாவைச் சேர்ந்த சகோதரன் டாம் சிம்சன் இப்பொழுது இங்கிருக்கிறார். அவர் வானிலை முன்னறிவிப்பைக் கேட்டார். அந்த பாகத்திற்குச் செல்ல வேண்டாமென்று அவருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஏனெனில் வானிலை முன்னறிவிப்பு, “அங்கு பனிப்புயல் தோன்றும்'' என்று அறிவித்தது. சகோதரன் டாம், இங்கே இருக்கிறீர்களா? இங்குதான் அமர்ந்திருக்கிறார். பனிப் புயல் வந்து கொண்டிருந்தது. எல்லோரும் அதற்காக ஆயத்தமானார்கள். 63என் துப்பாக்கியை இப்படி என் சிகப்பு சட்டைக்குள் புகுத்திக் கொண்டு, மலையிலிருந்து கீழே இறங்கி வரத் தொடங்கினேன். 'சாடில்'லிருந்து நான் அரை மைல் தூரம் வந்திருப்பேன். ஓ, அந்த பெரிய பனித்துளிகள் பெய்யத் தொடங்கின. காற்றும் மலையின் மேல் சுழன்று வீசியது. மலையடிவாரத்தை என்னால் காண முடியவில்லை. எனக்கு முன்னால் இருபது அல்லது முப்பது அடி தூரமே காண முடிந்தது. 'ஹாக்பாக்' (Hogback) என்று நாங்கள் அழைக்கும் அந்த சிறிய முகடு (ridge) வரைக்கும் எப்படி வருவதென்று எனக்குத் தெரியும். அப்படியே சிறிய ஓடைக்கு (creek) வந்து, அதைப் பின் தொடர்ந்து கீழே வரவும். அது மோசமான நிலையையடைந்தால் அங்கிருந்து எங்கு செல்ல வேண்டுமென்றும் எனக்குத் தெரியும். 64ஆகவே நான் கீழிறங்கி வந்தேன். பாதி வழி வந்தபோது, ஏதோ ஒன்று என்னிடம், இப்பொழுது நான் உங்களிடம் எவ்வளவு தெளிவாக பேசுகின்றேனோ அவ்வளவு தெளிவாக, ''நில்! வந்த வழியே பின்னால் போ!“என்றது. “என்ன இவ்விதம் நினைக்கிறேன் ஒருக்கால் அது என் சொந்த சிந்தையாயிருக்கலாம்'' என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் என்னால் ஒரு அடி கூட முன் எடுத்து வைக்க முடியவில்லை. டேவிட் அன்று காலை எனக்கு சான்ட்விச் (sandwich) செய்து கொடுத்திருந்தான். ஒருமுறை அவன் தன் தகப்பனாருக்கு வெங்காயமும் தேனும் போட்டு சான்ட்விச் ஒன்று செய்து கொடுத்தான். அதுபோன்று எனக்கும் ஒரு சான்ட்விச் ஒன்று செய்து கொடுக்க விரும்பினான் போலும்! (அது மாத்திரமே எங்களிடம் இருந்தது). பலோனி (Baloney) என்னும் உணவையும் அவன் செய்து கொடுத்து, காகிதத்தில் சுற்றிக் கொடுத்தான். அதை நான் சட்டைப் பையில் வைத்திருந்தேன். அது நனைந்துவிட்டிருந்தது. ''சற்று நின்று, இதை புசித்துவிடுகிறேன். அப்பொழுது சரியாகிவிடும்'' என்று நினைத்துக் கொண்டே, சான்ட்விச்சை சட்டைப் பையிலிருந்து எடுத்து தின்னத் தொடங்கினேன். அப்பொழுது சுமார் 10 மணியிருக்கும் இதை சாப்பிட்டால் சரியாகிவிடுவேன்“ என்று எண்ணியவாறு முன்னால் செல்லத் தொடங்கினேன். ஆனால் ஏதோ ஒன்று என்னிடம், ''நீ வந்த இடத்திற்கே திரும்பிச் செல்” என்று கூறினது. 65''அந்தப் புயலின் வழியாகத் திரும்பிச் செல்வதா?'' என்று எண்ணினேன். இன்னும் அரை மைல் தூரம் மலையின் மேல் இருண்ட காட்டின் வழியாகச் செல்லவேண்டும். இங்கிருந்து ஆர்கன் (organ) இசைக்கருவி இருக்கும் தூரம் வரைக்கும் கூட என்னால் காண முடியவில்லை. எனக்கும் வயதாகிக் கொண்டே போகின்றது. முப்பத்து மூன்று ஆண்டு காலமாக நான் கிறிஸ்தவனாக இருந்து வந்துள்ளேன். ஆண்டவர் கூறுவது எவ்வளவு பைத்தியக்காரத் தனமாகத் தோன்றினாலும், அதை முதலில் செய்! ஆண்டவர் சொன்னபடியே செய்! நான் திரும்பி 'சாடில்'லுக்குச் சென்றேன், கல்மழை அதிகமாகிக் கொண்டே வந்தது. இருளும் அதிகமாகச் சூழ்ந்தது. நான் சற்று அமர்ந்து, என் சட்டையை தூரப் பார்வைக் கண்ணாடியின் மேல் போட்டேன். “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?'' என்று வியந்தேன். ''நான் ஏன் இங்கு மறுபடியும் வரவேண்டும்?'' 66நான் சில நிமிடங்கள் காத்திருந்தேன். நான் எழுந்தபோது ஒரு சத்தம் மிகத் தெளிவாக என்னிடம், ''நானே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர்! நானே காற்றையும் மழையையும் படைத்தேன்“ என்றது. நான் என் தொப்பியைக் கழற்றினேன். ''மகத்தான யேகோவாவே, அது நீர் தானா?'' என்று கேட்டேன். அவர், ''கடலின் மேல் காற்றடிக்காதபடிக்கு அதட்டியவர் நானே! அலைகள் தாழும்படி செய்தவர் நானே! வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர் நானே அணில்கள் தோன்ற நீ கட்டளையிட வேண்டுமென்று உன்னிடம் கூறியவர் நானல்லவா? நீ கட்டளையிட்ட மாத்திரத்தில் அவை சிருஷ்டிக்கப்பட்டதல்லவா? நானே தேவன்'' என்றார். ஒரு சத்தம் உங்களிடம் பேசினால், அது கூறுவதை வேத வாக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அது வேத வாக்கியங்களுடன் பொருந்தாவிட்டால், அதை விட்டுவிடுங்கள். அது எவ்வளவு தெளிவாக இருந்தாலும், அதை விட்டு அகன்று விடுங்கள். நான், ''ஆம் ஆண்டவரே“ என்றேன். அவர், ''அந்தப் புயல் காற்றுக்குக் கட்டளையிடு. அது மறைந்துவிடும்'' என்றார். இந்த வேதாகமம் எனக்கு முன்பாக இருக்கிறது. எனது ஜீவனே அதில்தான் இருக்கிறது. நான் எழுந்து, “ஆண்டவரே, உமது சத்தத்தை நான் ஒரு போதும் சந்தேகிக்கமாட்டேன்'' என்று கூறிவிட்டு, ''மேகங்களே, பனிக்கட்டியே, மழையே, கல்மழையே! நீங்கள் வந்திருப்பது எனக்கு விருப்பமில்லை. உங்கள் இடங்களுக்குச் செல்லும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டளையிடுகிறேன். எங்கள் வேட்டைப் பயணம் முடிவடைந்து, சகோதரர்களை நான் பிரிந்து செல்லும் வரை, சூரியன் உடனே தோன்றி, நான்கு நாட்கள் தோன்றி, நான்கு நாட்கள் சூரிய வெளிச்சம் உண்டாக வேண்டும்'' என்று கூறினேன். 67காற்று, ''ஊ ஊ ஊ ஊ ஷ்'' என்று வீசிக் கொண்டிருந்தது. அது 'ஊஷ்' என்று சத்தமிட்டுக் கொண்டே சென்று, பின்னர், 'வ்யூ, வ்யூ' என்ற விதமாய் சப்தம் குறைந்து, முடிவில் நின்று போயிற்று. நான் அசையாமல் நின்றேன். அங்கிருந்த என் சகோதரர்கள் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று வியந்தனர். கல்மழையும், மழையும் நின்று போயின. மலை வழியாக காற்று சுழன்று கொண்டே வந்து, மேகங்களைத் தூக்கிச் சென்றது. அவை நாலா திசைகளிலும் சிதறிச் சென்றன. சில நிமிடங்களில் சூரிய வெளிச்சம் நன்கு பிரகாசித்தது, வெப்பமானது, நான் கூறுவது உண்மை! அது உண்மையென தேவனறிவார். என் தொப்பியைக் கழற்றின நிலையில் நான் சுற்று முற்றும் பார்த்தேன். “எனக்கு மெய்சிலிர்த்தது... நான், “சிருஷ்டி கர்த்தருடைய கரங்களில் எல்லாமே உள்ளது. அவர் என்னிடம் என்ன கூறினார்?'' என்று சிந்திக்கலானேன். என் துப்பாக்கியைக் கையிலெடுத்துக் கொண்டு, தூரப் பார்வை கண்ணாடியை துடைத்துக் கொண்டு, மலையிலிருந்து கீழே இறங்கிச் சென்றேன். அப்பொழுது ஏதோ ஒன்று, “இந்த வனாந்தரத்தில் என்னுடன் கூட நீ ஏன் நடக்கக் கூடாது?'' என்று கேட்டது. நான், “ஆம், ஆண்டவரே, என் மனப்பூர்வமாக அப்படிச் செய்வேன். உம்முடன் கூட நடப்பதென்பது இவ்வுலகிலுள்ள எல்லாவற்றையும் விட மிகவும் மகத்துவமானது'' என்றேன். எனவே, என் துப்பாக்கியைத் தோளில் தொங்க வைத்துக் கொண்டு, காட்டின் வழியாக நடந்து சென்றேன் (அங்கிருந்த மரங்களின் மேல் கோடாரி இதுவரை பட்டதேயில்லை. அவையாவும் புதிதாக வளர்ந்த மரங்கள்). 68நான் அவ்விதம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த இடத்திற்கு சென்றால் என்ன? நேற்று எங்கள் விவாக நாள். என் மனைவி மேடாவைக் கெளரவப்படுத்தும் விதமாக, அவளைச் சிந்தனையில் கொண்டு, “சில நிமிடங்கள் அந்த இடத்தில் கழிக்கலாமே” என்னும் உணர்வு உண்டானது. ''அந்த இடம் வரை நான் நடந்து சென்று, எங்கள் விவாக நாளை நினைவு கூர்ந்து அந்த கறுத்த மரங்களின் மற்ற பாகத்தில் நடந்து, 'கோரல் உச்சி'யில் (Corral Peak) நடந்து, மற்ற வழியாக சென்று, இவ்விதமாக நடந்து சென்று, குதூகலிப்பேன்“ என்று எண்ணினேன். அப்பொழுது நான், “பிதாவே, நீர் என்னுடன் நடந்து வருகிறீர் என்று நானறிவேன். தேவனைக் காட்டிலும் நான் கூட நடந்து செல்லக் கூடிய மகத்தானவர் வேறெவருமில்லை'' என்றேன். நான் மலைகளை விட்டு கீழே இறங்கி வந்த பிறகும் சூரிய வெளிச்சம் உண்டாயிருந்தது. 69பெட்ரோல் நிரப்பும் ஸ்தலங்களில் நான் காரை நிறுத்தினேன். நான்கு நாட்கள் கழித்தும், அந்த பாகத்தில் மழை பெய்யவேயில்லை. ''எவ்வளவு அருமையான நாள்! என்று ஒவ்வொரு நாளும் எண்ணினேன். தினந்தோறும் சூரியன் பிரகாசித்தது. அது சரியா சகோதரர்களே? (சகோதரர்கள் 'ஆமென்' என்கின்றனர் - பதிப்பாசிரியர்) பாருங்கள்? வானத்தில் சிறிதளவு மேகம் கூட இல்லை. நான் பெட்ரோல் நிரப்பும் ஸ்தலத்தையடைந்து, அந்த ஆளிடம், ''மிகவும் அருமையான நாள் அல்லவா?'' என்றேன். ''ஆம்'' என்றார். ''பயங்கர வெப்பமான நாளல்லவா?'' என்றேன். அதற்கு அவர், ''உங்களுக்குத் தெரியுமா? ஒரு வினோதமான காரியம் சம்பவித்தது. பயங்கரப் பனிப்புயல் வரப்போகின்றது என்று அவர்கள் முன்னறிவித்தனர். ஆனால் திடீரென்று அது நின்றுவிட்டது'' என்றார். 70நான் நியூ மெக்சிகோவை அடைந்தேன். நானும் என் மகனும் ஒரு பொருளை வாங்க அங்கு ஒரு சிறிய கடைக்குச் சென்றோம். நான் அங்கிருந்தவரிடம், ''அருமையான நாளல்லவா?'' என்றேன். “ஆம்'' என்றார். அவர், ''மிகவும் உலர்ந்து காணப்படுகின்றது'' என்றேன். “ஆம், சில நாட்களாகவே உலர்ந்துள்ளது'' என்றார். “நீங்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர்களா?” என்று கேட்டேன். அவர், ''இல்லை! நான் விஸ்கான்சினை (Wisconsin) சேர்ந்தவன். ஆனால் இருபது ஆண்டு காலமாக இங்கேயே வாழ்ந்து வருகிறேன். எனவே, இதையே என் சொந்த இடமாக பாவிக்கலாம்'' என்றார். “அப்படியானால் இங்கு நீங்கள் குடி வந்திருக்கிறீர்கள். மிகவும் தூசி படிந்திருந்ததாகக் காணப்படுகின்றதே'' என்றேன். அதற்கு அவர், ''ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. பனிப்புயல் வருமென்றும், அதிக பனி பெய்யும் என்றும் வானிலை முன்னறிவிப்பு உண்டாயிருந்தது. உண்மையில் அந்தப் பனிப் புயல் தொடங்கியது. ஆனால் அது நின்றுவிட்டது'' என்றார். “அப்படியா?'' என்றேன். நான் வீட்டையடைந்தேன். பனிப்புயல் வரப்போவதாகவும் அந்த வழியே போகக் கூடாதென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சகோதரன் டாம் கூறினார். அவர் நாட்டைக் கடந்து வந்தார். ஆனால் ஒரு துளி மழையோ அல்லது வேறெதுவோ உண்டாயிருக்கவில்லை. அவர் எப்பொழுதும் போலவே இன்றும் தேவனாயிருக்கிறார். பாருங்கள்? 71நான் மலையில் நடந்து சென்று கொண்டேயிருந்தேன்... ஒலி நாடாவின் இந்தப் பாகத்தை என் மனைவி கேட்கமாட்டாள் என்று நம்புகிறேன். பாருங்கள்? உங்களிடம் ஒன்றைக் கூறப் போகின்றேன். நான் உங்களிடம் உண்மையையே கூறுகின்றேன். அதுதான் சரியான முறையாகும். ஒவ்வொரு விவாக நாளன்றும் நான் இத்தகைய வேட்டைப் பயணம் செல்வதைக் குறித்து என் மனைவி ஏன் முறுமுறுப்பதில்லையென்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. நான் என்ன நினைத்தேன் தெரியுமா? விவாக நாளன்று அநேகர் வீட்டிற்கு வருவார்கள். நான் பயந்த சுபாவமுடையவன் (nervous) என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? எப்பொழுதும் நான் தேவனைக் குறித்தும், வேதத்தைக் குறித்துமே பேச விரும்புகிறேன். எனவே, சில நாட்கள் நான் வேட்டைக்குச் சென்றால் அவளுக்குத் தொல்லை சற்று நீங்கியிருக்கும் என்று நினைக்கிறாளோ என்னமோ! என்று எண்ணினேன். 72அதற்காக அவளிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இத்தகைய சிந்தை என்னில் எழுந்ததற்காக நான் தேவனிடம் மன்னிப்பு கோருகிறேன். ஏனெனில் இந்த எண்ணம் என் மனதில் எழுந்த வண்ணமாக இருந்தது. அவள் வீட்டு வேலை அதிகம் செய்பவள். சமையலறையிலோ அல்லது வேறெங்காவது அவள் சதா வேலை செய்து கொண்டேயிருப்பாள்... அவளை அறிந்துள்ள உங்களுக்கு துணி சலவை செய்யும் இயந்திரத்தை அவள் எப்பொழுதும் இயக்கிக் கொண்டேயிருப்பாள் என்பது தெரியும். அவள் வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் அவளிடம், ''துணி சலவை செய்வதை நிறுத்திவிட்டு வந்து என்னுடன் பேசிக் கொண்டிரு. நான் உன்னை நேசிக்கிறேன். நீயும் என்னை நேசிக்கிறாய் என்று நீ கூற விரும்புகிறேன்'' என்பேன். “உங்களை நான் நேசிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும்'' என்று அவள் கூறிவிட்டு, மறுபடியும் துணி சலவை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபடுவாள். ''அதை நிறுத்திவிட்டு, என்னுடன் உட்கார்ந்து பேசு'' என்பேன். “ஓ, பில் (Bill), எனக்கு எத்தனையோ வேலையிருக்கிறது'' என்பாள். “நான் வேட்டைக்குச் சென்றால், வேலை செய்வதற்கு அவளுக்கு அதிக நேரம் கிடைக்கு மென்று எண்ணுகின்றாள் போலும்'' என்று நினைத்துக் கொண்டேன். வேதாகமம் எனக்கு முன்னால் இருக்கிறது. நான் தேவனுடைய வார்த்தைக்கு முன்னால் உள்ளதை நீங்கள் காண்கிறீர்கள். நான் மலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஏதோ ஒன்று என்னில் சம்பவித்தது. 73அப்பொழுது தேன் நிலவுக்கு என் மனைவியை அங்கு அழைத்து சென்ற சம்பவம் எனக்கு ஞாபகம் வந்தது. அவள் கறுப்புமயிர் கொண்டவளாய், பழுப்பு நிறக் கண்கள் உடையவளாய் அப்பொழுது மிகவும் அழகாக இருந்தாள். அந்த மரங்களைக் கடந்து செல்வதற்காக சில நேரங்களில் அவளைத் தூக்கிவிட்டு, இப்படியாக கரடி வேட்டையாடும் இடத்தையடைய அவளுக்கு உதவி செய்தேன். நான் கரடியை வேட்டையாடிக் கொல்வதை அவளுக்குக் காண்பிக்க விரும்பினேன். அவள் அப்பொழுது என் 'மாட்டுக்காரப் பையனின்' காலணியை (Cow boy boots) போட்டுக் கொண்டிருந்தாள். (அது இருபத்திரண்டு அல்லது இருபத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். எங்களுக்கு 1941ல் விவாகம் நடந்தது) மரங்களைக் கடப்பதற்கென, அவளைத் தூக்கிச் சென்றேன். “இப்பொழுது பாவம்! அவள் என் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்கிறாள். அவளுடைய தலைமயிர் நரைத்துவிட்டது என்றெல்லாம் எண்ணியவாறே நடந்து சென்று கொண்டிருந்தேன். (சகோதரன் பிரான்ஹாம் கனைக்கிறார் - ஆசி). சில நாட்களாக நான் சவரம் செய்யவில்லை. எனக்கும் நரைத்துவிட்டதென்று அப்பொழுது நான் உணர்ந்தேன். ஏனெனில் நரைத்த தாடி வளர்ந்திருந்தது. அப்பொழுது நான், ”கிழவனே, உன் காலமும் முடிவடையப் போகின்றது. நீ ஏதாவது செய்ய நினைத்திருந்தால், அதை துரிதமாகச் செய். உனக்கும் வயதாகிக் கொண்டே போகின்றது“ என்று உள்ளத்தில் எண்ணினேன். 74அவ்விதம் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஏதோ ஒன்று சம்பவித்தது. திடீரென்று (என் நடத்தையிலும் என் கொள்கையிலும்) நான் ஒரு வாலிபனைப் போல் மாறினேன். என்னை ஒரு வாலிபனாகப் பாவித்துக் கொண்டேன். நான் தலைகுனிந்த வண்ணம் இருந்தேன். நிமிர்ந்து பார்த்த போது, என் மனைவி கரங்களை விரித்தபடி எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்தாள். என் முகத்தை தடவிக் கொண்டே, “மேடா, நீயா அது, அன்பே?'' என்று கேட்டேன். நான் இங்குமங்கும் பார்த்தேன். “என்ன நேர்ந்தது?'' என்று நினைத்துக் கொண்டேன். ”அப்பொழுது தான் நான் அவருடன் கூட நடந்து கொண்டிருக்கிறேன்“ என்னும் உணர்வு வந்தது. அதன் பின்பு என் உருவம் மாறினது. நான் மறுபடியும் கிழவனானேன். எனக்கு நேர்ந்த தரிசனம் என்னை விட்டகன்றது. நான் நின்று, என் தொப்பியைக் கழற்றி என் இருதயத்தின் மேல் வைத்துக் கொண்டு, “இயேசுவே, என் இருதயம் எத்தனையோ ஆண்டு காலமாக பாரமாயிருந்து வருகிறது. அவ்விதம் பாரமாயுள்ளது என்று நான் உமக்குச் சொல்லத் தேவையில்லை. நான் மனஸ்தாபப்பட்டேன், எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நான் செய்து கொண்டு வருகிறேன். இருப்பினும் ஏன் இந்தப் பாரம் என்னைவிட்டு அகலவில்லை?'' என்று கேட்டேன். 75நான் இவ்விதம் நடந்துசென்று, எனக்கு முன்னால் முப்பது அல்லது நாற்பது கெஜம் தூரமுள்ள குன்றையடைந்து அதன் மேலேறிச் சென்றேன். நான் மிகவும் பலவீனமாயிருப்பது போன்ற ஒரு உணர்ச்சி எனக்குண்டானது. நான் குன்றின் உச்சியையடைந்த போது, மிகவும் பலவீனமடைந்து, தள்ளாட ஆரம்பித்தேன். நான் தொப்பியைப் போட்டுக் கொண்டு என் தலையை அங்கிருந்த புன்னை மரம் ஒன்றின்மேல் சாய்த்தேன். அவ்விதம் நான் நின்று கொண்டிருந்தபோது, சூரிய வெப்பம் என் முதுகின் மேல் விழுந்தது. ''அந்த மழையையும் காற்றையும் போக்கின தேவன்'' என்று எண்ணிக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது 'பட், பட்' என்று ஏதோ ஒரு சப்தம் கேட்டது. “அது என்னவாயிருக்கும்? தண்ணீரெல்லாம் உலர்ந்துவிட்டதே!” என்று எண்ணிக் கொண்டே கீழே நோக்கினபோது, என் கண்ணீர் என் நரைத்த தாடி வழியாய் வழிந்தோடி, தேவன் உலர வைத்திருந்த அந்த உலர்ந்த இலைகளின் மீது விழுவதைக் கண்டேன். நான் மரத்தின் மேல் தலை சாய்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தேன். என் கரங்கள் கீழே தொங்கிக் கொண்டிருந்தன. என் ஒரு கை துப்பாக்கி கட்டியிருக்கும் கயிற்றுக்குள் (Sling) இவ்விதம் போடப்பட்டிருந்தது. நான் அங்கு நின்று கொண்டே அழுதேன். 76நான், “ஆண்டவரே, உமது ஊழியக்காரனாயிருக்க நான் பாத்திரவானல்ல. நான் அநேக தவறுகள் இழைத்திருக்கிறேன், வேண்டுமென்று நான் தவறுகள் செய்யவில்லை. ஆண்டவரே, நீர் எனக்கு நல்லவராகவே இருந்து வந்திருக்கிறீர்” என்றேன். என் கண்கள் அப்பொழுது மூடப்பட்டிருந்தன. அப்பொழுது ஏதோ அசைவது போன்ற சத்தத்தைக் கேட்டன. கண்களைத் திறந்து பார்த்தபோது, எனக்கு முன்னால் மூன்று மான்கள் நின்று கொண்டிருந்தன, நான், “சகோதரன் ஈவான்ஸுக்கு ஒன்றும், சகோதரன் உட்டுக்கு ஒன்றும்... அதோ மூன்று மான்கள். இதற்காகவே நான் காத்துக் கொண்டிருந்து, காடுகளில் நடந்து சென்றேன்” என்று எண்ணியவாறே துப்பாக்கியைக் கையிலெடுத்தேன். ''இதை என்னால் செய்யமுடியாது, அப்படிச் செய்யமாட்டேன் என்று நான் ஆண்டவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்“ என்று கூறி என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அப்பொழுது ஏதோ ஒன்று, “ஆனால் அவை உன் முன்னால் நிற்கின்றனவே!'' என்றது. நான், “அப்படித்தான் ஒரு மனிதன் ஒரு முறை தாவீதிடம், கர்த்தர் அவரை (சவுலை) உன் கையில் ஒப்புக் கொடுத்தார் என்றான்” என்று நினைத்துக் கொண்டேன். உங்களுக்கு சவுல் ராஜா வைப்பற்றி தெரியும். யோவாப் தாவீதிடம், “அதோ அவர் அங்கு படுத்துக் கொண்டிருக்கிறார். அவரைக் கொன்றுபோடும்'' என்றான். “கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரைக் கொல்லாதபடி, கர்த்தர் என்னைக் காப்பாராக'' என்றான் தாவீது. 77அந்த மான்கள் அங்கு நின்றுகொண்டு என்னையே நோக்கிக் கொண்டிருந்தன. நான் ''அவை தப்பிப் போகமுடியாது தப்ப அவைகளுக்கு வழியேயில்லை. அவை முப்பது கெஜ தூரம் கூட இல்லை. என்னிடம் துப்பாக்கியும் இருக்கிறது'' என்று எண்ணினேன். அதே சமயத்தில், “அதை என்னால் செய்ய முடியாது. என்னால் முடியவே முடியாது'' என்றேன். அது ஒரு பெண் மானும், இரண்டு குட்டிகளுமாயிருந்தன. என்னால் துப்பாக்கியை எடுக்கவே முடியவில்லை. நான் அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தேன் நான், ''அவ்விதம் செய்ய மாட்டேனென்று தேவனிடம் வாக்கு கொடுத்திருக்கிறேன். அந்த சகோதரருக்கு இந்த மான்கள் தேவையில்லை. என்னால் முடியாது என்னால் முடியவே முடியாது” என்று எண்ணினேன். 78அப்பொழுது அந்தப் பெண் மான் நடந்து அருகில் வந்தது. கவனியுங்கள், நாலைந்து நாட்களாக நூறு பேர்கள் மான்களைச் சுட்ட வண்ணம் இருந்தனர். அதனால் மான்கள் பயம் கொண்டிருக்க வேண்டும். சிகப்பு வண்ணத்தைக் கண்ட மாத்திரத்தில் அவை ஓடி மறைந்துவிடும் (நான் சிகப்பு சட்டையும் சிகப்பு தொப்பியும் அணிந்திருந்தேன்). ஆனால் இந்த மூன்று மான்களும் அங்கேயே நின்றுகொண்டு என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன. நான் பெண் மானிடம், “தாயே, உன் குட்டிகளை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றுவிடு. நீ இப்பொழுது என் கைக்குள் இருக்கிறாய். உன் உயிரும் என் கைக்குள் இருக்கிறது. ஆனால் நான் உன்னைத் துன்புறுத்தப் போவதில்லை. அவ்விதம் நான் ஆண்டவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்'' என்றேன். ஆனால் அந்தப் பெண் மானோ என்னருகில் வந்து என்னை உற்றுப் பார்த்தது. அந்த குட்டிகளும் கூட அருகாமையில் வந்தன. (சகோ. பிரான்ஹாம் பீடத்தை இருமுறை தட்டுகிறார் - ஆசி). என் கையிலிருந்து புல்லைத் தின்னும் தூரமளவுக்கு அவை அருகாமையில் வந்தன. காற்று அவைகள் மேல் வீசினது. எனவே பெண் மான் திரும்பி சற்று தூரம் நடந்தது. குட்டிகளும் அதைப் பின் தொடர்ந்தன. பின்பு அவை மறுபடியும் என் பக்கம் திரும்பி, என்னருகில் நடந்து வந்தன. நான் அசையாமல் அங்கேயே நின்றேன். நான், ''நீங்கள் காட்டுக்குள் சென்றுவிடுங்கள். எனக்கும் காடு என்றால் அதிகப் பிரியம். நீங்கள் உயிர் வாழுங்கள். உங்கள் உயிர் என் கரங்களில் இருக்கிறது. ஆனால் நான் உங்களை சும்மா விட்டுவிடுகிறேன். உங்களால் தப்பிச் செல்லவே முடியாது என்று உங்களுக்குத் தெரியும்“ என்றேன். மூன்றே வினாடிகளில் அவை மூன்றையும் என்னால் கொன்றுவிட முடியும். என்னால் எவ்வளவு வேகமாக அவைகளைச் சுட முடியுமோ, அவ்வளவு வேகமாக அவை என்னருகில் இருப்பதால் தப்பி ஓடிவிட முடியாது. எனவே ''உங்களை விட்டுவிடுகிறேன். நீங்கள் சென்று உயிர் வாழுங்கள்'' என்றேன். நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அவை நடந்து காட்டிற்குள் சென்றுவிட்டன. 79என் முகத்தை நான் இப்படி துடைத்துக் கொண்டேன். அப்பொழுது ஒரு சம்பவம் நடந்தது. அந்தத் தெளிவான வானத்திலிருந்து - மேகத்திலிருந்து அல்ல - ஒரு சத்தம் என்னுடன் பேசினது. இது சிறிது நேரத்திற்குள் நடந்தது. அந்த சத்தம் என்னிடம், ''உன் வாக்கை நீ நினைவு கூர்ந்தாய் அல்லவா?'' என்றது. நான், “ஆம், ஆண்டவரே'' என்றேன். அவர், ''நானும் என் வாக்கை நினைவு கூருவேன். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை'' என்றார். உடனே என் இருதயத்திலிருந்த பாரம் அகன்றது. அதன் பின்பு அது வரவேயில்லை. இனிமேல் அது வராமலேயே இருக்கட்டும். நான் டூசானுக்கு வந்தேன். அநேக வினோதமான சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு முன்பு அத்தனை சம்பவங்கள் நிகழ்ந்ததில்லை. அந்த நேரத்திற்காகவே கர்த்தர் இவையனைத்தும் செய்கிறார் என்று நம்புகிறேன். அந்நேரம் அருகாமையுள்ளது என்று நம்புகிறேன். ஏனெனில் ஏதோ ஒன்று நிகழவேண்டும். 80நாம் மாத்திரம் சத்தியத்தை ஏற்றுக் கொண்டால்! நாம் மாத்திரம் வேதம் நமக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை அறிந்து கொண்டால்! ''உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்“. நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும், நாம் அதை விசுவாசிக்கிறோம் என்று சொல்கிறோம். அது உண்மையென்று நமக்குத் தெரியும். ஆனால் உண்மையில் அதை நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை'' உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்'' (உங்களிலிருக்கும் எது பெரியது? அதுதான் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து. கிறிஸ்துவுக்குள் இருந்த அதே தேவன் உங்களுக்குள் இருக்கிறார்.) உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்'' அவர் உங்களுக்குள் இருப்பாரெனில், இனி ஜீவிப்பது நீங்களல்ல. பாருங்கள்? அவரே உங்களுக்குள் ஜீவிக்கிறார். ஏதாவதொன்றைக் குறித்து இனி நீங்கள் நினைக்கமாட்டீர்கள். அதைக் குறித்து அவர் என்ன கூறுகிறாரோ அதுவே முக்கியம் வாய்ந்ததாயிருக்கும். பாருங்கள்? அவர் உங்களுக்குள் இருப்பாரெனில் அவர் கூறியிருப்பதை ஒருபோதும் மறுக்கமாட்டார். அவரால் அப்படிச் செய்யமுடியாது. அவர் கூறியுள்ளதைக் காத்துக்கொள்வார். தம்மை ஒருவர் மூலம் நிரூபிக்க வேண்டுமென்று எண்ணி, அந்த மனிதனைக் கண்டுபிடிக்க அவர் முயல்கிறார். 81எல்லோருக்கும் அவர் அவ்வண்ணமே செய்ய வேண்டுமென்ற அர்த்தமில்லை. மோசே இஸ்ரவேலரை வழி நடத்திச் சென்றபோது, ஒருவன் மாத்திரமே இருந்தான். அவன்தான் மோசே. மற்றவர்கள் அவன் மூலம் அளிக்கப்பட்ட செய்தியைப் பின்பற்றினர். பாருங்கள்? சிலர் அவனைப் பாவனை செய்ய போலியாக எழும்பினர். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம், ''உன்னை அவர்களிடமிருந்து பிரித்துக்கொள்“ என்றார் - பூமி அவர்களை விழுங்கின. பாருங்கள்? பாருங்கள்? 82இப்பொழுது உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் அவர் இயேசுவுக்குள் இருந்தது போன்றே உங்களுக்குள்ளும் இருத்தல். ஏனெனில் தேவனுடைய அனைத்தையும் அவர் கிறிஸ்துவுக்குள் ஊற்றிவிட்டார். கிறிஸ்துவினுடைய அனைத்தையும் அவர் சபைக்குள் ஊற்றிவிட்டார். அது தான் தேவன் உங்களுக்குள் இருப்பது. ''உங்களிலிருப்பவர்“. காற்றும் கடலும் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்ததில் வியப்பொன்றுமில்லை. அவருடைய வார்த்தைக்கு அவை கீழ்ப்படிந்தன. ஏனெனில் அவை அவர் மூலமாய் உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தைகளாம். அவர் ஒரு மனிதன்; ஆனால் அவர் வார்த்தை மாமிசமானவர் - பாருங்கள்? அவர் பேசினபோது, அது தேவன் அவர் உதடுகளின் மூலம் பேசின சொற்களாயிருந்தது. பாருங்கள்? ஆகவே காற்றும் கடலும் அவருக்குக் கீழ்ப்படிந்ததில் வியப்பொன்றுமில்லை. காற்றையும் கடலையும் சிருஷ்டித்த அதே தேவன் அவருக்குள் வாசம்பண்ணினார். சற்று யோசித்துப் பாருங்கள் சற்று ஆழமாய் சிந்தனை செய்து பாருங்கள் - ஏனெனில் நான் முடிக்கும் தருணத்தில் வந்திருக்கிறேன். அவர் கட்டளையிட்ட மாத்திரத்தில் பிசாசுகள் செயலற்றுப் போயின என்பதில் வியப்பொன்றுமில்லை. மரித்து மண்ணிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் அவருடைய வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் அப்படியே இருக்கவில்லை. ஏனென்றால் அவரே வார்த்தையாயிருந்தார், மரித்து நான்கு நாட்களாகி அழுகி நாற்றமெடுத்துக் கொண்டிருந்து, மூக்கானது உள்ளே விழுந்து போயிருந்த அச்சமயத்தில் “லாசருவே வெளியே வா” என்று அழைத்தார், இறந்து போயிருந்த அம்மனிதன் காலூன்றி எழுந்து நின்றான். ஏன்? அது தேவன். கிறிஸ்துவுக்குள்ளிருந்தவர் தேவன் அவருடைய வார்த்தைக்கு முன்னால் மரித்தோரும் நிற்க முடியவில்லை. கிறிஸ்துவுக்குள் தேவன் இருந்தார். 83கர்த்தர் காற்றை சிருஷ்டித்தார் என்பது நினைவிருக்கட்டும். அவரே கடல் அலைகளையும் படைத்தார். அது வெறும் தண்ணீர். ஆனால் பிசாசு அதற்குள் புகுந்து கொண்டு, நிர்மூலத்தைக் கொண்டு வரக் கருதி, அதை உருண்டோடச் செய்தான். அது போன்று, மனிதர் தேவ புத்திரராயிருக்க வேண்டுமெனும் நோக்கத்துடன் தான், கர்த்தர் மனிதனைப் படைத்தார். ஆனால் பிசாசு அவனுக்குள் நுழையும் போது தொந்தரவு ஏற்படுகின்றது. பிசாசு காற்றுக்குள் நுழைந்து புயலை உண்டு பண்ணினான். அப்பொழுது காற்றைப் படைத்த சிருஷ்டிகர், “திரும்பிப் போ, நான் தான் உன்னை சிருஷ்டித்தேன்'' என்று சொல்ல முடியாதா என்ன? அதே சிருஷ்டிகர் தாம் அன்று நான் சென்றிருந்த மலையின் மேல் நின்று கொண்டிருந்தார் அல்லவா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) பாருங்கள்? அவர் தாம் ஒரு மீன் துண்டை எடுத்துப் பிட்டு, அந்த துண்டுகளை அதிகரிக்கும்படி செய்தவர் அல்லவா? அவர் அவ்விதம் பிட்க வேண்டிய அவசியம் கூட இல்லை; அவர் கட்டளையிட்டால் மாத்திரம் போதும். அணில்களை சிருஷ்டித்தவரும் அதே சிருஷ்டிகர் அல்லவா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) பாருங்கள்? கிறிஸ்துவுக்குள் இருந்தவர் இப்பொழுது நமக்குள் இருக்கிறார். பாருங்கள். அவர் செய்த அதே கிரியைகளை இப்பொழுதும் செய்து கொண்டு வருகிறார். அவருடைய வார்த்தைக்கு முன்னால் மரித்தோரும் நிற்க முடியவில்லை. 84தற்காலத்தில், மரித்துப் போன ஐந்து பேர் உயிரோடெழுப்பப்பட்டதாக ஐந்து ஆதாரப்பூர்வமான வாக்கு மூலங்கள் நம்மிடமுள்ளன. கர்த்தர் தரிசனம் அருளி, அங்கு நாம் சென்று, அவர்கள் உயிரோடெழுப்பப்பட்டனர். தான் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே மரித்துப் போன ஒருவர் உயிரோடெழுப்பப்பட்டு, இன்று நம்மிடையே உயிருள்ளவராய் அதோ அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் மாரடைப்பால் இறந்துபோனார். ஆனால் இன்று உயிருள்ளவராக அவர் நம் மத்தியில் இருக்கிறார். அவருடைய மனைவி ஒரு நர்ஸ். நாங்கள் அங்கு சென்றிருந்தோம். உயிர் அவரை விட்டுப் பிரிந்திருந்தது. அவருடைய கண்கள் மூடியிருந்தன. இன்று அவர் உயிருள்ளவராக இருக்கிறார். பாருங்கள்? ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் இங்கிருப்பவர் - நம்மிலிருப்பவர் - பெரியவர். பாருங்கள்? 85அவர் பெரியவர்! அவர் சிருஷ்டி கர்த்தராகிய தேவன். காற்றும் கடலும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். பிசாசுகள் அவர் முன்னிலையில் தங்கள் வல்லமையையிழந்தன. இயற்கை முழுவதுமே அவருக்குக் கீழ்ப்படிந்தன. ஏனெனில் அவரே இயற்கையை சிருஷ்டித்தவர். அதை நாம் நினைவில் கூரும்போது, பிசாசின் வல்லமையை அது போக்குவதாயுள்ளது. அதை நாம் புரிந்து கொள்கிறோம். காற்றும் கடலும் தங்களைப் படைத்த சிருஷ்டிகருக்கு கீழ்ப்படிந்தன. பாருங்கள்? சிருஷ்டி கர்த்தர் மாத்திரமே அவ்விதம் செய்ய முடியும். ஏனெனில், “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்'' உலகத்திலிருக்கிறவன் கொந்தளிப்பை உண்டாக்குகிறவனாயிருக்கிறான். ஆனால் உங்களிலிருக்கிறவரோ சிருஷ்டி கர்த்தர். அவரே காற்றைப் படைத்தவர். காற்றிலுள்ள பிசாசை அவர் கடிந்து கொள்ள முடியும். அப்பொழுது அது அமைதியாகின்றது. புயலிலுள்ள பிசாசை அவர் அதட்ட முடியும். அப்பொழுது புயல் உண்டாகாது. அவரே சிருஷ்டி கர்த்தர். ''உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்''. பாருங்கள், 86“பிசாசு உலகத்துக்குரியவன். உலகம் அவனுக்குச் சொந்தமாயிருந்து வந்துள்ளது” அதிகாலையின் மகனாகிய விடி வெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே!'' (ஏசா.14:11). பாருங்கள். அவன் வானத்திலிருந்து தள்ளப்பட்டு பூமிக்கு வந்த முதற்கு, இந்த உலகம் அவனுக்குச் சொந்தமாயிருந்து வருகிறது. பாருங்கள். அவனே கிறிஸ்துவினிடம், “இந்த இராஜ்யங்கள் அனைத்தும் எனக்குச் சொந்தமானவை. என் விருப்பப்படி அவைகளுக்குச் செய்கிறேன்'' என்றான். அவனுக்கு அவை யாவும் சொந்தமானவை. அவன் தான், ''உலகத்திலிருக்கிறவன்”. யோவானும் தன் சீஷர்களிடம், ''வரப்போகும் அந்திக் கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். அது இப்பொழுதே கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்து வருகிறது. ஆனால் பிள்ளைகளே, நீங்கள் இவ்வுலகத்தாரல்ல. நீங்கள் தேவனுடையவர்கள். உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர்“ என்று கூறினான். அதுதான் கிறிஸ்து உங்களில் இருப்பதாகும். 87வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த கர்த்தர் இயேசு கிறிஸ்து என்னும் மனிதனின் மூலம் வெளிப்பட்டார். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து உலகத்தைத் தம்முடன் ஒப்புரவாக்கிக் கொண்டார். நீங்கள், ''சகோதரன் பிரான்ஹாமே, அது தேவனுடைய குமாரன் அல்லவா?“ எனலாம். சரி, அவர் நித்திய தேவன் தானா என்று பார்ப்போம். யோசுவாவிலிருந்தவர் சூரியனைக் காட்டிலும் பெரியவர். யோசுவா உங்களையும் என்னையும் போன்று பாவத்தில் பிறந்த ஒரு சாதாரண மனிதன். யோசுவாவிலிருந்தவர், தேவனுடைய கட்டளையினால் இயங்கிக் கொண்டிருக்கும் சூரியனிலும் பெரியவர். சூரியன், வெளிச்சம் தந்து, சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார். அது தேவனுடைய நியமங்களினால் ஆளுகை செய்யப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் யோசுவாவிலிருந்தவர் தேவனுடைய கட்டளைகளை விடப் பெரியவர். ஏனெனில் சிருஷ்டி கர்த்தரே யோசுவாவுக்குள் இருந்தார். யோசுவா நிமிர்ந்து பார்த்து, “சூரியனே, சந்திரனே, நான் யுத்தத்தை முடிக்கும் வரைக்கும் நீங்கள் இருக்கும் இடங்களில் தரித்து நில்லுங்கள்'', என்று கட்டளையிட்டபோது, சிருஷ்டி கர்த்தர் அவனுக்குள் இருந்தார். சூரியனும் சந்திரனும் அவனுக்குச் கீழ்ப்படிந்தன. யோசுவாவிலிருந்தவர் சூரியனிலும் சந்திரனிலும் பெரியவர். 88மோசேயிலிருந்தவர் எகிப்திலும் பெரியவர். எகிப்தின் சேனை உலகிலேயே மிகவும் வீரமுள்ள சேனையாயிருந்தது. அவர்கள் முழு உலகத்தையுமே ஜெயித்தனர். ஆனால் மோசேயிலிருந்தவர் எகிப்தைக் காட்டிலும் பெரியவர். ஏனெனில் மோசே எகிப்தை மேற்கொண்டான். மோசேயிலிருந்தவர் இயற்கையிலும் மேலானவர். தேவன் தமது வார்த்தையை மோசேக்குக் கொடுத்து, “நீ சென்று சூரியன் பிரகாசிக்காமல் இருக்கும்படிக்குக் கட்டளையிடு'' என்று கூறினார் என்பதை நீங்கள் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? சூரியனை பிரகாசிக்கும்படி செய்து மேகங்கள் திரும்பிப் போக வேண்டுமென்று கட்டளையிட முடியும் அல்லது சூரியன் இருளடையச் செய்யவும் அவரால் முடியும். அவர் தேவன். தாம் விரும்பும் எதையும் அவர் செய்யலாம், விசுவாசிக்கும் பிள்ளைகளுக்குள் அவர் இருக்கிறார். 89எகிப்தில் ஒரு வண்டுகூட காணப்படவில்லை, ஒருக்கால் அது குளிர்க்காலமாய் இருந்திருக்கலாம். கர்த்தர் மோசேயிடம், ''என் வார்த்தையை உரைப்பாயாக, நீ சொல்ல வேண்டியதை உன் சிந்தையில் போடுவேன், நீ சென்று தரையிலுள்ள மண்ணையெடுத்து காற்றில் தூவு“ என்றார். அவன், ''வண்டுகள் தோன்றக் கடவது என்று கட்டளையிட்டான்“. அப்பொழுது வண்டுகள் ஊர்ந்து வந்து சில மணி நேரத்திற்குள்ளாக அநேக அங்குலம் கனத்திற்கு தரை முழுவதும் பரவின, அது சரியா? சிருஷ்டி கர்த்தர்!. அங்கு தவளைகள் உண்டாயிருக்கவில்லை. மோசே தன் கோலை நீட்டி, ''தவளைகள் உண்டாகக் கடவது“ என்றான். அப்பொழுது தவளைகள் குவியல் குவியலாகத் தோன்றி, தேசம் முழுவதும் நாற்றமெடுக்கத் தொடங்கினது. அது சரியா? 90மோசே சிவந்த சமுத்திரத்தையடைந்த போது, அவன் வழியில் அது குறுக்கே நின்றது. கர்த்தர், “சிவந்த சமுத்திரத்துடன் பேசு'' என்றார். மோசேயும் சமுத்திரத்தினிடம் பேசினான். மோசேயிலிருந்தவர் சமுத்திரத்திலும் பெரியவர். இந்த உலகிலுள்ள எந்த இயற்கையைக் காட்டிலும் மோசேயிலிருந்தவர் பெரியவர். தேவன் அவனுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவன் உரைத்தான். அது அப்படியே நடந்தது. அதே தேவன் இன்றிரவு நம்முடன் கூட இருக்கிறார். நம்முடன் கூட மாத்திரமல்ல, நமக்குள்ளும் இருக்கிறார். நமக்குள் இருப்பதை அவர் நிரூபித்திருக்கிறார். ''உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அப்படியிருக்க நாம் எதைக் குறித்து பயப்பட வேண்டும்? உலகத்தைக் குறித்தா? 91அன்றொரு நாள் அவர்கள் டைனோசார் (Dinosaur) பல் ஒன்றை நயாகரா நீர்வீழ்ச்சியினருகில் கண்டுபிடித்தார்களாம் ('டைனோசர்' என்பது பண்டைய காலத்தில் வாழ்ந்த ஒரு மிருகம். அது அழிந்துவிட்டது - தமிழாக்கியோன்) அதன் எடை ஆறு பவுண்ட் என்றனர். அது பண்டைய மனிதனின் பல் என்று கூறுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது பண்டைய காலத்தில் வாழ்ந்த மிருகத்தினுடையது என்று அவர்கள் கூறிவிட்டார்கள். இந்த மிருகங்கள் ஒரு காலத்தில் இப்பூமியில் வாழ்ந்தன. அவை இப்பொழுது எங்கே? இப்பொழுது டைனோசார் தோன்ற வேண்டுமென்று சர்வ வல்லமையுள்ள தேவன் கட்டளையிட்டால், அடுத்த மணி நேரத்திற்குள்ளாக நாற்பது மைல் ஆழத்திற்கு அவை தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வுலகை தேவன் வண்டுகளால் அழிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் வண்டுகளை வரவழைக்க முடியும். அவை சாகும் போது எங்கு செல்கின்றன? வீட்டில் உள்ள ஈக்கு என்ன நேரிடுகிறது? வெட்டுக்கிளிக்கு என்ன நேரிடுகின்றது? குளிர்காலம் தோன்றும் போது உஷ்ணமானி பூஜ்யத்துக்கும் கீழ் நாற்பது டிகிரி காண்பிக்கிறது. அடுத்து வசந்தகாலம் தோன்றும் போது? எங்கு பார்த்தாலும் வெட்டுக் கிளி மயமாக உள்ளது. அவை எங்கிருந்து வந்தன? சிருஷ்டி கர்த்தராகிய அவர் பேசி அவைகளை சிருஷ்டிக்கிறார். அவர் தேவன் இயற்கை அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிகின்றது. 92அங்குதான் நமது சகோதரரில் சிலர் உணர்ச்சி வசப்படுகின்றனர். கர்த்தர் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னதாக அவர்கள் ஊகித்து, ''கர்த்தர் உரைக்கிறதாவது“ என்று இல்லாதபோதே, அது ”கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று அவர்கள் கூறுகின்றனர். அதனால் தான் அது நிறைவேறுவதில்லை. ஒரு காரியத்தை உண்மையில் ஆண்டவர் உங்களிடம் கூறுவாரானால், அது நிகழ்ந்தே தீர வேண்டும். பாருங்கள்? அது அப்படித்தான் இருக்க வேண்டும். கர்த்தர் பேசினால் அது நிகழத்தான் வேண்டும். எகிப்திலிருந்தவனிலும் மோசேயிலிருந்தவர் பெரியவர். பார்வோன் செய்ய முடிந்த எல்லா மந்திர ஜாலங்களைக் காட்டிலும் மோசேயிலிருந்தவர் பெரியவர். பாருங்கள்? இயற்கை அனைத்தைக் காட்டிலும் மோசேயிலிருந்தவர் பெரியவர். 93மகத்தானவர்! சிங்கங்களைப் பார்க்கிலும் தானியேலுக்குள்ளிருந்தவர் பெரியவர். பசியுள்ள சிங்கங்களை தடுத்து, நிறுத்த அவரால் முடியும். ஏதோவொன்று எதையோவொன்றை நிறுத்தக் கூடுமானால் இதை நிறுத்தினவர் மகத்தானவர், சிங்கங்கள் பசியுள்ளவைகளாய் தானியேலைப் பட்சிக்க பாய்ந்தோடின. (ஆனால் சிங்கத்திலுள்ளவனைப் பார்க்கிலும் தானியேலுக்குள்ளிருந்தவர் பெரியவர்). சிங்கம் முதன் முதலாக சிருஷ்டிக்கப்பட்ட போது, அது மனிதனுடன் நட்பு கொண்டிருந்தது. ஆனால் பிசாசோ மனிதனுடன் அது பகையுணர்ச்சி கொள்ளச் செய்தான். அது உண்மை. ஆனால் ஆயிரம் வருட அரசாட்சியில் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் ஒன்றாக மேயும். சிங்கம் மாட்டைப் போல் புல்லைத் தின்று அதனுடன் படுத்துக்கொள்ளும். ஆயிரம் வருட அரசாட்சியின் போது அவை ஒன்றுக்கொன்று தீங்கிழைக்காது. பிசாசு அப்பொழுது போய்விட்டிருப்பான். இவன்தான் இந்த மிருகங்கள் மற்றவைகளைப் பீறிக் கொன்றுத் தின்னும்படி செய்கிறான். ஆனால் சிங்கத்திலிருந்தவனிலும் அந்த தீர்க்கதரிசியாகிய தானியேலிலிருந்தவர் பெரியவர். பாருங்கள்? அந்த சிங்கத்திலிருந்தவனிலும் அந்த தீர்க்கதரிசியிலிருந்தவர் பெரியவர். 94அக்கினியிலிருந்தவனிலும் எபிரெய பிள்ளைகளிலிருந்தவர் பெரியவர். அவர்கள் நெருப்பிலே போடப்பட்டார்கள் அவர்களிலிருந்தவர் அவர்களுடனே கூட இருந்து, அக்கினி அவர்களைப் பட்சிக்காதபடிக்கு பாதுகாத்தார். அக்கினி சூளை ஏழு மடங்கு சூடாக்கப்பட்டது. அது சரியா? உலகத்திலிருக்கிறவனிலும் எபிரெய பிள்ளைகளிலிருந்தவர் பெரியவர். அங்கே நெபுகாத்நேச்சார், சூளையை ஏழு மடங்கு சூடாக்கினான். இவர்களைக் கொன்றுபோட அவன் பிசாசினால் தூண்டப்பட்டான். ஏனெனில் அவர்கள் ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட நெருப்பிலே போடப்பட்ட போது, அது அவர்களை எரிக்கவும் கூட முடியவில்லை. உலகத்திலிருக்கிறவனிலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவில் இருந்தவர் பெரியவர் முற்றிலுமாக! ஓ, என்னே! 95“வெண்கல வானத்தைக் காட்டிலும் எலியாவிலிருந்தவர் பெரியவர். ஏனெனில் மூன்றரை வருடம் மழை பெய்யாமலிருந்த வெண்கல வானத்திலிருந்து எலியாவால் மழையைக் கொண்டு வர முடிந்தது. மரணத்தை விட எலியாவிலிருந்தவர் பெரியவர். ஏனெனில் அவன் மரிக்கவேண்டிய நேரம் வந்தபோது... அந்த வயோதிப, களைத்துப்போன தீர்க்கதரிசி யேசபேலையும், அவள் தீட்டிய வண்ணங்களையும், நவீன காரியங்களையும் கடிந்து கொண்டு வந்ததை தேவன் கண்டார். அவன் களைப்புற்றிருந்தான். ஏனோக்கைப் போன்று அவன், தன் வீட்டுக்கு நடந்து செல்ல, தேவன் சம்மதிக்கவில்லை. அவர் ஒரு இரதத்தையனுப்பி, அவனை ஏற்றி, வீட்டுக்கு அழைத்துக் கொண்டார். எருசலேமிலும், யூதேயாவிலும், மலைகளிலும் இருந்தவனிலும் எலியாவிலிருந்தவர் பெரியவர். பிரேதக்குழியைக் காட்டிலும் எலியாவிலிருந்தவர் பெரியவர். ஏனெனில் அவன் பிரேதக் குழிக்குச் செல்லாமலே தப்பினான். அவன் மரணத்திற்குத் தப்பினான். அவன் ஒரு இரதத்திலேறி வீடு சென்றான். பாருங்கள்? அவர் மகத்தானவர். அவர் எலியாவுக்குள் இருந்தார். நீங்கள், “ஓ, எலியா பெரிய மனிதன்'' எனலாம். ஒரு நிமிடம் பொறுங்கள், “அவன் பாடுள்ள மனிதன்'' என்று வேதம் குறிப்பிடுகின்றது - உங்களையும் என்னையும் போல். அது உண்மை. ஆனால் அவன் ஜெபம் செய்தபோது, அவன் எதைக் கேட்டானோ அதைப் பெற்றுக் கொண்டானென்று விசுவாசித்தான். இயேசு அவ்விதம் நமக்கு அறிவுரை கூறியுள்ளார். ''ஆதலால் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்” (மாற்கு 11:24). அவன் மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான். அப்பொழுது மூன்றரை வருடம் மழை பெய்யாமலிருந்தது பாருங்கள்?இயற்கையைக் காட்டிலும் எலியாவிலிருந்தவர் பெரியவர். 96அப்படியானால் வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்துவது குறித்து என்ன? வியாதியைவிட உங்களிலிருக்கிறவர் பெரியவர். பாருங்கள்? ஏனெனில் வியாதியென்பது தேவனுடைய நியமங்களுக்கு தடையாயிருக்கும் ஒன்றாகும். உங்கள் வாழ்க்கையின் திட்டங்களை தடை செய்யும் பிசாசைவிட உங்களிலுள்ள சுகப்படுத்த வல்லவரும், சிருஷ்டி கர்த்தருமானவர் பெரியவர். ''உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்“. பாருங்கள்? எலியாவிலிருந்தவர் பெரியவர். அவ்வாறே ஏசாயாவிலும் மற்ற தீர்க்தரிசிகளிலுமிருந்தவர் பெரியவர். ஏனெனில் அவர்கள் தங்கள் காலங்களுக்கு அப்பால் நடப்பதைக் கண்டனர், பாருங்கள்? தோல் புழுக்கள், மரணம், பிரேதக்குழி போன்றவைகளைப் பார்க்கிலும் யோபுக்குள் இருந்தவர் பெரியவர். ஏனென்றால் தேவனுடைய வருகையை முன்கூட்டியே கண்டு, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளிலே பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்'' (யோபு 19:25-26) என்றான். பாருங்கள். மரணத்தைவிட யோபுவிலிருந்தவர் பெரியவர். ஏனெனில் மரணம் அவனைக் கொண்டு செல்ல முயன்றது; ஆனால் முடியவில்லை, ”நான் மறுபடியும் எழுந்திருப்பேன்“ என்று அவன் கூறினதால், மரணம் அவனை ஆட்கொள்ள முடியவில்லை. அவன் உயிரோடெழுந்தான். 97கவனியுங்கள், இன்னும் சற்றுநேரம் இதைக் குறித்து பேச நேரமிருந்தால் நலமாயிருக்கும். உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அன்றொரு நாள், கிறிஸ்து உங்களுக்குள் இருத்தல், (சகோ. பிரான்ஹாம் பீடத்தை இருமுறை தட்டுகிறார் - ஆசி) என்பதின் பேரில் ஒருவர் பேசினதை நான் கேட்க நேர்ந்தது. “என் சரீரம் உணர்ச்சி வசத்தால் நடுக்கமுற்றது. நான் அன்னிய பாஷை பேசினேன், நான் ஆவியில் நடனமாடினேன் என்பவைகளின் பேரில் நீங்கள் சார்ந்திருக்க வேண்டாம். அவைகளுக்கு விரோதமாய் நான் பேசவில்லை. அவை யாவும் சரியே. ஆனால் அவைகளின் பேரில் சார்ந்திருக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கை இதுவாக இருக்க வேண்டும். (சகோ. பிரான்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை இருமுறை தட்டுகிறார் - ஆசி). இது வேறொன்று, இதுவும் அதுவும் ஒன்றாக வேண்டும். அப்பொழுது அது தன்னை வெளிப்படுத்துகிறது, பாருங்கள்? 98இன்றிரவு, ஷேக்ஸ்பியரின் (Shakespeare) ஆவி உங்களில் வாசமாயுள்ளது என்று நீங்கள் மனப்பூர்வமாக கூறுவீர்களானால் ஷேக்ஸ்பியர் உங்களில் வாசமாயிருந்தால் - நீங்கள் என்ன செய்வீர்கள் தெரியுமா? ஷேக்ஸ்பியர் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். நீங்கள் புதிய கவிதைகளையும் நாடகங்களையும் எழுதுவீர்கள். ஏனெனில் ஷேக்ஸ்பியர் ஓர் மகத்தான எழுத்தாளர் அவர் கவிதைகளை எழுதினார். அப்படியிருக்க, ஷேக்ஸ்பியர் உங்களில் வாசம் செய்தால், அவர் செய்த கிரியைகளையே நீங்களும் செய்வீர்கள். அது சரிதானே? பீதோவன் (Beethoven) உங்களில் வாசம் பண்ணுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நீங்கள் என்ன செய்வீர்கள் தெரியுமா? அவர் ஓர் மகத்தான இசை அமைப்பாளர். நீங்களும் அவரைப் போன்று இசை அமைப்பீர்கள். ஏனெனில் பீதோவனே உங்கள் ஜீவனாகிவிடுகிறார்; பீதோவனின் மறு அவதாரம் தான் நீங்கள். பீதோவன் உங்களில் வாசம் செய்தால், பீதோவன் செய்த கிரியைகளையே நீங்களும் செய்வீர்கள். அது சரிதானே? 99ஆனால் உங்களில் வாசம் செய்கிறவர் கிறிஸ்து. கிறிஸ்து உங்களில் வாசம் செய்தால், அவர் செய்த கிரியைகளையே நீங்களும் செய்வீர்கள். அப்படித்தான் அவர் யோவான் 14:12-ல் கூறியுள்ளார் “...என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்”. நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்... அல்லது கிறிஸ்து உங்களில் வாசம் செய்தால்... கிறிஸ்துவே வார்த்தையாயிருக்கிறார். அது சரியா? வார்த்தை அவருடைய தீர்க்கதரிசிகளிடம் வருகின்றது. பாருங்கள்? நீங்கள்... கிறிஸ்து உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்து செய்த கிரியைகள் உங்கள் மூலமாய் நடப்பிக்கப்படும்; கிறிஸ்துவின் ஜீவன் உங்கள் மூலமாய் வாழும். அவர் செய்த கிரியைகள், அவர் வாழ்ந்த வாழ்க்கை, இவையெல்லாமே, உங்களில் வாசம் செய்யும் - ஷேக்ஸ்பியர், பீதோவன் போன்றவர் உங்களில் வாசம் செய்தால் எப்படியிருக்குமோ அப்படியே. உன் சொந்த வாழ்க்கையை நீ வாழ்ந்தால், உன் கிரியைகளை மாத்திரமே நீ செய்வாய். பாருங்கள்? ஆனால் கிறிஸ்து உங்களில் வாசம் செய்து, கிறிஸ்து வாழ்ந்த வாழ்க்கையையே நீங்களும் வாழ்ந்தால், “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்”, தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து உங்களில் சந்தேகங்கள் காணப்பட்டால், கிறிஸ்து உங்களில் இல்லையென அர்த்தமாகின்றது; நீ உன்னை உணர்ச்சி வசப்படுத்திக் கொள்ள முயல்கின்றாய். ஆனால் கிறிஸ்து உன்னில் வாசம் செய்தால், அவர் தமது வார்த்தையை அங்கீகரித்து, அவருடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார். பாருங்கள்? அவர் அதைச் செய்வார். 100''நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் இந்த மலையைப் பார்த்து, 'பெயர்ந்து போ' என்று சொல்லி, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல், அது நிறைவேறுமென்று விசுவாசித்தால், நீ கேட்பது அருளப்படும். என் பிதா கிரியை செய்கிறார். நானும் கிரியை செய்கிறேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். குமாரன் தாமாய் ஒன்றும் செய்யமாட்டார். பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ அதையே அவர் செய்கிறார்''. பாருங்கள்? அவர் செய்ய வேண்டியது என்னவென்று பிதா காண்பித்தபோது, அவர் நடந்து சென்று எவ்வித தோல்வியுமின்றி, “அப்படியே ஆகக்கடவது” என்றார். அது அப்படியே ஆயிற்று. அதே கிறிஸ்து உன்னில் இருக்கிறார். நம்மில் இருக்கிறார். அப்படியானால், அவருடைய கிரியைகளை நாமும் செய்வோம். ஏனெனில் கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். தேவனுடைய வாக்குத்தத்தம் உங்களுக்கு சுகத்தைக் கொண்டு வருகிறது. அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? (சபையோர் 'ஆமென்' என்கிறார்கள் - ஆசி) நிச்சயமாக!. 101அவர், ''நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன்'' என்றார். நான் சிறிது முன்பு ஜெபித்தது போல, மத்தேயு:24-ல், மத்தேயு:28:20-ல் பாருங்கள்? அவர், ''நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்குள் இருப்பேன். நான் (அதாவது பரிசுத்த ஆவியின் ரூபத்தில் கிறிஸ்து) வந்து உங்களுக்குள் வாசம் பண்ணுவேன். அப்பொழுது நீங்கள் இனிமேல் ஒருக்காலும் நீங்களாக இருக்கமாட்டீர்கள். நான் உங்களுக்குள் இருப்பேன். உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்'' என்றார். பாருங்கள்? “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார்” என்று எபிரேயர்:13:8 உரைக்கின்றது. 102தண்ணீரினால் உண்டான நியாயத்தீர்ப்பைக் காட்டிலும் நோவாவிலிருந்தவர் பெரியவர். பாருங்கள்? அக்கினியினால் வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். ஏனெனில் அவர் கிரயத்தை செலுத்தி, நியாயத்தீர்ப்பை உங்களுக்காக மேற்கொண்டார். பாருங்கள்? அதைக் குறித்து இனிமேல் எவ்வித பயமுமில்லை. பாருங்கள்? நீங்கள் அதைக் கடந்துவிட்டீர்கள். ஆம், விசுவாசியாத உலகத்தை அழித்துப் போட்ட தண்ணீர் நியாயத்தீர்ப்பைக் காட்டிலும் நோவாவிலிருந்தவர் பெரியவர். நோவாவோ விசுவாசித்தான். அவரை விசுவாசித்த நோவாவில் இருந்தவர் பெரியவர். அவர் அவனுடன் பேசினார். உலகத்திலிருக்கிறவனிலும் நோவாவிலிருந்தவர் பெரியவர். நோவா நியாயத்தீர்ப்புக்குத் தப்பின காரணமே, தேவனுடைய வார்த்தை அதைக் காட்டிலும் மேலாக இருந்ததால் தான். அவன் நியாயத்தீர்ப்புக்கு மேலாக உயர்த்தப்பட்டான். பெரியவர்; அதிலே சற்று நாம் தொடர்ந்து நிலைத்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! பாருங்கள்? 103அவனுடைய ஆடுகளைக் களவாடிய கரடியைக் காட்டிலும் தாவீதிலிருந்தவர் பெரியவர். அவனுடைய ஆடுகளில் ஒன்றை எடுத்துக் கொண்ட சிங்கத்திலும் தாவீதிலிருந்தவர் பெரியவர் அவனுடைய சத்துருவாகிய கோலியாத்திலும் தாவீதிலிருந்தவர் பெரியவர். அங்கு நின்று கொண்டிருந்த அந்த பலசாலியான பெலிஸ்தியன் பன்னிரண்டு, பதினான்கு அடி உயரமுள்ளவனாயிருந்தான். அவனுடைய விரல்கள் ஒவ்வொன்றும் பதினான்கு அங்குலம் நீளமானவை. அவன் கையில் பிடித்திருந்த ஈட்டி, நெசவுக்காரரின் படைமரத்தைப் போன்ற அவ்வளவு கனமாயிருந்தது. அவன் தேகம் முழுவதும், மூன்று அங்குல கனமுள்ள எஃகு அல்லது பித்தளை கவசத்தால் மூடப்பட்டிருந்தது. அவனுடைய தசைகளில் பலமிருந்தது. அவன் ஒரு போர் வீரன். அவனுடைய ஈட்டியின் முனையில் தாவீதைத் தூக்கி தொங்க வைத்து, பறவைகள் வந்து அவனை பட்சிக்க வைக்க அவனால் முடியும். தாவீது அவனிடம், “நீ பெலிஸ்தனாக - பெலிஸ்தனின் நாமத்தில் - என்னைச் சந்திக்கிறாய். உன் பெலிஸ்திய தெய்வத்தின் நாமத்தினாலே என்னைச் சபிக்கிறாய். நீ என்ன செய்யப் போகின்றாய் என்று பெருமையடித்துக் கொண்டாய். நீ பட்டயத்தோடும் கேடயத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். ஆனால் நானோ கர்த்தராகிய தேவனுடைய நாமத்தினால் உன்னைச் சந்திக்கிறேன். இன்றைக்கு உன் தோளிலிருந்து உன் தலையை எடுத்துப் போடுவேன்” என்றான். அவன் சொன்னபடியே செய்தான். ஏனெனில் தாவீதுக்கு அவ்வளவு தைரியமூட்டியவர் மிகப் பெரியவர். 104சக்கர நாற்காலிகளைக் காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். உங்களைச் சுமந்து கொண்டிருக்கும் ஸ்ட்ரெட்சர்களை (Stretcher) காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். புற்றுநோயைக் காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். உங்கள் துன்பங்களைக் காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். பிசாசு உங்கள் மேல் சுமத்தியுள்ள ஏதாவதொன்றைக் காட்டிலும் அவர் பெரியவர். ''உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்“. ஆம், தாவீதுக்குள் இருந்த தேவன் பெரியவர். அதே கிறிஸ்து நமக்குள் இருக்கிறார். அவர் நமக்காக எல்லா சத்துருக்களையும் மேற்கொண்டார். அவர் இவ்வுலகில்இருந்தபோது பாவத்தை ஜெயித்தார், வியாதியை ஜெயித்தார், மரணத்தை ஜெயித்தார், நரகத்தை ஜெயித்தார், பிரேதக் குழியை ஜெயித்தார். இப்பொழுது ஜெயங்கொண்டவராக அவர் நமக்குள் வாசம் செய்கிறார். அவர் வியாதி, நரகம், மரணம், பாதாளம் இவைகளை மேற்கொண்டு, இவையனைத்தினின்றும் நம்மை விடுவிக்க நமக்குள் வந்திருக்கிறார். இத்தகைய பொய்யான காரியங்களை உங்கள் மேல் சுமத்தியுள்ளவனைக் காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். ஆம், ''உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்“. 105அதனால் தான் இந்த அற்புதங்கள் நிகழ்கின்றன. அதனால் தான் அன்று காற்று நின்று போனது. ஒரு மனிதன் இதைச் செய்யக் கூடுமா? இல்லை, ஐயா. அது கூடாத காரியம். அன்று நான் நின்று அழுது கொண்டிருந்தபோது, காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்த போது... அன்று என்னுடன் கொலராடோவின் மலையில் இருந்தவர்கள் எத்தனை பேர் இங்கிருக்கின்றனர்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம்! சரி, இங்கு வந்துள்ளவர்களில் சகோதரன் ஃபிரெட் மாத்திரம் அப்பொழுது அங்கிருந்தார் என்று நினைக்கிறேன். சகோதரன் மான் கூட இங்கிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சகோதரன் ஈவான்ஸ், அவர் அப்பொழுது அங்கில்லையா? ஆமாம், அத்தருணத்தில் சகோதரன் ஈவான்ஸ் அங்கிருந்தார். கவனியுங்கள், அது உண்மையல்லவா? அது அவ்விதமே நிகழவில்லையா? மழை நின்றுபோனது. காற்றும் அடிக்காமல் நின்று போனது அது என்ன? என் வார்த்தையா? இல்லை. நான் கட்டளையிட வேண்டுமென்று அவர் என்னிடம் கூறினார். எந்த இயற்கையைக் காட்டிலும் நம்மிலிருக்கிறவர் பெரியவர். அன்று கடலை அமரிக்கையாக்கின அதே தேவன் அல்லவா இன்று காற்றை அதனுடைய இடத்திற்கு போகும்படி செய்தார்? “சூரியனை இருளாக்கவும், அதை பிரகாசிக்கவும் செய்தவர் அதே தேவனல்லவா?” ஏனெனில் “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்”. பாருங்கள்? அது சரி. 106அதனால் தான் இந்த அற்புதங்களைச் செய்ய முடிகின்றது. ஏனெனில் அது தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது. ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.'' (யோவான்:14:12). காற்றையும் கடலையும் அமரப்பண்ணின கிறிஸ்து, அவைகளை சிருஷ்டித்தவர். அன்றுபோல் இன்றும் அவர் சிருஷ்டி கர்த்தராயிருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தி, பாவத்தை நிர்மூலமாக்கி, உங்களுக்காக எல்லாவற்றையும் மாற்றி அமைத்து, உங்களுக்குள் வாசம் செய்ய அவர் உங்களிடம் வந்திருக்கிறார். நம்மிடம் வந்து நமக்குள் வாசம் செய்ய அவர் இவையனைத்தையும் ஜெயித்தார். இவைகளை அவர் ஏற்கனவே ஜெயித்து, வேதம் உண்மையென நிரூபித்து இப்பொழுது மறுபடியும் வந்து எல்லாவற்றையும் ஜெயித்து, அதன் மூலம் அவர் அதே தேவன் என்பதை நிரூபித்துவிட்டார். ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகட்கு பின்பு அவர் இங்கு வந்து, (சகோ. பிரான்ஹாம் பீடத்தை ஐந்து முறை தட்டுகின்றார்), அவர் முன்பு செய்த அதே கிரியைகளை இப்பொழுது நம் மத்தியில் செய்து வருகிறார். அவர் மரணம், பாதாளம், வியாதி, பிரேதக்குழி இவைகளின் பேரில் வெற்றி சிறந்தார். 107உங்களிலிருப்பவர் கிறிஸ்து, ''உலகத்திலிருப்பவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்“ என்று யோவான் கூறினான். அது கிறிஸ்து. உலகத்திலுள்ள அனைத்திலும் அவர் பெரியவர். ஏனெனில் அவர் உலகத்தை ஜெயித்தார். நமக்காக அவைகளின் மேல் அவர் ஜெயங்கொண்டு, அவை எல்லாவற்றைக் காட்டிலும் பெரியவராயிருக்கிறார். நம்மில் அன்பு கூர்ந்து நமக்காக அவரை ஒப்புக் கொடுத்தவராலே நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருப்பதால், அவர் மறுபடியும் வந்து, தமது கிரியைகளைச் செய்து, அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபித்துக் காண்பிக்கிறார். அவர் இவ்வுலகில் இருந்தபோது, அவர் மேசியாவென்பதை மக்களுக்கு நிரூபித்துக் காண்பித்தார். அவர்களுடய இருதயங்களின் சிந்தனைகளை அவரால் அறிய முடிந்தது. அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார் என்று மோசே கூறியுள்ளதாக வேதம் உரைக்கிறது. அது சரியா? அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிந்தார். ஜனங்கள் யாரென்பதை அவர் அறிந்து கொண்டார். அவர்களில் என்ன தவறுள்ளது என்பதை அவர் அறிந்தார். இப்பொழுது அதே செயல் அநேக முறை செய்யப்படுவதை நாம் காண்கிறோம் அல்லவா? (சபையார் ”ஆமென்“ என்கின்றனர் - ஆசி). 108மரித்தோர் உயிரோடெழுவதை இப்பொழுது நாம் கண் கூடாகக் கண்டிருக்கிறோம். சிலர் மரித்து ஒன்றரை நாட்களாகிவிட்டிருந்தது. அல்லது காலையில் மரித்து சடலத்தை இரவில் கொண்டுவந்து, அன்றிரவு முழுவதும் அவர்கள் பிரயாணம் செய்து, அடுத்த நாள் பகல் பன்னிரண்டு மணியளவில் கூடாரத்திற்கு வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த குழந்தை மரித்துப் போய், உடலெல்லாம் சில்லென்று விரைத்துப் போய், தாயின் கரங்களில் இருந்தது. அப்பொழுது கர்த்தர் ஜீவ வார்த்தையைப் பேசினார். குழந்தையின் உடல் உஷ்ணமடைந்து, அது அழ ஆரம்பித்தது. அது தாயின் கரங்களில் உயிருள்ளதாய் கொடுக்கப்பட்டது. இது நிகழ்ந்தபோது திருமதி ஸ்டாக்லெவ் (Mrs. Stadklev) அங்கிருந்தார்கள். எனவே அவர்களுடைய குழந்தைக்கு அவ்விதம் நேர்ந்த பொழுது, அவர்கள் அழுது கொண்டு வந்து, நான் உடனடியாக ஜெர்மனிக்கு செல்ல வேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ஆண்டவரோ, “அது என் கரம், அதை கடிந்து கொள்ளாதே” என்று உத்தரவிட்டார். அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய நாம் அறிந்திருக்க வேண்டும். அவர் மோசேயிடம், “கன்மலையிடம் பேசு” என்று கூறினார். அவர் பேச மாத்திரம் சொன்னாரேயன்றி, அதை அடிக்கச் சொல்லவில்லை. அவர் என்ன கூறுகிறாரோ அதற்குக் கீழ்ப்படிந்து, அதை அப்படியே செய்ய வேண்டும். ஆனால் எந்த மனிதனும் தானாகவே எதையும் செய்ய முடியாது. அவன் முதலாவது தேவனிடமிருந்து கட்டளை பெற வேண்டும். 109அவர் பிழைத்திருக்கிறார் என்று தேவனுடைய வார்த்தை வாக்களிக்கின்றது. அவர் பிழைத்திருக்கிறபடியால் நீங்களும் பிழைத்திருக்கிறீர்கள். ''நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். அதே கிரியைகள். ஆனால் அதிகமான கிரியைகளை செய்வீர்கள். ஏனெனில் “நான் பிதாவினிடத்திற்குப் போகிறேன்'' என்று அவர் வாக்கு கொடுத்திருக்கிறார். அவர் எல்லாவற்றின் மேலும் ஜெயங்கொண்டிருக்கிறார். அவர்தான் அன்று காற்றை நிறுத்தினார். அவர்தான் அந்த அணில்களை சிருஷ்டித்தார். அது இருமுறை சம்பவித்தது. சார்லி, ஒருமுறை அது நீங்கள் இருக்கும் இடத்தில் நிகழ்ந்தது. அடுத்த முறை சகோதரன் ஃபிரெட்டும் சகோதரன் பாக்ங்ஸும் எங்களுடன் மலையின் மேல் இருந்த போது நிகழ்ந்தது. இது ஜெர்மனியில் நிகழ்ந்தது. அப்பொழுது என் ஒவ்வொரு பக்கத்திலும் பதினைந்து மந்திரவாதிகள்... பில்லியும், சகோதரன் ஆர்கன்பிரைட்டும், என்னைக் காண அவர்களுக்கு அனுமதி தர மறுத்துவிட்ட காரணத்தால், அவர்கள், ''இந்த கூடாரத்தைச் சிதறப் பண்ணப் போகிறோம்'' என்று சவால்விட்டனர். அவர்கள் அங்கு அமர்ந்து கொண்டு, மந்திரங்களைச் சொல்லி, தங்கள் தெய்வத்தை (பிசாசை) அழைத்தனர். அப்பொழுது பலத்த புயல் காற்று வீசியது. அந்த கூடாரத்தில் முப்பதாயிரம் அல்லது நாற்பதாயிரம் ஜெர்மானியர் அமர்ந்திருந்தனர். கூடாரம் இப்படியாக மேலே உயர்ந்து, கீழே விழுந்தது. அவர்கள் ஒரு பறவையின் சிறகை கத்தரியால் வெட்டி, அதை கூடாரத்துக்கு நேராக காண்பித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்திருந்து, தங்கள் மந்திரங்களை ஓதி, இந்த மூன்று பரிசுத்த வார்த்தைகளை, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஊ ஊ ஊ ஊ; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஊ ஊ ஊ” என்பதாக ஓதிக் கொண்டிருந்தனர். 110அப்பொழுது பலத்த புயல்காற்று தோன்றினது. ஆம், சாத்தான் வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் தலைவன். அவர்கள் புயல் காற்றை வரவழைத்தனர். அந்த பெரிய கூடாரம் ஒரு நகர வீடு வரிசை (City block) அளவிற்கு அவ்வளவு பெரியதாயிருந்தது. கான்வஸ் (Canvas) துணியினால் அது தைக்கப்பட்டிருந்தது. காற்று அதற்கடியில் புகுந்து அதை அப்படியே தூக்கியது. காற்றும் மின்னலும் சேர்ந்து அதை பறக்கச் செய்தது. நானோ தொடர்ந்து பிரசங்கம் செய்து கொண்டேயிருந்தேன். அவர்கள் தங்கள் மந்திரங்களை ஓதி, அந்த மூன்று சிறிய பரிசுத்த வார்த்தைகளாகிய, 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவி' என்பவைகளை இரு புறத்திலும் உச்சரித்துக் கொண்டேயிருந்தனர். அவர்கள் வணங்கின நிலையில் இருந்தபோது, அவர்களைப் பிசாசுகள் சூழ்ந்து கொண்டிருப்பதை நான் கண்டேன். ஆனால் அது கட்டப்படவில்லை. நான் சகோதரன் லெளஸ்டரிடம், “இதை நீங்கள் மொழி பெயர்க்க வேண்டாம்'' என்று கூறி விட்டு, “சகோதரன் ஆர்கன்பிரைட், ஜெபம் செய்து கொண்டிருங்கள்'' என்றேன். நான், “பிதாவாகிய தேவனே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நீர்தான் என்னை இங்கு அனுப்பினீர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெர்மானிய நாட்டில் காலடி வைத்தேன். ஏனெனில் நீர் என்னை இங்கு அனுப்பினீர். அந்த மேகத்திற்கு என் மீது எவ்வித அதிகாரமுமில்லை. ஏனெனில் நான் அபிஷேகம் பண்ணப்பட்டு, ஜனங்கள் இரட்சிக்கப்படுவதற்காக இங்கு அனுப்பப்பட்டுள்ளேன். இங்கிருந்து நீ புறப்பட்டுச் செல்ல இயேசுவின் நாமத்தில் கட்டளைடுகிறேன்'' என்றேன். 111அப்பொழுது இடிகள் முழக்கமிட்டுக் கொண்டே, உருண்டோடிவிட்டன. சூரியன் பிரகாசிக்கத் தொடங்கினது. கூடாரமும் அமைதி பெற்று தன் சுயநிலைக்கு வந்தது. பத்து நிமிடங்களுக்குள் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் பிரசங்க பீடத்தை சுற்றிலும் வந்து, இரக்கத்திற்காக கெஞ்சி, தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வல்லமையைக் காண விரும்பினர். ஏன்? ''உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்“ பாருங்கள்? “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” இந்த துன்பம், துயரங்களைக் காணும்போது, ஓ, சகோதரனே, சகோதரியே, நமக்கு எவ்வித கவலையுமில்லை. தேவன் மகத்துவமுள்ளவர். அவர் உங்களுக்குள் இருக்கிறார். நீங்கள் நம்புகின்றீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). 112நான் அதிக நேரம் பிரசங்கித்துவிட்டேன். 9 மணி அடித்து 15 நிமிடங்கள் ஆகின்றது. இங்குள்ளோர் அதிக தூரம் பயணம் செய்து வீடு திரும்ப வேண்டுமென்று நானறிவேன். சற்று நேரம் நாம் தலைவணங்குவோம். ஓ, பிதாவே, தேவனே, கொலராடோவைக் குறித்து உமக்குத் தெரியும். அது உண்மையென்று நீர் அறிவீர். இம்மக்கள் அறிவதற்காக அதை நான் உமது மகிமைக்கென்று உரைத்தேன். விஞ்ஞானப் பூர்வமாக, புகைப்படத்தின் மூலமாக, பரிசுத்த ஆவியின் கிரியைகள் நிரூபிக்கப்பட்டுவிட்டன. ஜனங்கள் உம்மை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவைகளை உரைத்தேன். ஆண்டவரே, அது உமக்குத் தெரியும்... நான் ஜனங்களுக்கு அதைத் தெளிவாக எடுத்துரைத்தேன். நான் எப்பொழுதும் அப்படி செய்வதே வழக்கம். ஏனெனில் நீர் அதை வாக்களித்திருக்கிறீர். ஒரு மனிதனை நீர் கண்டுபிடித்து, அவன் மூலம் உம்மை அடையாளங்களினால் நிரூபித்துக் காண்பித்து நீர் ஜீவிக்கிறீர் என்றும், நீர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர் என்பதையும் ஜனங்களுக்கு உறுதிப்படுத்தவே நீர் இங்கிருக்கிறீர். ஆண்டவரே, நீர் இரக்கமாயிருந்து, எங்கள் சிந்தனைகளை சரியான வழியில் செலுத்த வேண்டுமென்று உம்மை வேண்டிக் கொள்கிறேன். இங்கு வியாதியஸ்தர்களும், துன்புறுகிறவர்களும் அமர்ந்துள்ளனர். உம்மிடம் ஒத்தாசை கிடைக்காவிட்டால் மரித்துப் போவார்கள் என்னும் நிலையில் சிலர் இருக்கக் கூடும். மருத்துவர்கள் உதவிசெய்ய முடியாத நிலையில் இருப்பவர் அநேகர் இங்குள்ளனர். நீரே தேவன். நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறீர். உம்முடைய பிரசன்னம் இங்குள்ளது. 113ஆண்டவரே, நாங்கள் இயல்பாகக் கூறும் மூன்றாம் இழுப்பு என்னவாயிருக்குமென்று எங்களுக்குத் தெரியாது. அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மாத்திரம் எங்களுக்குத் தெரியும். முதலாம் இழுப்பு பரிபூரணம். இரண்டாம் இழுப்பு ஐந்து என்னும் எண்ணிக்கையைக் கொண்டிருந்ததால், அது கிருபை. நாங்கள் “உங்களிலிருக்கிறவர்...'' என்று பிரசங்கித்தோம். இன்றிரவு எங்களுக்கு உம்மை வெளிப்படுத்த வேண்டுகிறோம். ”நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்றும், பிதா ஒன்றை உமக்குக் காண்பிக்காமல் நீர் எதையும் செய்ததில்லை என்றும் நீர் கூறியிருக்கிறீர். பேதுருவை நீர் கண்ட போது, அவன் யாரென்றும், அவனுடைய தகப்பனார் பெயர் என்னவென்றும் உம்மால் கூற முடிந்தது. அவ்வாறே நாத்தான்வேலை நீர் கண்ட போதும், அவனுடைய நோக்கம் என்னவென்றும், அவன் எதற்காக அங்கு வந்தானென்றும், அதற்கு முன் எங்கிருந்தானென்றும், அவன் அங்கு என்ன செய்து கொண்டிருந்தானென்றும், நீர் பகுத்தறிந்து கூறினீர். கிணற்றடியிலிருந்த சமாரிய ஸ்திரீயினிடமும், அவள் என்ன பாவம் செய்தாளென்றும், அவள் ஆறு மனிதர்களிடம் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாளென்றும், ஏற்கனவே ஐந்து பேர் அவளுக்கிருந்தனர் என்றும், இப்பொழுது அவளுடன் இருப்பவன் அவளுடைய புருஷன் அல்லவென்றும் நீர் கூறினீர். இன்றும் நீர் அதே தேவனாயிருக்கிறீர். நீர் கூறினீர்... 114பர்த்திமேயு அங்கு நின்று கொண்டிருந்த போது, அவனுடைய பார்வையற்ற நிலையை நீர் கண்டீர். ஆனாலும் அவன் இருதயத்தில் யேகோவாவே குமாரனின் உத்தியோகத்தில் இயேசுவாக வெளிப்பட்டிருக்கிறார் என்றும், அவனுடைய கூக்குரலை அவர் கேட்பாரென்றும் அறிந்து கொள்ளும் மனக்கண் அவனுக்குண்டாயிருந்தது. அவன், ''தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்'' என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டான். அந்த சத்தம் உம்மை நிற்கச் செய்தது. அவன் விசுவாசம் அவனை இரட்சித்தது என்று நீர் கூறி, அவனைச் சுகப்படுத்தினீர். இரத்த சோகை கொண்ட அந்த ஸ்திரீ உதிரப்போக்கினால்... அநேக ஆண்டுகளாக அது நிற்கவேயில்லை. அவள் தன் ஆஸ்தியெல்லாம் மருத்துவர்களுக்கு செலவழித்த போதிலும், அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவள் உம்முடைய கூட்டங்கள் ஒன்றுக்கு வந்திருந்தாள். அப்பொழுது யவீரு வீட்டிற்குப் போகும் வழியில், அந்த மனிதனுடன் நீர் கலிலேயாவில் பேசிக் கொண்டிருந்தீர். இந்த ஸ்திரீ, வேத ஆதாரம் எதுவுமில்லாத போதிலும், ''நான் மாத்திரம் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் சொஸ்தமாவேன்'' என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொண்டாள். அவ்வாறே அவள் உம் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட போது, அவளுடைய விருப்பம் நிறைவேறிற்று. தன் தேவை என்னவென்று அவள் உம்மிடம் விவரித்த போது, அவளுடைய விசுவாசமே இதைச் செய்தது என்றீர். நீர் உன்னதத்தில் வீற்றிருந்து, எங்களுக்காக எப்பொழுதும் பரிந்து பேசிக் கொண்டிருக்கும் பிரதான ஆசாரியன் என்பதாய் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. எங்களுடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியன் நீர் என்று உம்மை நாங்கள் அறிந்திருக்கிறோம். பிதாவாகிய தேவனே, இன்றிரவு இங்கு வந்துள்ள ஒவ்வொருவருக்கும் பிரதான ஆசாரியராகிய உம்மை தொடும் சிலாக்கியத்தை அருளிச் செய்து அவர்கள் சுகம் பெறச் செய்யும். தேவனுடைய மகிமைக்காக, இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறேன். ஆமென். 115ஜெப அட்டைகள் உண்டா? பில்லியிடம் கொடுக்க வேண்டாமென்று... யாரிடமாவது ஜெப அட்டை இருக்கின்றதா? சரி, சரி, ஜெப அட்டைகளைக் கொடுக்க வேண்டாமென்று நான் அவனிடம் கூறியிருந்தேன். ஏனெனில் ஒருக்கால் நேரம் அதிகமாகிவிடுமென்று... ஓ, “நான் அதிகம் பேசுகிறேன். நான் 8.30 மணிக்கு முடிக்க முயல்கிறேன்'' என்று சொன்னபோது, நீங்கள் சிரித்தீர்கள், அதன் அர்த்தம் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன். பாருங்கள்? நண்பனே, நான் எப்பொழுதும் இதை உங்களிடம் கூறி வந்திருக்கிறேன். ''சகோதரன் பிரான்ஹாம் இதைச் செய்தார்'' என்று நீங்கள் ஒருக்காலும் கூற வேண்டாம். சகோதரன் பிரான்ஹாம் எதையுமே செய்ய முடியாது பாருங்கள்? அது இயேசு கிறிஸ்து, என்னிலிருக்கிறவர் உங்களிலும் இருக்கிறார். நீங்கள் விசுவாசித்தால் மாத்திரம் போதும். அது சரியா? உங்களிலிருக்கிறவர் வியாதியைக் காட்டிலும் பெரியவர். 116இங்குள்ளவர்களில் எத்தனை பேர் வியாதியாயிருக்கிறீர்கள்? உங்களில் எத்தனை பேருக்கு என்னைத் தெரியாமல், பிரதான ஆசாரியனைத் தொடுவதற்குப் போதுமான விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்தி, “நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறுங்கள். சரி, ஓ, எல்லாவிடங்களிலும் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சரி, உங்களில் எத்தனை பேருக்கு என்னைத் தெரிந்து, உங்கள் தேவைகள் என்னவென்று நான் அறியாதவனாய், தேவன் உங்களைத் தொட வேண்டுமென்று விருப்பம் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பாருங்கள்? பாருங்கள்? சரி. வெளிப்படையாய் கூறினால், இங்குள்ள ஒருவருக்காவது என்ன வியாதியுண்டு என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இங்கு அமர்ந்திருக்கும் பையனை நானறிவேன். அநேக தடவைகளில் நான் அவனுக்காக ஜெபம் செய்திருக்கிறேன். அவனுடைய பெயர் எனக்கு ஞாபகமில்லை. அவன் கென்டக்கியைச் சேர்ந்தவன். அவன் பலமுறை எனக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறான். அவன் சகோதரன், சகோதரி உட் அவர்களுக்கு நண்பன். அவர்கள் வாழும் இடத்திலேயே அவனும் வாழ்கிறான். அவன் நீண்ட காலமாக இக்கூட்டங்களுக்கு வருகிறான். அவன் ஒருவனை மாத்திரம் நானறிவேன். இப்பொழுது சகோதரன் டெள, எனக்குத் தெரிந்தவரை, பூரண சுகமடைந்துவிட்டார். இல்லையேல், அவர் இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கமாட்டார். அன்று அவர் அதிக வியாதிப்பட்டிருந்தார். கர்த்தர் அவரைச் சுகப்படுத்தினார். இங்கிருப்பவர் எனக்குத் தெரியாது. இங்கு கக்கதண்டம் (crutches) வைத்துள்ளதே. அது யாருடையது என்றும் எனக்குத் தெரியாது. ஒருக்கால் அதற்கு சொந்தமான மனிதன் இங்கிருக்கலாம் - எனக்குத் தெரியாது. உங்களில் அநேகரை எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் தேவைகள் என்னவென்று எனக்குத் தெரியாது என்பதை பரலோகத்தின் தேவன் அறிவார். எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. இந்த கூடாரத்தில் இது சற்று கடினமாயுள்ளது, ஏனெனில் இங்கு அநேகரை எனக்குத் தெரியும். 117நீங்கள் ஓரிடத்திற்குவரும் போது... சில சமயங்களில் நான் இங்கு வந்து “எல்லோருக்கும் ஜெப அட்டைகளைக் கொடுத்து அவர்களை வரிசையில் நிறுத்துவோம். மேடைக்கு வாருங்கள்'' என்பேன். சிலர் போய் விடுவார்கள். நண்பர்களே என் இருதயத்தைத் திறந்து ஒரு சில காரியங்களை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் ஒன்றையும் மறைக்க முடியாது. நீங்கள் என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து உங்கள் சிந்தனைகளில் உள்ளவைகளை நான் அறிந்து கொள்வேன். சில சமயங்களில் நீங்கள், ”சகோதரனே, நான் விசுவாசிக்கிறேன்'' எனலாம். ஓரளவுக்கு மாத்திரமே நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் பகுத்தறியும் போது நீங்கள் என் முன்னால் நின்று கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது அந்த அபிஷேகம் என்மேல் வரத் தொடங்கிவிட்டது. அந்த உணர்ச்சியை நான் ஒருவகை நாடித் துடிப்பினால் அறிந்துகொள்வேன். வெவ்வேறு இடங்களில் துடிப்பு ஏற்படும்... இனி ஒருபோதும் அவிசுவாசிக்க வேண்டாம். செய்தி அனைத்தையும் விசுவாசியுங்கள். வேதத்தில் அது காணப்படாவிட்டால், அதை விசுவாசிக்க வேண்டாம். ஆனால் அது வேதத்தில் இருந்தால், நான் விசுவாசிக்கும்போது கிரியைகளை நடப்பிக்க, நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் கடமைப்பட்டிருக்கிறார். அது சரியா? பாருங்கள்? பாருங்கள்? அது கடினமென்று எனக்குத் தெரியும்... ஆனால் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது. (சபையோர் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). 118நமக்கு கிடைப்பதற்கென அவர் மரித்ததும் ஒரு கடினமான செயல்தான். கல்வாரிக்குச் செல்ல அவருக்கு கடினமாகத்தான் இருந்தது. அவருக்குப் போக மனமில்லாமல், முடிவில் “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது'' என்று கதறினார். பாருங்கள்? பாருங்கள்? அவர் ஒரு வாலிபன். எனவே மரிக்க அவருக்கு மனதில்லாதிருந்தது. அவருக்குச் சகோதரர் இருந்தனர். நான் உங்களை நேசிப்பது போல. அவரும் அவர்களை நேசித்தார். அவரும் பிழைத்து நாமும் பிழைக்க முடியாது. எனவே நாம் பிழைக்கும்படி அவர் மரித்தார். அது ஒரு எளிதான செயலல்ல. ஆனால் அவர் அதை செய்ய வேண்டியிருந்தது. எப்படிப்பட்ட ஒரு மரணம் அவருக்கு முன்னால் இருந்தது என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். ''பிதாவே, அந்த வேளை வந்துவிட்டது. இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படி வேண்டுதல் செய்வேனா? இல்லை'' அவர் அப்படிச் செய்ய விரும்பவில்லை. தேவனுடைய சித்தம் நிறைவேறவே அவர் விரும்பினார். 119அதே காரியத்தை நீங்களும் விசுவாசித்தால் அதை அவிசுவாசிக்க வேண்டாம். அதை முற்றிலுமாக விசுவாசியுங்கள். சந்தேகப்பட வேண்டாம். விசுவாசியுங்கள். நான் ஜனங்களை ஜெப வரிசையில் நிறுத்தி, ''இந்த நபரை எனக்குத் தெரியாது என்பது உங்களுக்குத் தெரியும்'' என்று கூறுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். “ஆம், சகோதரன் பிரான்ஹாமே, உங்களுக்குத் தெரியாது” என்பீர்கள். ஆனால் அங்கு அமர்ந்திருப்பவர் யாராவது ஒருவர், “ஜெப அட்டையில் எழுதியுள்ளதை தான் அவர் படிக்கிறார். அது மனோவசியம் (Telepathy)” என்று கூறினால், அது விசுவாசத்தைக் குலைத்துவிடும். ''சரி, இந்த ஞாயிறு நான் ஜெப அட்டையைக் கொடுக்கப் போவதில்லை. இதுவரை இங்கு வராத அன்னியர் யாராகிலும் இங்கிருந்தால் எழுந்து நிற்கவும் என்று கூறினால், பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய சிந்தனைகளைப் பகுத்தறிந்து கூறுகிறார். அது சரியா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) இவ்விரண்டையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள். “அதில் ஏதோ தவறுள்ளது” என்று சிலர் கூறுகின்றனர். பாருங்கள்? பாருங்கள்? ஆனால் அவருடைய சிந்தனைகளில் உள்ளவைகளைப் பகுத்தறிந்து கூற வேறு வழி எதுவுமில்லையே பிசாசு உங்களை உரிமையாக்கிக் கொண்டால், உங்களை எதை வேண்டுமானாலும் அவன் நம்பச் செய்வான்; என்னிலுள்ள தவறுகளை உங்களுக்கு எடுத்துக்காட்ட அவன் முற்படுவான். உங்களுக்குக் காண்பிப்பதற்கு என்னிடம் நிறைய தவறுகளுண்டு. ஆனால் அவைகளின் பேரில் கவனம் செலுத்த வேண்டாம். நான் ஒரு மனிதன். பாருங்கள்? ஆனால் தேவனுடைய வார்த்தை சத்தியமென்றும், அதினால் நான் வாழ முயற்சிக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 120நான் இங்கிருந்து சென்று தவறான செயல்களில் ஈடுபட்டு, பாவம் செய்து, மதுஅருந்தி, புகை பிடித்து - இப்படிப்பட்ட தவறான காரியங்களைச் செய்திருந்தால், எனக்குத் தெரியப்படுத்துங்கள். அப்படியானால் நான் இவ்வுலகை விட்டே சென்றுவிடுகிறேன். அத்தகைய செயல்களில் ஈடுபடும் நிலையைடையும் முன்பே இவ்வுலகை விட்டுச் சென்றுவிட விரும்புகிறேன். பாருங்கள்? அவ்வித காரியங்களைச் செய்ய எனக்கு விருப்பமில்லை. நான் சரியானவைகளைக் கடைபிடித்து, ஒரு கிறிஸ்தவன் வாழவேண்டிய பிரகாரம் வாழ்ந்து வரும் வரைக்கும், தேவன் தாமே, தமது வார்த்தையை எடுத்துக்கொண்டு அதன்படி நான் வாழ உதவி புரிவாராக! அதன் விளைவாக நான் அநேக நண்பர்களை இழந்து, உலகத்தின் புகழை இழந்து, அநேகரால் வெறுக்கப்பட்டு, ஸ்தானபங்களால் உதைத்து வெளியே தள்ளப்பட்டாலும், தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாயிருக்கவே நான் விரும்புகிறேன். அது தேவனுடைய வார்த்தை. நான் தேவனை நேசிக்கிறேன். எனவே அது தேவனுடைய வார்த்தை. ''அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர். அவர் இப்பொழுது நமக்குள் இருக்கிறார்“ என்பதை உங்களிடம் கூற விரும்புகிறேன்.... 121ஷேக்ஸ்பியரின் ஜீவன் எனக்குள் வாசம் செய்தால், நான் ஷேக்ஸ்பியரின் கிரியைகளைச் செய்வேன் அல்லவா? அவ்வாறே பீதோவன் எனக்குள் இருந்தால், நான் பீதோவனின் கிரியைகளைச் செய்யமாட்டேனா? ஜான் டில்லிங்கர் (John Dillinger) எனக்குள் இருந்தால், நானும் ஜான் டில்லிங்கர் போன்று இருப்பேன் அல்லவா? காஸ்ட்ரோ (Castro) எனக்குள் இருந்தால், நான் காஸ்ட்ரோவைப் போல் இருப்பேன் அல்லவா? அது போன்று இயேசு கிறிஸ்து எனக்குள் வாசம் செய்தால், அவர் செய்த கிரியைகளை நானும் செய்வேன். ஏனெனில் அவரே கிரியை செய்பவராயிருக்கிறார். அவ்வாறே சம்பவிக்கும் என்று அவர் கூறியுள்ளார் அல்லவா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). 122அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராக இருந்து, இன்று நம் முன்னால் அவர் நின்று கொண்டிருந்தால், அவர் என்ன செய்வார்? அவர், “என் பிதா எனக்குக் காண்பிப்பதை மாத்திரமே நான் செய்வேன்'' என்று கூறியிருப்பார். அது சரியா? சரி, அப்படித் தான் அவர் நேற்று (முன் காலத்தில்) செய்தார். அவர் மாறாதவர் தானே? வியாதியைக் குறித்தென்ன? உன் கிரயத்தை அவர் ஏற்கனவே செலுத்தி தீர்த்துவிட்டார். நீங்கள் ஒவ்வொருவரும் ஏற்கனவே உங்கள் வியாதி நீங்கி சுகம் பெற்றுவிட்டீர்கள். அது சரியா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). நீங்கள் ஒவ்வொருவரும் மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள். ஆனால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் சுகமடைந்துவிட்டீர்கள். ஆனால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபிக்க; அவர் இன்று உங்கள் முன்னிலையில் நின்று கொண்டிருப்பாரானால், நீங்கள் அவிசுவாசம் கொண்டவர்களாயிருந்தால், அவர் உங்களை சுகப்படுத்தவே முடியாது. நீங்கள் இப்பொழுது விசுவாசிப்பது போன்று எப்பொழுதும் விசுவாசிக்க வேண்டும். இயேசு அவருடைய காலத்தில், ஜனங்களிடையே காணப்பட்ட அவிசுவாசத்தின் காரணத்தால், அநேக மகத்தான கிரியைகளைச் செய்ய முடியவில்லை. அதுசரியா? இன்றைக்கும் அவர் அவிசுவாசத்தின் காரணத்தால் அநேக மகத்தான கிரியைகளைச் செய்ய முடிகிறதில்லை. 123யார் அந்த நிலையை முன்னறிவித்தது? தேவன் அதை கூறினது யார்? அதைச் செய்தது யார்? தேவன். யார் அந்த கரடி, மான் அங்கு இருக்குமென்றும், அந்த ஏழு... நடந்த யாவற்றையும் முன்னறிவித்தது யார்? அதை கூறினது யார்? நமக்குள் இருக்கும் கிறிஸ்து, நமது மூலம் தீர்க்கதரிசனம் உரைத்து, அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் என்று தம்மை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். யார் காற்றை நிறுத்தினது? அந்த அணில்களை சிருஷ்டித்தது யார்? ஆபிரகாமுக்கு ஒரு ஆட்டுக் கடாவை சிருஷ்டித்து அளித்த அதே தேவன். ஆபிரகாம் அவரை 'யேகோவாயீரே' என்றழைத்தான். அந்த மீட்பின் நாமங்கள் இன்றைக்கும் அவருக்குப் பொருந்தும். அவர் இன்றும் 'யேகோவாயீரே'வாக அதாவது, “கர்த்தர் தமக்காக ஒரு பலியை ஆயத்தம் செய்யக் கூடியவராயிருக்கிறார்” என்பதாக அவர் இருக்கிறார். 124நீங்கள் ஒவ்வொருவரும் - உங்களுடைய ஆழமான உத்தமம் எனக்குத் தேவை. நீங்கள் இருதயப் பூர்வமாக விசுவாசிப்பீர்களானால் இன்னும் ஐந்து நிமிடத்திற்குள் நமது மத்தியில் பலவீனமான ஒருவராவது இருக்கமுடியாது. நீங்கள் விசுவாசித்தால், சுகம் பெற்று எழுந்திருந்திராத ஒருவராவது இங்கு இருக்க முடியாது. உங்களால் விசுவாசிக்கக் கூடுமா? இப்பொழுது அவர் நம்மிடையே வந்து தம்மை வெளிப்படுத்துவாரா என்று பார்க்கலாம். நாம் தலைவணங்குவோம். கர்த்தராகிய இயேசுவே, எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே, எனக்குத் தெரிந்த மட்டும் உமக்குக் கீழ்ப்படிவேன். என் பாவங்களையும் அக்கிரமங்களையும் மன்னித்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 125இந்த பக்கத்திலுள்ள ஒருவரை நாம் தெரிந்து கொள்வோம். விசுவாசியுங்கள். சந்தேகம் கொள்ளாதீர்கள். கூடுமானவரை, என்னைத் தெரியாத ஒருவரை நாம் தெரிந்து கொள்வோம். அந்த தரிசனம் எங்கு செல்கின்றது என்று என்னால் கூற இயலாது. அதை நான் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அது அவ்விதம் சென்றால், அது உண்மையாயிருக்க வேண்டும். அது அவ்விதம் சென்றால் அது உண்மையா இல்லையாவென்று அறிந்து கொள்வீர்கள். நீங்கள் விசுவாசித்துக் கொண்டேயிருங்கள். சந்தேகப்பட வேண்டாம். அவர் அதைச் செய்தால், அதைக் கண்ட பிறகாவது நீங்கள் நம்புவீர்களா? உங்கள் சுகத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ''ஆண்டவரே, இப்பொழுது நான் இயேசு கிறிஸ்துவைத் தொடுகிறேன். நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறுங்கள். பரலோகத்திலுள்ள தேவன் தாமே அதை அருள்வாராக! உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் - கிறிஸ்து - பெரியவர். இந்தக் கூட்டத்தில் நாம் அவரைத் தொடும்போது, அவர் தம்மைப் பிரதிபலித்துக் காண்பிக்கிறார். அவ்வாறே வேதத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின் மூலமாக தேவனைத் தொட்டபோதும், அவளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர் தம்மை பிரதிபலித்தார். 126இந்த மூலையில் ஒரு மனிதனைக் காண்கிறேன். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் வியாதிப்பட்டிருக்கிறார். அதுவல்ல, ஒரு மனிதனுக்காக ஒரு ஸ்திரீ ஜெபம் செய்துக் கொண்டிருக்கிறாள். அந்த மனிதன் இங்கில்லை. அவர் அந்த ஸ்திரீயின் தகப்பனார். அவர் புற்று நோயினால் ஆபத்தான நிலையில் மரிக்கும் தருவாயில் இருக்கிறார். (சகோ. பிரான்ஹாம் பேச்சை சற்று நிறுத்துகிறார் - ஆசி) அந்த மனிதன் இங்கில்லை. அவர் வேறிடத்தில் இருக்கிறார். (சகோ. பிரான்ஹாம் பேச்சை சற்று நிறுத்துகிறார் - ஆசி). அவர் ஜார்ஜியாவில் இருக்கிறார். ஜெபித்துக் கொண்டேயிருங்கள். (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). உங்கள் இருதயப் பூர்வமாக இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? எனக்காகவும் ஜெபித்துக் கொண்டேயிருங்கள். ஜெபம் செய்து கொண்டிருக்கும் ஸ்திரீயின் பெயர் திருமதி ஜார்டன். அவர்கள் ஜார்ஜியாவைச் சேர்ந்தவர்களல்ல. அவர்கள் வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர்கள். நான் கூறுவது உண்மையானால், சீமாட்டியே, எழுந்து நில்லுங்கள். சரி. எல்லாம் உண்மை. (சகோதரி ''கர்த்தருக்கு நன்றி'' என்கிறார்கள் - ஆசி). நீங்கள் அதற்காகத்தானே ஜெபம் செய்து கொண்டிருந்தீர்கள்? (ஆம் ஐயா என் தந்தை என்று சகோதரி கூறுகிறார்கள்). சரி, சரி, ''உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்'' என்று விசுவாசிக்கின்றீர்களா? (நான் விசுவாசிக்கிறேன் என்று கூறுகிறார்கள்). 127இங்கு வேறொன்று... நீங்கள் முன் நாட்களில் பெரிய பயிற்சி பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் ஏதோ கோட்பாடுகளைப் பின்பற்றி அதனால் குழப்பமடைந்திருக்கின்றீர்கள். உங்கள் தகப்பனார் ஸ்தாபனத்தில் ஒரு போதகரா? அல்லது உங்கள் குடும்பத்தில் வேறு எவராவதா? (என் கணவர் என்று சகோதரி கூறுகிறார்கள்). அது உங்கள் கணவர். யாரோ ஒருவர் உங்கள் பக்கத்தில் நின்று கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதை நான் காண்கிறேன். நீங்கள் ஒரு ஸ்தாபனத்தில் இருந்தீர்கள். அவர் உங்களுடன் தொடர்பு கொண்டவர். சரி, அது உண்மை. அந்த அம்மாள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் தேவன் அவர்களை அறிவார். உங்கள் பாக்கெட் புத்தகத்தில், ஒரு சிறு கைக்குட்டை ஏதாகிலும் உண்டா? சரி, நீங்கள் அமர்ந்து, ஜெபம் செய்யும் போது உங்கள் கைகளை அந்த கைக்குட்டையின் மேல் வையுங்கள். சற்றும் சந்தேகப்பட வேண்டாம். உங்கள் தகப்பனாரைக் கொல்பவனைக் காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். உங்கள் விசுவாசத்தின்படியே ஆகக்கடவது. 128உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அந்த அம்மாளை எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரையில், அவர்களை சந்திப்பது இது தான் முதல் முறையென்று நினைக்கிறேன். அவர்கள் நம்பிக்கையற்ற நிலையில் ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள் பெரும்பாட்டைக் குறித்து அந்த ஸ்திரீயிடம் கூறின அதே தேவன் இப்பொழுது இங்கிருந்து கொண்டு, உங்களிலிருக்கிறவர் உலகத்தை ஜெயித்தவர் என்பதைக் காண்பித்துக் கொண்டு வருகிறார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் 'ஆமென்' என்கிறார்கள் - ஆசி). உங்களுக்கு விசுவாசமிருந்தால், சந்தேகப்படவே வேண்டாம். 129புற்று நோயைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, கறுத்த நிழலை நான் மறுபடியும் காண்கிறேன். அது அங்கு அமர்ந்திருக்கும் ஒரு ஸ்திரீயின் மேலுள்ளது. அவர்களுக்குத் தொண்டையில் புற்றுநோய் உள்ளது. அவர்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டுள்ளது. சுகத்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் முயற்சி செய்கிறார்கள். திருமதி பர்டன் (Mrs. Burton). நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால்... உண்மையாக அது... இதை நான் உங்களுக்கு விவரிக்க விரும்புகிறேன். நீங்கள் புற்றுநோயின் காரணமாக உங்கள் தொண்டையின் சத்தத்தை இழந்துவிட்டீர்கள். அதை மீண்டும் பெற்றுக் கொள்ள நீங்கள் ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அது சரியா? உங்கள் கையை இப்படி ஆட்டுங்கள். அந்த ஸ்திரீ எனக்கு ஒரு அன்னியர். அவர்களை எனக்கு முன்பு தெரியாது. அவர்களைப் பாருங்கள்? அது உண்மை. பாருங்கள். அதோ அவர்கள் அங்கே இருக்கிறார்கள். உங்கள் தொண்டையிலிருப்பவனைக் காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் - அவரைத் தொடக்கூடிய விசுவாசம் - உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றீர்களா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). 130சகோதரி லார்சன், உங்களை எனக்குத் தெரியும். அவர்கள் என் வீட்டு சொந்தக்காரர். சகோதரி லார்சன், நீங்கள் மருத்துவரிடம் சென்று வந்திருக்கின்றீர்கள். உங்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமாயுள்ளது. அது சரிதானே? உலகத்திலிருக்கிறவனிலும், சகோதரி லார்சன், உங்களிலிருக்கிறவர் பெரியவர். இயேசு, ''நான் அன்னியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள்“ என்றார். பாருங்கள்? ”இந்த என் சிறியரில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்'', ஓ, பரம பிதாவே, இரக்கமாயிரும். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? உங்களுக்கும் அறுவை சிகிச்சை அவசியமாயுள்ளது. நீங்கள் எனக்கு அன்னியர். அது சரியா? நீங்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர்களல்ல. (உங்களுக்கு என்னைத் தெரியும். ஆனால் எனக்கு உங்களைத் தெரியாது) தேவன் உங்களை அறிவார். அதை விசுவாசிக்கிறீர்களா? (ஆ, நான் விசுவாசிக்கிறேன்) நீங்கள் அறுவை சிகிச்சைக்காக ஆயத்தமாகின்றீர்கள். நீங்கள் இங்கு வசிப்பதில்லை. நீங்கள் ஸ்பிரிங்வில் (Springville) லிலுள்ள பெட்ஃபோர்ட் (Beedford) என்னுமிடத்திற்கு அருகாமையில் வசிக்கின்றீர்கள். திருமதி பர்டன்... உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். அந்த பெயரைக் கூற நான் நினைக்கவில்லை... திருமதி பார்க்கர் (Mrs. Parker), அதுதான் உங்கள் பெயர். அப்படித்தானே? உங்களைக் கொல்ல முயன்று கொண்டிருக்கும் வியாதியைக் காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றீர்களா? அப்படியானால் உங்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமிராது. 131சகோதரியே, இவையனைத்தும் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? உங்களுக்கு என்னைத் தெரியாது. நீங்கள் எனக்கு அன்னியர். நான் அவருடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? (சகோதரி “விசுவாசிக்கிறேன்” என்கிறார்கள் - ஆசி) நீங்கள் விசுவாசிக்கத்தான் வேண்டும். நன்றி, தேவன் அதை கெளரவிப்பார். உங்கள் பெயர் திருமதி வைட் (Mrs. White) நீங்கள் டெக்சாசிலுள்ள ஃபோர்ட் வர்த் (Fortworth) என்னுமிடத்திலிருந்து வருகிறீர்கள். உங்களுக்கு தசை சம்பந்தமான வியாதியொன்று உண்டு - நரம்பு தளர்ச்சி நிலை. நீங்கள் மோசமான நிலையில் இருக்கிறீர்கள். மருத்துவ விஞ்ஞானத்தைப் பொறுத்த வரையில் உங்களுக்கு நம்பிக்கை எதுவும் கிடையாது. உங்கள் கணவருக்கு ஆவிக்குரிய தேவையொன்றுண்டு. அதற்காக அவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு மூளை கோளாறும் இருதய நோயும் இருக்கின்றது. அவனுடைய மடியில் ஒரு சிறு பையன் அமர்ந்திருக்கிறான். அவனுக்குப் பேச்சில் ஏதோ கோளாறு உள்ளது. அதற்கு நீங்கள், ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் கூறினது உண்மையானால், உங்கள் கையையுயர்த்துங்கள். (கணவர் “எங்கள் தேவைகள் இவைதாம்'' என்கிறார்). ''உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அதை நீங்கள் நம்புகின்றீர்களா? அவ்வாறு உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றீர்களா? நாம் தலைவணங்குவோம். 132அவர் கட்டிடத்தின் வழியாக கடந்து சென்றார். அவர் தேவனென்று உங்களுக்கு நிரூபித்துக் காண்பித்தார். ''உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்''. அவர் தேவனாகிய கர்த்தர். உங்களிலிருக்கிறவர் எல்லாவற்றிலும் முதன்மையாயிருப்பாராக! இப்பொழுதே உங்கள் இருதயத்தில், கூடுமானால் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, “என் சரீரத்திலுள்ள வியாதி அகன்றுவிட்டது'' என்று கூறுங்கள். பாருங்கள்? ”இனிமேல் நான் அவதியுறுவதில்லை. எனக்கு இனிமேல் வியாதியில்லை. என் சரீரத்திலுள்ள வியாதியைக் காட்டிலும் என்னிலிருப்பவர் பெரியவர். என் மாமிசத்திலிருப்பவனிலும் என் இருதயத்திலிருப்பவர் பெரியவர். என் இருதயத்திலிருப்பவர் வானத்தையும் பூமியையும் படைத்த சிருஷ்டிகர்த்தர். சாத்தானால் என் மாமிசம் கறைபட்டுள்ளது. நானோ பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்யும் ஆலயமாக இருக்கிறேன். எனவே சாத்தானே, என் சரீரத்தை விட்டுப் போகும்படி உனக்கு கட்டளையிடுகிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே என்னை விட்டு வெளியே வா என்று சொல்லுங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களுக்காக ஜெபிக்கப் போகும் இத்தருணத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு விருப்பமான முறையில் ஜெபம் செய்யுங்கள். 133சர்வ வல்லமையுள்ள தேவனே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, ஜீவனின் அதிகாரணரே, இருதயத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்துபவரே, “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபி. 4:12) என்று நீர் சொல்லியிருக்கிறீர். அதனால் தான், வார்த்தை மாமிசமான போது, அவருடைய சிந்தனைகளை அவர் பகுத்தறிந்து, அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்பதை அவரால் அறிந்து கொள்ள முடிந்தது. அவர் வார்த்தையாயிருந்தார். அந்த வார்த்தை இருதயங்களிலுள்ள இரகசியங்களை அறிந்து கொண்டது. அந்த வார்த்தை இன்றைக்கும் அதே வார்த்தையாகவே இருந்து வருகிறது. இன்றிரவு அது, இரண்டாயிரம் ஆண்டுகட்குப் பின்பு, எங்களில் வெளிப்படுவதை நாங்கள் காண்கிறோம். அவர் அவ்வாறு காகிதத்தில் (வேதாகமத்தில்) எழுதி வைத்தார். அது உண்மையென்று இப்பொழுது இங்கு நிரூபித்துவருகிறார். இங்கு உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. வியாதியஸ்தர் எல்லாவிடங்களிலும் இருக்கின்றனர். இங்கு பிரசன்னராயிருந்து, இவைகளனைத்தையும் காண்பித்து, இவைகளனைத்தையும் எடுத்துக் கூறி, எப்பொழுதும் தவறாமல் சரியானதையே எடுத்துக் கூறும் அந்த பரிசுத்த ஆவியானவர் - அவர் ஒருமுறை கூட தவறினதில்லை. ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார் - இந்த உறுமால்களை அபிஷேகித்து, அது எந்த வியாதியஸ்தர் மேல் வைக்கப்படுகின்றதோ அவர்கள் அனைவரும் சுகமடைய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அந்த ஜீவனுள்ள தேவன் இரண்டாயிரம் ஆண்டுகட்குப் பின்பும், கிருபையினாலும் விசுவாசத்தினாலும் மீட்கப்பட்ட பாவிகளின் இருதயத்தில் வாசம் செய்து, மரணத்துக்குரிய உதடுகளின் மூலம் தமது சொந்த வார்த்தைகளைப் பேசி, அவர் வாக்களித்தபடியே நிறைவேறி வருவதைக் கவனித்துக் கொண்டு வருகிறார். 134ஓ, ஆண்டவராகிய கர்த்தாவே, எங்கள் மேல் இரக்கமாயிருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். இங்கு வியாதிப்பட்டு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் - மோசே ஜனங்களுக்காக தாழ விழுந்து உம்மிடம் கெஞ்சினது போல, ஆண்டவரே, நானும் என் இருதயத்தை உமக்கு முன்பாக வைக்கிறேன். உம் பேரில் எனக்குள்ள எல்லா விசுவாசத்தைக் கொண்டும், நீர் எனக்குத் தந்தருளினவைகளை நான் அவர்களுக்குத் தருகிறேன். பேதுரு அலங்கார வாசலண்டையில், “என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன், நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே நீ எழுந்து நட” என்று கூறினான். அந்த மனிதன் முடவனாயிருந்தான். அவன் சற்று நேரம் பெலவீனமாயிருந்தான். ஆனால் பேதுரு அவன் கையைப் பிடித்து தூக்கிவிட்டவுடனே, அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டன. அவன் நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக் கொண்டு, தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். நீர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறீர். உமது அப்போஸ்தலர்கள் “என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்'' என்றனர். அது தான் விசுவாசம். நானும் இவ்விதமாய் இப்பொழுது கூறுகிறேன். ”என்னிடத்திலுள்ளதை இங்குள்ளவர்களுக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, உங்கள் வியாதிகளை அகற்றுகிறேன். ஏனெனில் உங்கள் உயிரை எடுத்துக்கொள்ள முயலும் பிசாசானவனைக் காட்டிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். நீங்கள் மீட்கப்பட்டவர்கள். சாத்தான் ஜனங்களை விட்டுப் போகும்படி கட்டளையிடுகிறேன். அன்றொரு நாள் புயலைத் திரும்பிப் போகும்படி செய்த தேவன், காற்றையும் கடலையும் அமரப்பண்ணிய தேவன், இந்த ஜனங்களில் காணப்படும் வியாதியாவையும் அகற்றி, இந்நேரத்தில் கிறிஸ்துவின் வல்லமை அவர்களில் விளங்கப் பண்ணும்படி செய்வாராக! ஒவ்வொரு பாவியும் மனந்திரும்பட்டும். உமக்கு அருகாமையில் வந்திராத ஒவ்வொருவரும் இந்நேரமே தங்களைச் சரிசெய்து கொள்ளட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அப்படியே நிறைவேறுவதாக! 135உங்கள் போதகரும், சகோதரனும் என்ற முறையில், எனக்குள்ள விசுவாசம் எல்லாவற்றைக் கொண்டும், இதை உங்கள் மேல் வைக்க நான் தேவனிடம் வேண்டிக் கொண்டேன். நான் கேட்டதைப் பெற்றுக் கொள்வேன் என்று விசுவாசிக்கிறேன். நீங்களும் என்னுடன் சேர்ந்து அவ்வாறே விசுவாசித்தால், எனக்குள்ள விசுவாசத்தை இந்நேரத்தில் உங்களுக்குத் தருகிறேன். இப்பொழுது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் வியாதிகளை அப்புறப்படுத்துங்கள். அதனிடம், ''நீ போகத்தான் வேண்டும்'' என்று சொல்லுங்கள். ஏனெனில் உங்களிடம் உங்கள் சொந்த விசுவாசமும், அதனுடன் சேர்ந்து என் விசுவாசமும் உள்ளது. மாத்திரமின்றி, இயேசு கிறிஸ்துவின் வல்லமையும் இங்கு பிரசன்னமாயிருந்து, அவருடைய பிரசன்னத்தை நிரூபித்துக் கொண்டு வருகிறது. அது இந்நேரத்தில் உங்களைச் சுகமாக்கும். கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் அம்மாளே, அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? (சகோதரி அது சரி என்கிறார்கள் - ஆசி) உங்கள் தசைகள் வியாதியால் பெலனற்றிருந்தாலும், நீங்கள் முயன்றால் எழுந்து நடக்கலாம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எழுந்து நில்லுங்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அதோ அவர்கள் நடந்து செல்கின்றார்கள். நீங்கள் விசுவாசிப்பதில்லையா? மற்றவர்கள் எழுந்து நின்று உங்கள் வியாதிகளை அப்புறப்படுத்துங்கள். விசுவாசியுங்கள் அவர்களுடைய கால்கள் பெலன் கொண்டன. இப்பொழுது நாம் கரங்களையுயர்த்தி அவருக்குத் துதியை ஏறெடுப்போமாக! யெகோவா தேவனுக்கு ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகம் பெற இவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்.